அம்மா கவிதை



அம்மா கவிதை

தாய்மை


ஈரைந்து திங்கள் 
இன்பமுடன் எனை
மடியினில் சுமந்தவளே !

உனதுறுப்பை பிளந்து
உதிரத்துடன் உயிர் நோக
எனை ஈன்றவளே !

பசியறிந்து
இரத்தத்தை 
பாலாக்கி
பருகச் 
செய்தவளே !

என் சிறு அசைவையும்
சிரத்தையுடன் கண்டு 
ரசித்தவளே !

சிறு பிள்ளைத்தனமாய்
நான் கேட்கும் கேள்விக்கெல்லாம்
சிரித்துக் கொண்டே
விடை பகா்ந்தவளே !

பள்ளி செல்லும் 
முதல் நாளில்
மிரட்சியுடன் 
நான் செல்லும் காட்சிகண்டு 
ஆனந்தத்தில் திளைத்தவளே !

பருவ வயதினிலே
குறும்புக்கார ஹாா்மோன் 
கள்வனை
கட்டுக்குள் 
வைக்க 
கற்றுக் கொடுத்தவளே !

தன்னம்பிக்கையுடன்
தரணியிலே வெற்றிக்கனி 
நான்! 
பறிக்க 

வேராய் . . .
விழுதாய் . . .
மரமாய் . . .

எனைத்தாங்கி நிற்பவளே !
என்தாயே !

உன்னையன்றி
நான் தொழவே . . .

வேறு தெய்வம்
இல்லையம்மா !
ஈரேழுலகத்திலும் . . .!
          
-ரேணுகா ஸ்டாலின்

0/Post a Comment/Comments