காதல் கவிதைகள்-ரேணுகா ஸ்டாலின்











காதல் கவிதைகள்


சிறகடிக்கும்
என் சிறகொடித்து
சிற்றின்பம் காணும்
சிந்தை தான்
உன் காதலென்றால்
காதலிசம் 
வேண்டாமடா எனக்கு
மோதலிசத்துடன் 
முற்றுப் பெறட்டும்
நம் காதல் . . !

 

#யாதுமானவன்_நீயடா


கண்களில் நீயே
கருத்தினில் நீயே/

கரம்பற்றத் துடித்திடும்
கண்ணாளனும் நீயே/

மங்கையென் மனதினுள்
மஞ்சமிட்டுத் துஞ்சிடும்/

மான்விழி மயக்கிய
மாயவனும் நீயே/

சோகங்கள் தீண்டிடா
மகிழ்வாழ்வு அளித்திடும்/

ராமனவன் சாயலினில்
என்ரட்சகனும் நீயே/

ஊனோடு உயிராக
உதிரத்தில் கலந்தே/

உறக்கத்திலும் என்னுள்
உறைந்தவனும் நீயே/

அகிலத்து அழகியென
அன்போடு அரவணைத்து/

ஆனந்தம் தந்திடும்
யாதுமானவனும் நீயே/

    *ரேணுகா ஸ்டாலின்*

#இடைச்சொல்_போட்டி

அன்பால் இணைந்து 
ஆனந்தம் கொண்டோம்/

இல்லறம் நல்லறமாக
இன்பம்பல கண்டோம்/

#கனிந்திட்ட_காதலே
காலங்கள் தோறுமே/

கரம்கோர்த்து நித்தமே
தொடர்ந்திட வேண்டியே/

இறையருள் இருவருக்கும்
வரமாக வேண்டுமே/

     *ரேணுகா ஸ்டாலின்*


காதல் கவிதை-மாயக்கண்ணா


சில மௌனங்களால்
         நல்வழிகள் பிறக்கும்
         வாழ்க்கை சிறக்கும் . . !
சில மௌனங்களால்
         தடைகள் வந்து
   வாழ்க்கை தடங்கள் மாறும் . . !
சில மௌனங்களால்
         கவலைகள் மறந்து
         களிப்புறத் தோன்றும் . . !
இப்படியாக மௌனங்கள்
      பல ரகமாக உள்ள போதுமே
           உந்தன் மௌனமோ!!!
      இவ்வெதிலும் சேராமல்
      என் உயிர் கொள்/ல்வதையே                    
             குறிக்கோளாக      
        கொண்டுள்ளதேனடா . . !
            என் மாயக் கண்ணா . . !

                  ரேணுகா ஸ்டாலின்✍ 

0/Post a Comment/Comments