காதல் கவிதை
இதமாக வீசும்
இளந் தென்றல் காற்றோ
மேனியெங்கும் தீண்ட
உழைத்து களைத்து
வியர்க்க விறுவிறுக்க
வீடிதிரும்பும் என்னவன்
கரங்களில் இருந்த
வாழை இலையில்
வைத்துக் கட்டியும்
வாசல் தொட்டதும்
நாசி யெங்கும் நுழைந்து
நறுமணம் வீசும்
மதுரை மல்லிப் பூவும்
நெய் வாசம் மணக்க மணக்க
பை நிறைய வாங்கி வந்த
லாலா கடை அல்வாவும்
கொஞ்சமும் என் மனதை
மயக்குவதில்லை
என் மாமனவன் வியர்வை
வாசத்தினைப் போலே ..!
கணவன் அமைவதெல்லாம்
மாயக் கண்ணன் அருளாலே ..!
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment