SPB ஓர் சகாப்தம்
50 ஆண்டு காலமாக
திரைத்துரையில் பிரகாசித்தவர் ..!
40 ஆயிரம் பாடல்களுக்கு மேல்
பாடல்கள் பாடியவர் ..!
விருதுகளே பெருமை கொள்ளும்
வியத்தகு விந்தை மனிதர் ..!
வாட்டமான நெஞ்சையும்
வசியப்படுத்தி
வசீகரிக்கும் குரலுடையவர் ..!
தனிமைத் துயர் போக்கும்
தன்னிகரில்லா தனித்தமிழ் ..!
விழித்திரை தொட மறுத்து
விலகி நிற்கும் உறக்கத்தை
தன் மந்திரக் குரலால்
வசியப்படுத்தி
நம் வசமாக்கித் தரும்
வசியக்காரர் ..!
மன அழுத்தம் போக்கி
மன நிறைவைத் தரும்
மாமருந்து இவர் ..!
பிணிகள் பலவற்றால்
பின்னப்பட்ட இவ்வுலகில்
கவலைப் பிணி
நீக்கப் பிறந்த
ஆகச் சிறந்த மருத்துவர் ..!
வடைசுடும் பாட்டிக்குப் பின்
நிலவை ரசித்து
மெய் மறக்கச் செய்திட
மண்ணில் பிறந்த
மகத்தானவர் ..!
பேரறிஞர் அண்ணாவுக்குப்
பின் SPB என்னும்
மூன்றெழுத்தின்
அடையாளமானவர் ..!
SPB சாதாரண மனிதரல்ல
சதா ரணப்பட்ட மனதையும்
சந்தோசப்படுத்தும்
சாதனையாளர் ..!
அகிலம் உள்ள வரை
நம் அனைவர் நெஞ்சிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
பாட்டுநிலா பாலு அவர்களின்
உயிர் பிரிந்தாலும்
நம் உள்ளங்களில் வாழ்ந்து
கொண்டுதான் இருப்பார் ..!
நம் வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நொடியிலும்
வழித்துணையாய்
அவர் குரலே நம் சுவாசமாய் ..!
அன்றும் இன்றும் என்றென்றும் ..!
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment