கொல்லத் துடிக்குது மனசு (தொடர் கதை)
பகுதி - 1
*அழகாக இளந்தென்றல் வீசும் அதிகாலைப் பொழுது".
"குளித்து முடித்து ஈரம் சொட்டும் கூந்தலுடன் தலையில் பூத்துவாலை கட்டிக் கொண்டு கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் சஞ்சனா*. அங்கு வந்த *அவளின் நாத்தனார் சரோஜா, என்ன அண்ணி கோலம் போடுறீகளாக்கும்" என்று கிண்டலடித்தவாறே உள் நுழைந்தாள்.
*நிமிர்ந்து அவளைப் பார்த்து புன்முறுவலுடன் மீண்டும் கோலம் போடத் தொடங்கினாள் சஞ்சனா*. கோலம் போட்டு முடித்தவள் டீ போட்டு எடுத்துக் கொண்டு சரோஜாவிடம் ஒரு டம்ளரைக் கொடுத்துவிட்டு, கணவன் சத்யாவை எழுப்பச் சென்றாள்.
"சத்யா எழுந்திரிங்க இன்னைக்கு பாலம் கட்டுற டென்டர் விசயமா நாராயணன் சார பார்க்கணும்னு சொன்னீங்களே எழுந்திரிங்க என்றால் கொஞ்சலாக".
"அடியே அறிவு கெட்டவளே இப்படி கொஞ்சினா நான் எப்டிடி எழுந்துக்கறது என சஞ்சனாவின் இடுப்பில் கிள்ளியவாரே கண்சிமிட்டியபடி கண்விழித்தான் சத்யா".
"ஐயோ சத்யா டைம் ஆச்சு பாட்டிக்கு சாப்பாடு ரெடி பண்ணனும், உங்களுக்கு தேவையானத எடுத்து வைக்கணும், துவைக்கணும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கு என எழுப்பிவிட்டு" அவன் கைகளுக்கு சிக்காமல் சிட்டாய்ப் பறந்து சென்றாள்.
அனைவரும் தத்தம் வேலைகளுக்கு கிளம்பிச் செல்ல, துணிகளைத் துவைக்க மோட்டார் போட்டவள் தண்ணீர் வராமல் போகவே மோட்டார் ரிப்போரா, "அடடா டேங்க்லயும் தண்ணி ஏத்தாம விட்டுட்டனே என சலித்துக் கொண்டாள். சட்டென ஏதோ நினைவு வந்தவளாய் வீட்டின் பின்புறம் சற்று தள்ளியுள்ள கிணற்றருகே செல்ல முற்பட்டாள்".
"கால்களில் ஏதோ இடர விரலில் அடிபட்டு இரத்தம் சொட்ட ஆரம்பித்தது". அதைப் பொருட்படுத்தாது கிணற்றின் பக்கம் செல்ல அடியெடுத்து வைத்தவளை, "அடியே சஞ்சனா என்ற குரல் தடுத்து நிறுத்தியது".
"அடியே எங்கடி போறவ என்று கேட்ட சரோஜாவிடம் இல்ல அண்ணி மோட்டார் ரிப்பேர்அதனாலதான் அந்த கிணத்துல தண்ணி எடுக்கலாமானு பார்க்க வந்தேன் என்றாள்".
"கிணற்றுக்கும் சஞ்சனாவிற்குமான தூரம் ஒருசில அடிகளே இருக்க", கிணற்றைப் பார்த்த சஞ்சனா "ஏன் அண்ணி கிணறு மூடியிருக்கு திறந்தா தண்ணி எடுக்கலாமே என்றாள்" பின்விளைவை அறியாத அப்பாவியாய்.
"அவள் கைகளை பிடித்து உள்ளே இழுத்துச் சென்ற சரோஜா, அடியே கூறுகெட்டவளே நான்தான் இங்க வந்தப்பவே அந்த கெணத்தான்ட போகாதடினு சொன்னனே ஏன்டி போன என்றாள்".
"குழப்பத்துடன் நின்றிருந்த சஞ்சனாவின் கைகளைப் பற்றிய சரோஜா சரிவா தாயி குழம்பாத உன்கிட்ட சொன்னாதான் நீ அந்த கெணத்துப் பக்கம் இனிமே போகமாட்ட என சொல்லிக் கொண்டே சில மாதங்களுக்கு முன் நடந்த கதையைக் கூற ஆரம்பித்தாள்".
தொடரும்,
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment