வியாபாரக் கல்வி
"என்னங்க பாப்பாவ பள்ளிக்கூடத்துல சேர்க்கணும் நினைப்பிருக்கா இல்லையா..!"
"இருக்குடி நீ சொன்ன அந்த பள்ளிக்கூடத்தில சேர்க்கணும்னா
பணம் வேண்டாமா ஒருவாரம் பொறு சேர்க்கலாம்" என்றுவிட்டு பணிக்குச் சென்றான் சத்யா.
ஒருவார காலம் ஒருநிமிடம் போல
கடந்து போனது.
"சஞ்சனா சீக்கிரம் கிளம்புமா அந்த ஸ்கூல்ல சேர்க்க அவனவன் பள்ளிக்கூட வாசல்லயே கெடயா கெடக்குறான்" என்று சத்யா முணுமுணுக்க.
"இதோ வரேங்க" என்று அறையிலிருந்து வெளிப்பட்ட சஞ்சனா டிவியை ஆப் செய்ய சென்றாள்.
அந்த நேரத்தில் தலைப்புச் செய்திகள் நமது நாட்டில் கல்விக் கட்டண கொள்ளையால் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அந்த வரிசையில் இன்று பள்ளிக்கட்டணம் செலுத்த சொல்லி பள்ளி நிர்வாகம் செய்த தொடர் தொந்தரவுகளால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
இச்சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சஞ்சனா தன் மகளை சேர்ப்பதற்காக முடிவெடுத்திருந்த பள்ளியைப் பற்றிய செய்தி வந்து கொண்டிருந்தது.
அதைக் கேட்டு சற்று தடுமாறித்தான் போனார்கள் சத்யா-சஞ்சனா தம்பதியர்.
அதிலும் அப்பள்ளி நிறுவனரின் அலட்சியப் போக்கான பதில் சஞ்சனாவின் மனதை கலங்கடித்து விட்டது.
தீவிர யோசனைகளுக்குப்பின் தன் வீட்டின் அருகிலுள்ள ஓர் பள்ளியில் rte scheme மூலம் கட்டணச்சலுகையுடன் சேர்த்து சிறப்பாக படிக்க வைத்தனர், மன மகிழ்வுடன்.
(கல்வி இன்று விலை பொருளாகிப் போனது நாம் ஆங்கில மோகத்தில் கட்டுண்டு கிடக்கும் வரை ஒரு பாடலில் சொன்னதைப் போல கலைமகளே தன் மகளை பள்ளியில் சேர்க்க சென்றாலும் வீணை விற்றுதான் வீடு திரும்புவாள் நாம் தான் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.)
அன்புடன்,
கல்விக் கொள்கையில் நல் மாற்றங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் சாதா"ரண" பிரஜை,
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment