சிறுகதை , திரில்லர் கதை

 "..என்ன வளம் இல்லை நம் நாட்டில்...??..."

(#சிறுகதை)

 


 குடிசைகள் நிறைந்த சேரிப் பகுதி.. வாய்க்கால் போல ட்ரைனேஜ் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது...

அந்த சேரியின் மத்தியில் ஒரே ஒரு ஓட்டு வீடு... 

அங்கே தான் தர்மன் இருக்கிறான்... 

கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தான் தர்மன்... 

முன்னால் மேஜையில் விலை உயர்ந்த விஸ்க்கி பாட்டில்... 

பக்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் ரெண்டு லார்ஜ் ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது...

அண்ணா.. உங்களை பார்க்க நம்ம தொகுதி எம் எல் ஏ வந்திருக்கார்... உதவியாளன் ராம் பவ்யமாக வந்து சொன்னான்..

வணக்கம் தர்மா... 

சொல்லிக்கொண்டே வந்து ஒரு நாற்காலியை அவரே இழுத்துப் போட்டு அமர்ந்தார்..

வாடா சடகோபா... உனக்கு சடை மட்டும் இருந்திருந்தா கையில வளையல் மாட்டி விட்டு இருப்பேன்.. 

ஏண்டா நாயே... உனக்கு அறிவு இருக்கா..? போன தடவ எத்தனை கஷ்டப்பட்டு... எவ்வளவு செலவு பண்ணி உன்னை ஜெயிக்க வெச்சேன்... ஜெயிச்சப்பறம் ஒரு தடவையாவது இந்த சேரிப்பக்கம் வந்திருக்கியா..??

அடுத்த மாசம் எலக்சன் வருதுனுட்டு தானே இப்ப வந்திருக்க..?? நான் வெளில நின்னு சும்மா கண்ணை காட்டினாலே போதும்.. ஜனங்க உன்னை அடிச்சே கொன்றுவாங்க.. எந்திரிச்சு வெளில போடா நாயே....

தர்மன் கோபமாக கத்தினான்... MLA சடகோபன் மிரண்டு போயி அமர்ந்து இருந்தார்... 

தர்மா... நீ இருக்கென்ற தைரியத்துல தான் நான் இருக்கேன்.. போன தடவை மாதிரி இந்த வாட்டியும் என்னை எப்படியாவது ஜெயிக்க வை.. போன தடவ ரெண்டு கோடி தந்தேன்,, இப்ப ஜெயிச்சிட்டேன்னா நாலு கோடி தர்ரேன்..

தர்மன் சிரித்தான்... விலைவாசி ஏறிடுச்சி.. ஆறு கோடி வேணும்.. 

சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்... 5 தர்ரேன்...

தர்மன் மீண்டும் கோபமாகி.... ஆறு கோடி தர்றதா இருந்தா உட்க்காந்து பேசு.. இல்லேன்னா எந்திரிச்சு பின்னாடி ஒட்டியிருக்கற மண்ணை தட்டி விட்டுட்டு போயிட்டே இரு.. 

சடகோபன் அமைதியாகி... "..சரி பாபா... ஆறு தர்றேன்.."

இப்போ சொன்னியே இது கரெக்ட்... விஸ்கி சாப்பிடு...

வேண்டாம் தர்மா.. இன்னொரு நாள் பாத்துக்கலாம்... நீ செய்ய போகிற உதவிய நான் என்னிக்குமே மறக்காம இருப்பேன்... எம்.எல்.ஏ மெதுவாக சொல்ல...

நீ உதவிய மறக்கலாம்... ஆனா என்னோட ஆறு கோடி மறந்துட்டன்னா .. நீ உனக்கே வாய்க்கரிசி போட வேண்டி வரும்... எந்திரிச்சு போ.. இல்லேன்னா என் துப்பாக்கி தான் பேசும்..


MLA சடகோபன் பயத்தோடு பயணம் மேற்கொண்டார்..


..................................................................................................


ராம் மறுபடியும் பவ்யனாக நின்றான் - இப்போ என்ன டா.


ஒரு பெரியவர் உங்கள பாக்கணும்னு ஆடம் பிடிக்கிறார் 

ஐயா, இது ஒரு குடும்ப பிரச்சனை .. தினமும் குடிச்சிட்டு வந்து அப்பாவி பொண்டாட்டியையும் பெத்த அம்மாவையும் அடிக்கிறான்... உதைக்கிறான் . 


இது உண்மைதானான்னு நீ விசாரிச்சியா,


உண்மை தாங்க எனக்கு நல்லா தெரியும்...''


அப்பறம் ஏண்டா இந்த சின்ன சின்ன பிரச்னைகளை எல்லாம் என் கிட்ட வந்து சொல்ற...அவனோட வலது கைய வெட்டு... அந்த கிறுக்கு * மவன் இடது கையால தான் சாப்பிடணும்...அதே கையாலதான் **ய கழுவனும்... 


இனிமே இந்த சின்ன பிரச்னை  எல்லாம் என் கிட்ட வரக்கூடாது புரியுதா

----------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்ததாக ..... ஒவ்வொரு மாநில முதலமைச்சரையும் தனித்தனியாக சந்திக்கிறான்... ஆரம்பத்தில் தர்மனை மிரட்டி வெளியே போகச்சொன்ன முதலமைச்சர்கள் எல்லோரும்.. பத்து வருடங்களுக்கு நீங்கதான் முதலைச்சமர் என்று கேட்டவுடன் ... கணக்கு போட்டு பார்க்கின்றனர்... 


10 வருஷத்தில் எப்படியும் பத்தாயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம்... 90 சதவிகிதம் தர்மனுக்கு கொடுத்தாலும் நம்ம மாநிலம் வளர்ச்சி அடையும்... மீதி 10 சதவிகிதம் நமக்கே நமக்கு... அதவாது நூறு கோடிக்கு 10 கோடி நமக்கு கிடைக்கும்... 


மாநிலத்துக்கு நற்பணிகள் எல்லாமே தர்மன் பாத்துக்குவான் ... அதாவது நாம எதுவுமே செய்யாமல்... பத்தாயிரம் கோடி அடிச்சா... நம்ம பங்கு 10 சதவிகிதம்.. 


இப்படி யோசித்து இந்தியாவின் 27 மாநில முதல்வர்கள் ஒப்புக்கொண்டனர்... சிலர் முரண்டு பிடிக்க.. அவர்களை பற்றி தர்மன் கவலைப்படவில்லை... வேலை செய்து காட்டினால்... நாய் போல பின்னால் வருவார்கள் என்று தர்மனுக்கு தெரியும்.... 


தர்மனின் பாரதப் போர் தொடக்கம் பெற்றது...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

12 வருடங்களுக்கு பிறகு ... ஒரு நாள் ஒரு புகழ் பெற்ற  தொலைக்காட்சி சேனல் தர்மனை தொடர்பு கொண்டது.. "..சார்.. உங்களை ஒரு மணி நேரம் இன்டெர்வியூ பண்ணலாம்னு இருக்கோம்.. ப்ளீஸ்.. எங்களுக்காக டைம் ஒதுக்க முடியுமா..?.."


தர்மன் யோசித்தான்.. நாட்டு மக்கள் நாம் செய்த காரியங்களை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு...


".சரி.. ஆனா எனக்கு நிறைய பணிகள் இன்னும் முடிக்க வேண்டி இருக்கு.. ஒரே ஒரு மணிநேரம் தான்... அதற்கு பிறகு நான் இருக்க மாட்டேன்...." 


சரிங்க சார்.. ஸ்டுடியோல வேண்டாம்.. உங்க வீட்லயே பேட்டி வெச்சுக்குவோம்.. இன்னும் அரை மணி நேரத்தில் வர்றோம்... காம்பியர் பொண்ணு... 4 கேமரா மென்... மொத்தம் 5 பேர் தான்.... சரிங்களா.?


வாங்க... சீக்கிரமா வாங்க... நான் வெளியே போகணும்..


இதோ வந்துகிட்டே இருக்கோம் சார்... 


 கேமரா சுழல.. சில வர்த்தக விளம்பரங்கள்.. பேட்டி ஆரம்பம்..


'..சார்.. நீங்க இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து... ஒவ்வொரு முதலமைச்சரா சந்திச்சு அவங்க மாநிலத்தை டெவெலப் செஞ்சு குடுத்து இருக்க்கீங்க...உங்களுக்கு இதற்க்கு பணம் எப்படி வந்துச்சுனு தெரிஞ்சுக்கலாமா...?.."


இது எல்லாத்துக்கும் என்னோட செத்துப்போன அம்மாதான் காரணம்... ஆரம்பத்துல நானும் பெரிய ரவுடி ஷீட்டார் தான்... 

ஆனா நான் நல்ல காரியமே செஞ்சுட்டு வந்ததுனால போலீஸ் என்னை கண்டுக்கல.. இன்னும் சொல்லப்போனா... போலீஸ் . சிபிஐ கண்டுபுடிக்க முடியாத நிறைய கேஸ்களை நான்தான் கண்டு புடிச்சுக் கொடுத்தேன்... 


அம்மா சாகக்கிடந்தாங்க... நான் ஹாஸ்பிடல் சென்று பார்த்தேன்... அப்போ என் கிட்ட ஒன்னு சொன்னாங்க.. "..மகனே நீ தப்பெல்லாம் செய்ய மாட்ட்டேன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும் ஊர் வாயை மூட முடியாது.. நான் ஒண்ணு கேட்ப்பேன்.. செய்வியா..?


"நிச்சயமா செய்வேன் மா.."


இது வரைக்கும் நீ சம்பாதிச்ச காசு பணம் எல்லாம் போதும்... நம்ம சேரி மக்களுக்கு முதல்ல வீடு கட்டிக்கொடு.. இந்த நாட்டில எவ்வளவு ஏழைகள் இருக்காங்களோ அவங்களை எல்லாம் நடுத்தர வர்க்கமாக மாற்று..


மனுஷனா பொறந்துட்டா அவனுக்கு மூணு விஷயங்கள் கட்டாயம் தேவை... இருக்க இடம்.. உடுத்த உடை.. மூணு வேளை சாப்பாடு.... அப்பறமா எல்ல்லாருக்கும் இலவச கல்வி கொடு.. ஆரம்ப பள்ளியிலேயே மருத்துவத் துறை  கொண்டு வா.. எஞ்சியரிங் கொண்டு வா... 


இப்பவெல்லாம் .MBBS படிக்கணும்னா நீட்டு தீட்டு-ன்னு ஏதோ சொல்லி கோடி கோடியா பணம் பறிக்கறாங்க... நம்ம அனிதா பொன்னுல ஆரம்பிச்சு எத்தனைதற்கொலைகள்...

இதையெல்லாம் மாற்று..


கிராமங்களில் ரோடு போடு.. நிறைய ஹாஸ்பிட்டல் கட்டு.. இதுக்கெல்லாம் முக்கியமா எவன் குறுக்கே வந்தாலும்  சரி .. அவனை கூறு போட்டு வெட்டு.... 


இன்னும் 8  வருஷத்துல ஒட்டு மொத்த இந்தியாவும் மாறனும் .. அப்பதான் என் ஆத்மா சாந்தி அடையும்னு சொல்லிட்டே கண்ணை மூடிட்டாங்க..அவங்க இல்லேனா என்னால இந்த சாதனைகள் செஞ்சு இருக்க முடியாது..


அடுத்த கேள்வி சார்... ஒரே ராத்திரில நீங்க சொன்னதெல்லாம் நடக்கும்னு நீங்க நம்பறீங்ககளா...


அதுதான் சொல்லிட்டேனே.. எட்டு வருடம் ஆகலாம்.. ஆனா அந்த எட்டு வருடத்தில் நம்ம இந்தியா பத்து அமெரிக்காவுக்கு சமம் ஆகி நிற்கும்... பொருளாதாரம் மட்டுமில்ல.. எல்லா விஷயத்திலேயும்... 


அதுக்கு உங்க பிளான் என்ன..??


முதல்ல ஸ்விஸ் பேங்க் அக்கவ்ன்ட் வெச்சிருக்கறவங்கள பிடிப்போம்னு தான் நினைச்சேன்... ஆனா அது வேற நாட்டு தொடர்பு... ஆயிரம் கேள்விகள் கேலிகள்..... அதனால...


அதனால..????


திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயம்.. திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம்.. சபரி மலை... பூரி ஜெகன்நாத் டெம்பிள்.. இன்னும் நம்ம தஞ்சை பெரிய கோவில்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்...


அப்பறம் எல்லா மசூதிகளிலும்.. சர்ச்சுகளிலும் உள்ள எல்லா சொத்துக்களையும் அரசுக்கு எடுத்துக்கொண்டு மக்கள் நல்வழி பயணம் தொடருவோம்.. மக்கள் போட்ட உண்டியல் பணத்தை மக்கள் நல்வழி திட்டங்களுக்காக செயல் படுத்துவோம்.. 


அது மட்டுமில்ல.. நம்ம நாட்டு பெண்கள் ஆண்கள் அணிந்துள்ள தங்க ஆபரணங்களை பாதியாவது கேட்டு வாங்குவோம்... சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷுக்கு எதிராக ..ஐ என் ஏ படை அமைத்தபோது.... பெண்கள் தாமாகவே வந்து நகையை கொடுத்து உதவி செய்தார்கள்.. 


என்ன வளம் இல்லை நம்மிடம்.. நாம் ஏன் கைஏந்த வேண்டும் வெளி நாட்டிடம்... 


அந்த நாலு கேமரா மேனின் ஒருவன் செல் ஒலித்தது... டே மடையா.. நெற்றி... நெற்றி ல சுடு.. உடனடி சாவு தேவை... இவனை விட்டு வெச்சா நமக்கு ஆபத்து 


சரி சார்... 


அந்த நாலு கேமரா மென்-களில் ஒருவன் மெதுவாக தனது சைலன்சர் துப்பாக்கியை எடுத்தான்.. வலது பக்கமாக தர்மனின் நெற்றிக்கு குறி வைத்தான்..


சில நொடிகள் தான்.. சுட்டான்.. நெற்றி நிறைய வழியும் ரத்தமாக தர்மன் சுருண்டு விழுந்து.. துடி துடித்து இறந்தான்.. 


: கைப்பையில் இருந்து செல்போனை எடுத்த அந்தப்பெண் மெதுவான குரலில் பேசினாள் ,,, "..சார் நீங்க சொன்னபடியே காரியத்தை முடிச்சுட்டோம்..."


"சரி.. நீங்க வந்த இடம் தெரியாம கிளம்பி வந்துடுங்க... மத்ததை எல்லாம் நான் பாத்துக்கறேன்..


சார்.. எங்களுக்கு ஒன்னும் பிரச்னை ஆகாதே.??


"..நான் யாருன்னு தெரியும்ல... நான் சொன்னா சொன்னபடி நடந்துக்குவேன்..நீங்க எதுவுமே நடக்காம அவங்கவங்க வீட்டுக்கு தனித்தனியா போயிடுங்க..சரியா..??"


போனை அணைத்துவிட்டு தூர எறிந்துவிட்டு... பெரியதாக சிரித்தார் இந்தியாவின் ப்ரைம் மினிஸ்டர் ஷகீல் பாண்டே...


நீ இல்லைடா... உன்னைப்போல இன்னும் கோடி பேர் வந்தாலும் நான் இருக்கற வரைக்கும் இந்தியாவின் தலையெழுத்து இப்படித்தான் இருக்கும்.... மாக்கி லோடே.. ஒரு மயிரையும் புடுங்க முடியாது.. நீ என்ன பெரிய புடுங்கியா..? சாலா....  ...


ப்ரைம் மினிஸ்டர் ஷகீல் பாண்டே எகத்தாளம் மற்றும் கிண்டலாக சிரித்தார்... 


அவர் பின்னால் இருந்து ஒரு சப்தம்.. "...தேச துரோகி *****மவனே... நீ எல்லாம் ஒரு நாட்டுக்கு பிரதம மந்திரி...??? நீ  இந்த புண்ணிய மண்ணில வாழக்கூட தகுதி இல்லாத ***** மவன்... இத்தோட ஓழிஞ்சு போடா... தே.****ப்பயலே... "


ப்ரைம் மினிஸ்டர் ஷகீல் பாண்டே மார்பில் நான்கு குண்டுகள் வரிசையாக பாய்ந்தது.. 


சரிந்து விழுந்த ஷகீல் பாண்டே மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் அதே நேரம்.....


புன்னகை சிந்தியவாரே மீதம் இருந்த இரண்டு குண்டுகளை தன் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு... ஜெய்ஹிந்த்... என்று முழங்கியபடி...


 வீரத் தற்கொலை செய்துகொண்டான்.. தர்மனின் உதவியாளன் ராம்...


               எண்ணமும் எழுத்தும்,

                தமிழ் உணர்வாளன்

          

0/Post a Comment/Comments