சேதாரமில்லா பாரதம்
முண்டாசு கட்டிவந்த
முறுக்கு மீசைக்காரா ...
முரசுகொட்டி கவிபடைத்து
முத்திரை பதித்ததீரா ...
கண்ணம்மாவின் உயிர்க்காதல்
கள்வனான கவிஞா ...
பாடல்வரிகளிலே பரவசத்"தீ
பற்றவைத்த பார"தீயே ...
பார்வையோ விசாலமாய்
பாடல்களோ பல்சுவையாய் ...
பாரதம் கண்ட விடுதலை
வேங்கையே ...
சாதிகள் இல்லையடி
பாப்பா என்றே சொல்லி ...
பிஞ்சுகளின் நெஞ்சினிலே
புதுரத்தம் பாய்ச்சியவரே ...
பெண்ணடிமை ஒழித்தே
பொன்னாட்டின் விலங்கொடித்திடவே ...
புரட்சிக்கவி பற்பல படைத்த
வித்தகரே ...
மூட நம்பிக்கையின்
முகவரியுமின்றி அழித்தவரே ...
முன்னேற்றப் பாதையில்
சென்றிட புதுத்தெம்பு
கொடுத்த சூரரே ...
தாய்த் திருநாட்டின்
மேன்மைகளை மனக்
காட்சியாக கண்டவரே ...
யுகங்கள் கடந்தும்வுன்
கனவுகள் மெய்ப்பட்டிவே ...
மீண்டும் மீண்டெழுந்து
வந்திடு பார"தீ நீயே ...
சேர்ந்தே செதுக்குவோம்
சேதாரமில்லா பாரதமதையே ...
உலக நாடுகளிடையே
இந்தியா வல்லரசாகிடவே ...
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment