இலக்கை நோக்கி
(சிறுகதை)
"ஆதிகேசவன் சார், ஆதிகேசவன் சார் என்னாச்சு இவருக்கு என்ற சிந்தனையுடன் ஆதிகேசவனின் தோளைத் தட்டி என்னசார் என்னாச்சு ஏன் ரொம்ப கவலையா இருக்கறீங்க என்றார் சீனிவாசன்".
"பெருசா ஒன்னும் இல்ல சீனிவாசன் எப்பவும் போலதான் என் பையனோட எதிர்காலத்த நெனச்சா ஒரே கவலையா இருக்கு".
"ஏன்சார் சத்யாக்கு என்ன கொரச்சல் நல்லாபடிச்சு சிட்டிலயே மிகப்பெரிய கிரிமினல் லாயரா தானே இருக்கறார் அவரபத்தி என்ன சார் கவலை".
"எல்லாம் சரிதான் சீனிவாசன் எனக்கு சொத்து பத்துனு எவ்வளவோ இருந்தாலும் என்னோட சொந்த முயற்சியால தான் கொஞ்ச கொஞ்சமா முன்னேறி கான்ஸ்டபிள்ல இருந்து இன்ஸ்பெக்டர் வர ஆகி இருக்கறேன்".
அ"துதான் ஊரறிஞ்ச விசயமாச்சே சார் அதுக்கும் சத்யாவ பத்தின உங்க கவலைக்கும் என்ன சார் சம்பந்தம்".
"சம்பந்தம் இருக்கு சீனிவாசன் இத்தன வருச சர்வீஸ்ல பத்துபைசா லஞ்சம் வாங்கி இருப்பனா நான்".
"உங்களுக்கு தான் லஞ்சம்னு வார்த்தையக் கேட்டாலே அலர்ஜியாச்சே"
"ஆனா எம்புள்ள பணத்த வாங்கிட்டு கேடிகளுக்கும் , கோடில புரளுறவனுங்களுக்கும் தான் வாதாடறான்".
"ஏழை எளிய மக்களுக்காக கொஞ்சம்கூட பச்சாதாபம் பார்க்க மாட்டேங்கறான் அத நெனச்சாலே மனசு தாங்கல என கண்கள் கலங்ககூற".
அதைக் கேட்ட சீனிவாசன் "அடவிடுங்க சார் இந்தக்காலத்துல சத்யா மாதிரி தான் இருக்கணும் இல்லனா பொழைக்க தெரியாதவன்னு முத்திரை குத்திடுவாங்க".
சரி, வாங்கசார் இன்னைக்கு நம்ம ஏரியா எம்.எல்.ஏ. மீட்டிங்க்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யணுமாம் வயர்லெஸ்ல செய்தி வந்துருக்கு எனக்கூற இருவரும் கிளம்பினர்.
அன்றைய நாள் மாலை.
சஞ்சனா காபி கொண்டு வா, ஒரே தலைவலியா இருக்கு என சத்யா அழைக்க,
காபியுடன் வந்த சஞ்சனா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் சத்யா என தயங்கினாள்.
காபியை வாங்கிக் கொண்டு, பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளில் இருந்து அகலாத கண்களுடன் நீ என்ன சொல்ல போறனு எனக்கு தெரியும் என்றான்.
தெரியுமா என்பது போல ஆச்சர்யமானாள் சஞ்சனா.
எதையும் கண்டு கொள்ளாத சத்யா பேசத் தொடங்கினான் எங்க அப்பா மாதிரியே நீயும் ஏங்க நம்ம கிட்ட இல்லாத பணமா ஏன் பணத்த வாங்கிட்டு ஏழைகளுக்கு எதிராக வாதாடறீங்க வேணாமே இதெல்லாம் பாவம்னு தானே சொல்லப்போற.
ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள் சஞ்சனா.
சரி நான் பணம் வாங்கறது தானே உங்களுக்குத் தெரியும் அந்த பணம் எங்க போகுதுனு தெரியுமா என்றவன்,
ஏழைகளுக்கு நேர்வழியில நீதி கிடைக்காது சஞ்சனா நான் எடுத்த கேஸ் எல்லாத்திலயுமே என் க்ளைய்ண்ட் ஜெயிச்ச மாதிரி தான் தெரியும்.
ஆனால் ஏதோ ஒருவகைல பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவியிருப்பேன் என விளக்கிவிட்டு இப்போ சொல்லு நான் பாவம் பண்றேனா என்றான் சிறு கண்சிமிட்டலுடன்.
இல்லங்க உங்கள தப்பா புரிஞ்சுகிட்ட நாங்கதாங்க பாவிங்க.
உங்களுடைய சிந்தனையே வித்தியாசமா இருக்கு அதுமட்டுமில்ல இந்தக் காலத்துக்கு உங்க பாதை தாங்க சரி.
வேற லாயரா இருந்தா எதிர்த்து கேஸ்போடற ஏழைகள் பாடுதிண்டாட்டம் ஆனா நீங்க அதிகார வர்கத்தால பாதிக்கப்படற ஏழைகளுக்கு அவங்களோட நிலை உணர்ந்து உதவறீங்க ஐ லவ் யூ என கட்டியணைத்தாள்.
இதையெல்லாம் எதேச்சையாக வீட்டிற்கு வந்த ஆதிகேசவன் ஆனந்த கண்ணீருடன் கேட்டு தன்மகனின் இலக்கு சரியானதேயென புரிந்து கொண்டு தன் இலக்கை நோக்கி பயணப்பட்டார்.
*ரேணுகா ஸ்டாலின் "

Post a Comment