தாய்நாட்டு_வீரன்
பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் வழக்கு தொடங்கியது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக தன் உயிரையும் துச்சமென எண்ணி பல பாகிஸ்தான் இராணுவ தகவல்களை இந்திய இராணுவத்திற்கு பகிர்ந்து வந்த சிவக்குமார் பிடிபட்டார்.
அவர்மீது தேசதுரோக வழக்கு. வழக்கின் தீர்ப்பாக தூக்கு தண்டனை அத்தண்டனையும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமென தீர்ப்பு.
இந்திய சமூக ஊடகங்கள் அத்தனையிலும் அதுதான் பேச்சு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கினார்கள் என பெரும் கொந்தளிப்பு ஒருபுறம்.
மறுபுறமோ தன் உயிரையும் பொருட்படுத்தாது தாய்நாட்டிற்காக அந்நிய தேசத்து ரகசியங்களை பகிர்ந்து பல வன்முறைகளும், அந்நிய ஊடுருவல்களும் இன்றி தடுத்து இன்று தேசத்திற்காக உயிர்விடத் துணிந்த வீரனுக்கு வீரவணக்கம் என முழக்கங்கள் இப்படியாக நாடே பரபரப்பாக இருந்தது.
பாகிஸ்தானில் இரண்டு நாட்களில் சிவக்குமாருக்கு தூக்கு. அவனது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துதல், சிவக்குமாரின் சொந்த மாவட்டத்தில் "தமிழன்டா உன்னை எவனாலும் தொட முடியாது எமனாலும் தொட முடியாது" என தொடர் ஆரவாரங்கள்.
தூக்கிலிடும் நாளும் வந்தது, அனைத்து பார்மாலிட்டீசும் முடிந்து தூக்கிலும் போட்டு விட்டனர்.
அவ்வீரனது பூதவுடலை இந்தியா அனுப்ப வேண்டுமென்றால் தங்களிடம் பிணையக் கைதிகளாக உள்ள பாகிஸ்தானிய வீரர்கள் இருவரை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறது பாகிஸ்தான்.
வேறு வழியின்றி இருவரும் விடுவிக்கப்பட்டபின் சிவக்குமாரின் உடல் முழு இராணுவ மரியாதையுடன் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
சொந்த ஊர் என்பதாலும் அவ்வூருக்கே சிவக்குமார் செல்லப்பிள்ளை என்பதாலும் சகல மரியாதைகளுடன் கண்ணீர் மல்க ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
பல இராணுவ வீரர்களின் மரியாதையுடன் பெட்டியை சவக்குழிக்குள் இறக்கும் முன் இராணுவ உயர் அதிகாரியொருவர் வந்து அங்கிருந்த ஓர் வீரனிடம் காதில் ஏதோ முணுமுணுக்கிறார்.
" நீ ஒரு வேலை செய்யணும்.. சிவாவோட பாடில வலது கையின் தோள்பட்டையில் ஒரு மைக்ரோ சிப் இருக்கும்.. அதை எப்படியாவது யாருக்கும் தெரியாம.. எடுத்துக்கோ.. என்னை அலுவலகத்தில் வந்து பாரு.."
என்று கூறி சிவக்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தி சென்று விட்டார்.
அவ்வீரனும் தன் உயரதிகாரி சொல்லிச் சென்றதை கனகச்சிதமாக செய்து முடித்தான்.
அனைவரும் கலைந்து சென்றனர். அவ்வீரனும் அந்த மைக்ரோ சிப்புடன் சென்னை நோக்கி பயணப்பட்டு தன் உயரதிகாரியிடம் ஒப்படைத்தான்.
அந்த சிப் கணினி வழியே உயிர்ப்பிக்கப்படுகிறது.
அதில் இன்னும் பத்தாண்டுகளில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடுக்கவிருக்கும் போர், ஊடுருவல், எங்கிருந்து ஆயுதம் பெறப்படுகிறது, ஆயுதக்கிடங்கு பற்றிய தகவல் எந்தெந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவுகின்றன.. பாகிஸ்தானின் அணு ஆயுதம்.. என பல்வேறு தகவல்களும் இரகசியங்களும் அடங்கி இருந்தது.
எல்லோரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நிற்க கேப்டன் கர்னல் எழுந்து அவரையும் அறியாமல் ஒரு சல்யூட் வைக்கிறார்.
இறந்தும் தாய்நாட்டிற்காக சிவக்குமார் செய்த பெருந்தியாகத்தை எண்ணி நெகிழ்ந்து.. அங்கிருந்த அத்தனை வீர்ர்களும் எழுந்து வீரவணக்கம் செலுத்தினர்.
தாய்நாட்டிற்காக தன்னுயிரைத் தந்து பல தகவல்களையும் தந்த சிவக்குமார் அனைவரின் மனதிலும் உயர்ந்து நீங்காமல் நிலைத்திருக்கிறார்.
நாமும் அவருக்கு ஒரு வீரவணக்கம் வைப்போமே வாருங்களேன்.
வணக்கங்களுடன்,
தமிழ் உணர்வாளன்
Post a Comment