தாய்நாட்டு_வீரன்
தனது லாட்டி உடையும்வரை அவனை அடித்து கேட்டு விட்டார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , என்றாலும் அவன் பெயரைத்தவிர வேறு எதுவும் சொல்லவில்லை . . .
அங்குவந்த அசிஸ்டன்ட் கமிஷனர் சுதர்சன் இன்ஸ்பெக்டரை கோபத்தோடு முறைத்தார்.
"என்னையா??? ரெண்டு நாளா அவனை கஸ்டடியிலே வச்சு இருக்க நாளைக்கு கடைசிநாள் , அவனை கோர்ட்-ல நிறுத்தணும் மூணு நாள்தான் கோர்ட் அனுமதி கொடுத்து இருக்கு தெரியும்ல...??
எஸ் சார் . . .
அவன் பேரு சத்யா, ஊரு ஈரோடு . . .
இதைத்தவிர வேற எதையுமே சொல்ல மாட்டேங்கறான் சார் தேர்ட்டிகிரி ட்ரீட்மெண்ட் கூட கொடுத்து பார்த்துட்டோம் . . .
இனிமேலும் அடிச்சா . . .
என்னயா சொல்லவர சொல்லித்தொல.
இல்ல சார் இனிமேலும் அடிச்சா கண்டிப்பா அவன் செத்துடுவான் அப்பறம் லாக்கப் மர்டர்னு சொல்லி வீணா நம்மபேரு கெட்டுடும் என்ன பண்ணலாம் சார் நீங்களே சொல்லுங்க...???
யோவ் சுரேந்தர் நீசொல்றதும் சரிதான்யா இரு ஒருதடவ நான் பேசி பார்க்கிறேன் . . .
அப்புறமா சொல்றேன் . . .
லாக்கப்க்கு நான் வரல, அவனை என் ஆபீஸ் கொண்டுவா.
கமிஷனர் சுதர்சன் தனது அலுவலகத்தில் ஒரு சிகரெட்டை பற்றவைத்து காத்திருந்தார் . . .
கையில் விலங்கோடு சத்யாவை கமிஷனர் முன்பு நிறுத்தினார்கள்.
சுரேந்தர், அவன் கையில விலங்கை எடுத்து விடுங்க . . .
சார் . . . இவன் கொடூரமா நாலுபேர பெட்ரோல் ஊத்தி எரிச்சு கொன்ன கொலைகாரன் விபரீதம் வேண்டாம் , எந்த நேரத்திலும் எதுவும் செய்வான் விலங்கு கையில் இருக்கட்டுமே.
தெரியும் சுரேந்தர் சொன்னதை செய்யுங்க . . .
அடுத்தநொடி சத்யாவின் கைகளில் இருந்த விலங்கு அகற்றப்பட்டது . . . கமிஷனர் முன்னால் நின்று ஏளனமாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சத்யா . . .
கமிஷனர் தனது கையில் இருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு மெதுவாக கேட்டார் சத்யா . . . நீயாரு..???
அந்த நாலுபேரையும் ஏன் கொலை பண்ண சொல்லு என்று . . .???
என்ன சார் பாசமா பேசி ஏதாவது கறக்க முடியுமானு பார்க்கறீங்களா!!!
உங்க திட்டம் அதானே என்று காதலியைப் பார்த்து கண்சிமிட்டும் காதலனைப்போல கண்களைச் சிமிட்டினான் சத்யா . . .
கோபம் தலைக்கேற கத்திய சுதர்சன், சத்யாவை அடித்து நொறுக்கி விட்டு யோவ் நாளைக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போங்கய்யா என்ன நடக்குதோ!!! நடக்கட்டும் எனக்கூறிச் சென்றார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகம் கையில் விலங்குடன் நடக்கக்கூட தெம்பின்றி சத்யா ஜீப்பிலிருந்து கோர்ட்டுக்குள் நுழைய அங்கே அதிரடியாக வந்த இந்திய இராணுவ வீரர்கள் சிலர் நீதிபதியிடம் ஏதோ காகிதங்களைக் காட்ட அவர் விசாரணையின்றி தீர்ப்பு வழங்கினார்.
சத்யாவிற்கு தண்டனை கொடுக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை ஆதலால் சத்யாவை இந்திய இராணுவ கோர்ட்டில் ஒப்படைக்கிறேன் த கோர்ட் இஸ் அர்ஜன்ட் என்று கூறி முடித்தார்.
டெல்லி இராணுவ ஹெட்குவாட்டர் வாங்க சத்யா யு டன் எ கிரேட் ஜாப் அவ்ளோ அடிவாங்கியும் எதுவும் சொல்லாம சமாளிச்சுட்டீங்களே இல்லனா நம்ம இராணுவத்த பத்தி மீடியாக்கள் வாய்க்கு வந்தத பேசியிருப்பாங்க.
எதுக்காக அவனுங்கள பிடிக்காம எரிச்சீங்கனு எனக்கு புரியுது சத்யா எப்டியோ அவனுங்களோட சேர்ந்து நம்ம நாட்டு ரகசியங்களும் எதிரி நாட்டுக்கு போகாம எரிஞ்சிடுச்சு எனப் பெருமூச்சிட்டார் கர்னல் சுக்வீந்தர்சிங்.
கண்களில் பெருமிதம் பொங்க அடுத்து என்ட்யூட்டி என்னசார் என்றான் சத்யா தாய்நாட்டுப்பற்றுள்ள வீரனின் மிடுக்கோடு.
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment