யார் குற்றவாளி? (சிறுகதை)


 யார் குற்றவாளி? (சிறுகதை)


அகராதி என்னும் பெண் 

பிறப்பால் பெண்ணானாலும் ஆணைப் போல அப்பாவின் அன்பால் வளர்க்கப் பட்டவள்,

அப்பாவின் நம்பிக்கை,நன்பியும் கூட

சிறுவயது சிரமங்களையெல்லாம் அவளிடம் அசைபோட்டு கொண்டிருப்பார் எப்பொழுதும். எனவே அப்பாவின் உணர்வை உள்வாங்கிய வளாக வளர்ந்து வந்தாள் பள்ளி வயது வரை ஆண்பிள்ளைகளுடன் விளையாடுவது பழகுவது அதிகம் என்னதான் அப்பாவின் நம்பிக்கையாக இருந்தாலும் பெண் என்பதால் சில தருணங்களில் அனுமதி கிடைக்கவில்லை கல்லூரி பருவம் வந்தவுடனே,

தன் அப்பாவைத் தவிர வேறு ஆண்களை நம்பாதே அகராதி கல்லூரியில் தன் அப்பாவைப் போலவே தன்னை புரிந்து கொண்ட ஒரு ஆண் மகனை சந்தித்தாள் தனது நம்பிக்கைக்குரியவராக அவரை ஏற்றுக் கொண்டால் சில நாட்களில் நம்பிக்கை காதலாக மலர்ந்தது நம்பிக்கை நண்பன் நம்பிக்கை நாயகனாக மாறி விட்டான் தன்  அக உணர்வுகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டால் ஆனால் அவனோ அவளிடம் எதிர்பார்த்தது அவளின் நம்பிக்கை அல்ல காதல் என்னும் பெயரில் காமம் அது புரியாத அகராதியும் முழுமனதுடன் அவனை காதலித்து வந்தாள் ஒரு கட்டத்தில் கல்லூரி இறுதி ஆண்டு இறுதி தேர்வு முடியும் பொழுது இருவரும் பிரிந்து விடுகின்றனர் இருந்தபோதிலும் அவள் மனம் மாறவில்லை ஆனால் அவன் திருமணம் என்னும் பேச்சை எடுத்தவுடன் வெளிநாட்டிற்கு சென்று விட்டான் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்குச் செல்வதாக கூறி விட்டான், அவள் குடும்ப சூழலால் அவனிடம் திருமணம் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் அவனோ வீட்டில் சொல்பவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி விட்டான். அப்பாவின் நம்பிக்கையைக் கெடுக்க முடியாமல் பல கட்டாயங்களுடன் பிடிக்காத திருமணத்தை ஏற்றுக்கொண்டால் ஆனாலும் அவனை மறக்க மனம் இல்லை அவனும் இவளை மறக்காமல் வெளிநாட்டிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டே இருந்தான் உடலால் இணைவதற்கு அவள் வாய்ப்பு தரவில்லை ஆனால் தன் கணவனுடனும் வாழவில்லை மனதில் அவனோடே வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் வேறொரு பெண்ணுடன் பழகிக் கொண்டு இருந்திருக்கிறான் அதை அறியாத அவள் தன் வாழ்வை வீணடித்து கொண்டு வாழ்ந்தாள்,வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் அவன் அகராதியை சந்தித்தான் மீண்டும் அவள்மீது காதலுடன் பேசிக்கொண்டே இருந்தான், இந்நிலையில் அகராதியின் தங்கையோ காதல் திருமணம் செய்து கொண்டால் தன் குடும்பத்திற்கு அவமானத்தைத் தேடித் தந்து தன் அப்பாவின் மரியாதையை கெடுத்து தலைகுனிய வைத்தாள், இச்சூழலில் மனம் நொந்துபோன அகராதி செய்வதறியாது தவித்தாள் தங்கையின் நிகழ்வால் பல அவமானங்களையும் அடைந்து அல்லலுற்று போனாள் ஆனாலும் அவனை மறக்க முடியவில்லை தன் குடும்ப சூழலுக்காக தன் மனதையும் வருத்திக்கொண்டு தனக்குப் பிடிக்காத வாழ்க்கையிலும் பிடிப்புடன் வாழ்ந்து கொண்டிருந்தால் அவனோ வேறொரு பெண்ணை காதலிப்பதாக அவளிடம் வந்து சொன்னான் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ஏற்றுக் கொண்டவளாக அவனிடம் காட்டிக்கொண்டு ஏமாந்து போனாள் மனக்குமுறலுடன் 7 வருட திருமண வாழ்வில் அவளுக்கு குழந்தை இல்லை அவனோ இரண்டு குழந்தைகளுடன் பெற்றோரின் மனம் கோணாமல் நடந்து கொண்டது அவள் குற்றமா? உண்மையாக காதலித்தது அவள் குற்றமா? தன் பிள்ளையின் மனம் அறியாது பிடிக்காத நபரை திருமணம் செய்து கொடுத்த தந்தை குற்றவாளியா? உண்மையாக காதலித்த அகராதி குற்றவாளியா?

அகராதியையும் காதலித்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணையும் காதலித்த அவன் குற்றவாளியா? தன் தந்தையை தலைகுனிய வைத்த அகராதியின் தங்கை குற்றவாளியா? 

                க. அய்யம்மாள், மதுரை

0/Post a Comment/Comments