#நீயென்ன_ஆண்டவனா_அரக்கனா!!
அகிலத்தைக் காக்கும்
ஆண்டவன் நீயென்று
அகவறைக்குள் உனைவைத்து
அனுதினமும் பூஜித்தேன் . . .
அன்றாடம் நீதந்த
அவலங்கள் யாவையுமே
அசறாது போராடி
ஆலயத்தில் தொழுது நின்றேன் . . .
அண்ட சராசரங்கள் எல்லாம்
அழிகின்ற வேலையிலும்
அமைதியாய் நீயிருக்க
அன்போடு நின் தாழ் பணிந்தேன் . . .
அங்கத்தை ஊனமாக்கி
உதாசித்தாய் .!!!
வலியை மட்டும் வாழ்வாக்கி
ரசித்து நின்றாய் !!!
நித்தம் நித்தம் போராடும்
நிலையைத் தந்தாய் !!!
அத்தனையும் தாங்கி நின்று
கண்ணீரில் தத்தளித்தும்
கரந்தனிலே ஏதுமின்றியும்
கவலையை மறப்பதற்கே
கைகூப்பி வணங்க வந்தேன் . . .
ஆனாலும் இரக்கமின்றி
அதற்கெல்லாம் கைமாறாய்
அருள் தரவும் தோனாது
அழித்திடவும் செய்யாது
ஊனோடு உயிராக
உதிரத்தில் கலந்துள்ள
என் இதயம் பறித்தெடுத்து
கிழிப்பதேனோ !!!
நீயென்ன அரக்கனா .!!
ஆண்டவனோ .!!
விடை பகர்வார் யாரோ??
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment