Vetrumaiyil otrumai

 



          வேற்றுமையில் ஒற்றுமை


மொழி இன மதத்தாலே

பிரிந்திருந்த போதிலும் . . .

குணத்தாலும் நல்மனத்தாலும் 

என்றென்றும் பிரிவில்லா 

பேரின்ப பெருஞ் சுடர் நாம் . . .


சாதி மத பேதமது 

நீக்கமற நெஞ்ச மெல்லாம் 

நிறைந்திருந்த போதிலும் . . .

உள்ளத்தாலும் நல்உணர்வாலும்

நானிலம் காக்க நித்தமும் 

போராடும் பேதமில்லா 

பெருமைமிகு பெருஞ் சுடர் நாம் . . .


சாதிக் கொரு சங்கமென்றும்

வீதிக்கு நூறு வில்லங்கமென்றும்

விளைந்திருந்த போதிலும் . . .

இயற்கை சீற்றங்களாலும்

கொடுந் தொற்று நோயாலும்

பெருந்துன்பம் வந்து

அவதியுறும் போது . . .

ஆதரவாய் தோள் சாய

தோளனாகி தோள் கொடுத்து

தொல்லைகள் ஏதுமின்றி

துன்பங்கள் யாவற்றையும்

தூரமாய் துரத்தியடித்து

இன்பங்களை மீட்டுத்தரும்

இதமான பெருஞ் சுடர் நாம் . . .

மனிதம் காக்கும் மானிடர் நாம் . . .


ஏராளமாய் வளங்கள் 

செழித்திருக்கும் போதிலும்

தாராளமாய் பிரிவினையும்

தழைத்திருக்கும் தேசமிது

பிரிவினையை வேரறுத்து

ஒற்றுமையை ஓங்கச் செய்து

வேற்றுமையில் ஒற்றுமை 

காண்பதே நம்பெருமை . . .


தேசத்தை துண்டாட 

எவர் வந்தாலும் எதிர் 

நின்றெதிர்த் தாலும் 

இணைந்திருந்து

தகுந்த பதிலளிப்போம் . . .

எதிரிகள் பதறி தூள் தூளாய் 

சிதறியோட விரட்டியடிப்போம் . . .

வேற்றுமையில் ஒற்றுமை 

காண்பதே நம்பெருமை 

என உணர்ந்து ஒன்றிணைவோம் . . .

ஒற்றுமையை ஒங்கச் செய்வோம் . . .


            *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments