காலத்தினால் செய்த நன்றி
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
காலத்தினால் செய்த உதவி சிறிதாயினும்
அதை நாம் உயிருள்ளவரை மறக்கக் கூடாது,!
நமக்கு அவசியமான ஒரு நேரத்தில் அதாவது
உயிர் போகும் தருணத்தில்,,,
அவர்கள் செய்யும் உதவி எமது மானத்தைக்
காப்பாற்றி எமது மரியாதையைப்
போற்றிக் காக்கிறது ,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு "
என்று வள்ளுவர் கூறியுள்ளார் !
நாங்கள் ஒருவரிடம் பெற்ற உதவியை
ஒருபோதும் மறக்கலாகாது,,என்பதே,, !
" நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டாம் என்றும்
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்,,"
அதாவது நாங்கள் தென்னம் பிள்ளையை நட்டுத்
தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோம்,,!
அந்த தென்னையோ பெரிதாக
வளர்ந்து எங்களுக்கு இளநீர் தருகிறது,!
ஓரறிவு கூட இல்லாத தென்னை மரம்
இனிப்புச் சுவையுள்ள இளநீரை எமக்குத் தந்து
களைப்பாற்றுகிறது,!
ஆறறிவு இருந்தும் நாமென்ன செய்கிறோம் ,!
பெற்றவர்களையே வயது போன காலத்தில்
கவனிக்காது அவர்களைத் துரத்தி விடுகிறோம்,,!
நன்றி மறப்பது நன்றல்ல
அன்றே மறப்பது நன்றாம் ,!
மகாபாரதம் நட்புக்கு இலக்கணமாக கர்ணனையும்
துரியோதனனையும் எமக்கு காட்டி நிற்கிறது !
தாய் தந்தை யாரென்றே தெரியாத கர்ணனை
துரியோதனன் அரசனாய் இருந்தும் பல
சந்தர்ப்பங்களில் தனக்குச் செய்த உதவிகளுக்காக
பெற்ற தாயே வந்து நீதான் என் மகன்
என்ற பின்பும் நன்றிக்கடன் செலுத்துவதற்காக
துரியோதனன் கூடவே நின்று தன் உயிரையே
தானமாக்க கொடுக்கத் தவறவில்லை!
அதே போல இராமாயணத்தில்
இராவணன் இன்னொருவன் மனையாளை
களவாகத் தூக்கி வந்தது பிழை என உணர்ந்தும்
செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடவும்
துணிந்தானே,,கும்பகர்ணன்,,!!
எப்படியான நல்ல இதயமுள்ள தியாகச்
செம்மல்களைப் பார்க்கிறோம்,,!
நன்றி மறப்பது நன்றல்ல,,
ஒருபோதும் ஒருவர் செய்த உதவியை
நாம் மறக்கக் கூடாது,,!
எங்களால் இயன்றவரை நன்றி மறக்காது
நல்ல பண்புள்ளவராக இருக்க முயற்சி செய்வோம்
என்று கூறி எனது கருத்தை
பதிவு செய்கிறேன் நன்றி !
புவனா சற்குணம் கனடா
Post a Comment