காலத்தினால் செய்த..நன்றி
நன்றி மறப்பது நன்றன்று என்பார்கள்
ஓர் இக்கட்டான நிலைமையில் அதை சமாளிக்கும் விதமாக
நமக்கு கிடைக்கிற உதவிகள் உண்மையில்
மிகப் பெரியவையே
அது பணஉதவியாகவோ ஆற்றுப்படுத்துவதாகவோ
பக்கபலமாகவோ
தைரியமூட்டுவதாகவோ எதுவாகவும் இருக்கலாம்
சில நேரங்களில்
நமக்குக் கிடைக்கிற
பாரட்டுக்களால் நாம் பெரிதும் மனம் மகிழ்வதைப் போல
சமயசந்தர்ப்பத்தில்
நமக்கு கிடைக்கும் உதவிகள் நாம் அடு்த்த கட்டத்தை நோக்கி
பயணிக்க உதவுவதால்
அவைகளை மறத்தல் கூடாது
என்றேனும் ஓர் நாள் நமக்கு நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும்
போது அதற்கான நன்றிக் கடன் நாம் பட்டிருக்கவேண்டும்
உதவி செய்பவர்கள் நமதுநன்றியை எதிர் பாராமல்கூட
உதவி செய்திருக்கலாம்
நம் மனம் மகிழ்ந்த படியே நமக்காக உழைத்தவர்
மனமும் மகிழ நாம் செய்கிற கைமாறு என்ன.?
இரண்டவதாக உறவுகள் நட்புகள் என யாராகினும் அவரவர்தகுதியை மீறி நமக்கான உதவிகளைச் செய்யும் அளவில்
நம் நடத்தை அமைதல் நமக்கான பெரும் பேறு
அவனா ...!
அவனுக்குப் போய் யாராவது ஏதவாதுசெய்வார்களா
என தூற்றுபவர்களும் உள்ளார்கள்
உங்களுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு நீங்கள் முடிந்தவரை உதவினால் உங்கள் பிரச்சனைக்கு உதவிட அந்த ஆண்டவனே கூட அருள்வான்
உதவுது என் கு ணம் கொட்டுவது தேளின் குணம்
என கூறுவார்கள்
யார்இக்கட்டான நிலைமையில் இருந்தபோதும் முடிந்தவரை
மனிதாபிமானத்துடன் உதவுங்கள்
நன்றியை கூடஎதிர் பாராமல்
நம்மால் பலன் அடைந்தவர்
என்றேனும்
ஓர்நாளாவது
நினைத்துப்பார்த்தாலே போதும் அதற்கான
புண்ணியம் வந்துவிடும்
பசிக்கும் போதுதான் உணவு தேவை
பசியற்ற போது
என்ன கிடைத்து
என்ன பயன்
காலத்தினால் செய்வதே பேருதவி
காலம்கடந்து செய்வதால் சிலசமயம் பலனற்றும் போகலாம்
உதவு உன்னால் முடிந்தவரை மனிதரில் புனிதனாகலாம் நீயும்
ந இரவிச்சந்திரன் பழனி
Post a Comment