Hykoo - ஹைக்கூ

 


#ஹைக்கூ_கவிதைகள்

1. மாடிக் கட்டடம்

 மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

திருமண வீடு


சிந்தனை பாரதி 


2. கட்டிட வேலைப்பாடுகள்

கண்களைக் கவர்கின்றன

அலங்கார விளக்குகள்


- சங்கர்குரு பழனிச்சாமி


3. ஒளிரும் வர்த்தக மகால்

மக்களைக் கவர்ந்து இழுக்கிறது

ஆடித் தள்ளுபடி


அ. நாராயணசாமி


4. அழகான கட்டிடம்

மின்னொளியில் மிளிர்கிறது

வியப்பாக இருக்கிறது


சுஜாதா அருணாச்சலம்


5. பிரமாண்டமான மாளிகை

வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது

விளம்பரப் பலகை


மலர் மைந்தன்


6. பிரமாண்டமான கட்டிடம்

வண்ண விளக்குகளுடன் ஒளிர்கிறது

கார்த்திகையில் வீடு


அருண்மொழி


7. விளையாட்டு அரங்கம் 

வண்ணமயமாக இருக்கிறது 

அழகிய நீரூற்று 


வ பரிமளாதேவி


8. பெரிய கட்டிடம்

பிரமாண்டமாக இருக்கிறது

கோபுர மின் விளக்கு


Dr ஜலீலா முஸம்மில் 


9. கண்காட்சி அரங்கம்

கட்டுப்படி ஆகவில்லை

நுழைவுக் கட்டணம்


க.குணசேகரன்


10. மின்தூக்கி இயந்திரம்

மேலும் கீழும் செல்கிறது

வண்ணத் தோரண விளக்கொளி


 கோவை ஆறுமுகம்


11. நிலக்கரி  பஞ்சத்தில்

பற்றி  எரிகிறது

முதலாளிகளின் மாளிகையில்


மு.அசோக்குமார்


12. விளக்கின் எண்ணிக்கை 

கூடிகொண்டே போகிறது 

மின்கட்டணம் 


- நாகை. ஹாஜா


13. உயர்ந்த கட்டிடம்

அலங்கார விளக்கொளி காட்டும்

சிலர் செல்வச்செழிப்பு


செண்பக ஜெகதீசன்


14. ஒளிரும்  மாளிகை

இன்னும்  அகலவில்லை

குடிசை வீட்டில்  இருள்


-சு.கேசவன்


15. வானளாவிய கட்டிடங்கள்

மக்களைக் கவர்கின்றன

மின்னொளி விளக்குகள்


தனம் மீனாட்சிநாதன்


16. உயரமான கட்டடம்

நாட்டின் வளர்ச்சியை உணர்த்துகிறது

மக்களின் சமத்துவப் பாதை


ஓவியர்.பால. மணிகண்டன் 


17. வணிக வளாகம்

தங்கமாய் மின்னுகிறது

ஏழைக்கு அப்பாற்பட்டு


இரமணி ராஜன்


18. துணிக்கடை பொம்மை

நிர்வாண நிலையில் ரசிக்கிறான்

சாலையோரச் சிறுவன் 


                    தமிழ் தம்பி ...✍️


19. மிகப்பெரிய வணிக வளாகம்

மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

தெருவோரக் கடைகளில்


பிரேமா ரமணி


20. உயர்ந்த மாளிகை

மின்சார அலங்காரத்தில் நிறைகிறது

ஆடம்பரம்


கே.கல்பனா


21. பிரமாண்டமான கட்டிடம்

வண்ண விளக்குகளுடன் ஒளிர்கிறது

கார்த்திகையில் முற்றம்


அருண்மொழி


22. அரங்கின் உள்ளமைப்பு

வியக்க வைக்கிறது

பொறியாளரின் தனித்துவம் 

                 

கண்மணி கண்ணன்


23. கடைகளில் புதுபொலிவு

மனங்களை கவர்ந்திடும்

ஆடி பதினெட்டு


முத்தூர் பாக்யதாசன்


24. பிரும்மாண்ட வணிக வளாகம்

அலங்கரம் அதிகமே

(Gst)வரிஉள்பட


பார்வதி சத்தியநாராயணன்


25. கண்ணாடி மாளிகை 

அப்படியே பிரதிபலித்துக் காட்டுகின்றது

கலைஞனின் திறமை 


மணிகண்டன் அய்யப்பன் 


26. நவீன மாளிகை

ஒளியில் மிளிர்கிறது

கட்டிட கலைஞனின் திறமை


பஞ்சநாதன் சின்னா


27. வணிக வளாகம் 

பிரமிப்பை ஏற்படுத்துகிறது  

வானில் வானவில் 


சென்னிமலை அ.சீனிவாசன்


28. அரங்க நிகழ்வு

மனதைக் கவர்கின்றது

மின்னொளி அலங்காரம்


ம.ஞானசம்பந்தன்


29. கண்கவர் மாளிகை

உழைப்பாளி கைவண்ணம்

படைத்தவனுக்கு உள்ளே இடமில்லை


வி.தமிழ்ச்செல்வன்


30. கண்ணாடி மாளிகை

விழுந்து தெறிக்கிறது

ஒளியில் பிம்பம்


ஏரூர் ஆஸாத் கமால்


31. கண்ணாடி மாளிகை

பார்த்து வலிக்கிறது

கழுத்து


கஞ்சனூர் தே.பாஷியம்


32. அலங்கார விளக்கு

அனைவரையும் ஈர்க்கின்றது

மாளிகையின் பேரழகு


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி


33. செவ்வானம்

தோற்றுப் போகும்

வண்ண விளக்கொளி


ரவிஜி


34. ஒளிரும் மாளிகை 

கொஞ்சம் இருளில் மூழ்கியது 

வரி ஏய்ப்பு


மூ.மணி திருமுருகன்


35. ஒளிர்ந்திடும் மாளிகை 

நினைவிற்கு வருகிறது 

 அமாவாசை தினம் என்று 


அருணா ரகுராமன்


36. ஒளிரும் மாளிகை

மக்கள் மனங்களைக் கவர்கிறது

மர விளக்கு


பிரியங்கா மோகன்


37. பிரமாண்டமான கட்டிடம்

மக்களைக் கவர்ந்து இழுக்கிறது

கவர்ச்சிகரமான விளம்பரம் 


     அன்பு துரைசாமி


38. ஆடம்பரமான கட்டிடம்

நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது

சாலை வசதிகள்

     

அன்பு துரைசாமி


39. மின்னும்  மாளிகை

அச்சத்தை ஏற்ப்படுத்துகிறது

மின்கட்டணம்


கவிநிலவன்


40. ஆடம்பரமான கட்டடங்கள்

அதிகரிக்கப் படுகின்றன

மின் கட்டணங்கள்


கீழ்கரவை குலசேகரன் 


41. கூட்டம்  இல்லை

ஒளிரும் விற்பனைக் கூடம் 

எளியவர்க்கு இயலாது


மா.துரைசாமி


42. வசதியான மண்டபம் 

மின்மினிப் பூச்சிகளின் ஒளியில் 

பிரம்மாதமாக இருக்கிறது 


சுசி சுசேனு


43. கண்ணாடி மாளிகை

கண்ணைக் கவருகிறது 

காவலாளியின் ஆடை


கவித்தென்றல் சௌ.நாகநாதன்


44. மாளிகையின் அழகு

மனதிற்கு வேதனையைத் தருகிறது

வீதியில் பிச்சைகாரன்


செம்போடை சோழன்


45. உயர்ந்த மாளிகை

மிடுக்காய் சிறக்கிறது

உழைப்பாளர் செயல்


கு.கதிரேசன்


46. கண்ணாடி மாளிகை

கவர்ச்சிகரமாகத் தெரிகிறது

செந்நிற வானம்


எம் ஐ எம் அஷ்ரப்


47. ஆற்றல் படைத்த

அத்தனை மனிதரையும் இணைக்கிறது

திரையரங்கு


தி. கிருஷ்ணமூர்த்தி 


48. கண்ணைக் கவரும் கட்டடம் 

வண்ண விளக்குகளின் அழைப்பு 

விளம்பர உத்தி


முனைவர் பெ.வெற்றிநிலவன்


49. அழகான கட்டிடம் 

கண்ணைக் கவரச் செய்கின்றது

நகைக்கடை பொம்மை


முத்தமிழ்ச்செல்வி 


50. கண்ணாடி மாளிகை

பளிச்சென்று கண்ணைக் கவர்கிறது

இரவில் நிலவொளி


ம.பழனிச்சாமி


51. வர்ண கட்டடங்கள்

 கடன் அட்டைகள் தேய்கின்றன ஏக்கத்தில் வாயிற் காவலாளி 


பெ. லோகேஸ்வரன்


52. வண்ண விளக்குகளை 

பிரதிபலிக்கின்றன 

 கண்ணாடிகள் 


கி. புஷ்பராஜ் 


53. வணிக வளாகத்திற்கு மக்களின் வருகை

தொடர்ந்த வண்ணம் இருக்கின்றதே

ஆடிமாத சலுகைகள்


ஆ.முருகேசுவரி


54. மாடி மாடி கட்டிடம்

மின்விளக்கால் மின்னுகிறது 

குடிசைகள் மறைந்தது 


சி,தமிழ்மணி


55. ஆடம்பர மாளிகையில்

அழகாய் நிரம்பி வழிகிறது

தொழிலாளியின் உழைப்பு


மகேஸ்வரி கண்ணன்


56. வணிக வளாகங்கள்

நாளுக்கு நாள் அதிகரிக்கிறது

இந்திய ரூபாயின் வீழ்ச்சி


கோ.கார்த்திகா கண்ணன்


57. விளக்கொளியில் கட்டடம்

மக்களின் பேசுபொருளாக உள்ளது

நகரத்தின் வளர்ச்சி


ராஜலட்சுமி சுபாகரன்


58. அரண்மனை பிரமாண்டம்

அனைவரையும் கவர்கிறது

உள்ளே விளக்கொளி


கே.கோவிந்தன் வாலாஜா


59. உயர்ந்த மாளிகை

பயத்தைத் தூண்டுகிறது

மக்கள் பேரணி


இஸ்ஹாக் றிஸ்வான்


60. கட்டிடத்தின் அமைப்பு

கண்களைக் கவர்ந்திழுக்கிறது

மின் குமிழ்களின் வெளிச்சம்


ஐ.துஷ்யந்தன்


61. ஆடம்பர அங்காடி 

கண்களையும் மனதையும் கவர்கிறது

வண்ண விளக்குகளால் மின்னுகிறது 


வள்ளல் இராமமூர்த்தி 


62. வணிக வளாகங்கள்

நாட்டில் அதிகரித்து வருகின்றன

சிற்றங்காடிகளின் மூடு விழா


மு.நாகராஜன்


63. விண்ணுயர் கண்கவர்

கட்டிடமாயிரம் கட்டினான்

மண்குடிசை தொழிலாளி


ராமசாமிநாதன்


64. பிரம்மாண்டமான வளாகம்

அதிர்ச்சி அளிக்கிறது

பொருட்களின் விலை


இதயம்


65. மாலை நேர அலுவலகம்

பரபரப்பாக இயங்குகிறது

வளாக தேநீர்கடை


நெல்லை ரியாத்


66. வணிக வளாகம்

மின்னொளியில் மிளிர்கிறது

நடிகையின் முகம்/ய


கவிஞர் புஷ்பா குமார்


67. கண்ணாடிக் கட்டிடம்

பளிச்சென்று தெரிகிறது 

ஒளிரும் விளக்கு 


நழீம் ஹனீபா


68. மின்னொளி மாளிகை

பிரகாசமாய் இருக்கிறது

பௌர்ணமி நிலா


சோ. ஸ்ரீதரன் 



Post a Comment