ஹைக்கூ கவிதைகள்
1. மலை அடிவாரம்
அழகாய் காட்சியளிக்கிறது
ஒற்றை வீடு.
மூ.மணி திருமுருகன்
2. மலையடியே வீடு
மனதிற்கு இதமான
மூலிகை மணம்
சிவகாமசுந்தரி நாகமணி
3. மலையின் தொடர்ச்சி
நீண்டுகொண்டே செல்கிறது
ஒற்றையடிப் பாதை
மலர் மைந்தன்
4. மலைச் சரிவு
மெல்ல வளர்கிறது
குடியிருப்புகள்
புஷ்பா குமார்
5. உயர்ந்த மலை
அடிவாரம் அழகாய் காட்சியளிக்கிறது
இயற்கை வீடு
முத்தமிழ்ச்செல்வி
6. பசுமை புல்வெளி
அழகைக் கூட்டுகிறது
இயற்கைக் காட்சி
தஞ்சை கோ பாலசுப்ரமணியன்
7. தனிமையில் வீடு
துணையாக நிற்கிறது
மலை
அருணா ரகுராமன்
8. பள்ளத்தாக்கில் புல்வெளி
சரிவாக அமைந்துள்ளது
வீட்டின் கூரை
'கண்மணி'-கண்ணன்.
9. மலைப்பிரதேச வீடு
மனதைக் கவர்கின்றது
பசுமை சூழ்ந்த பாதை
சங்கர்குரு பழனிச்சாமி
10.இயற்கை எழில்/
இன்பமளிக்கிறது/
தாயின் தாலாட்டு!!
கே.கல்பனா
11. வீட்டில் இல்லை ஆட்கள்
பயமின்றி வசிக்கின்றன
கூடு கட்டியப் பறவைகள்
சாக்கை.பொன்னழகு
12. மலையடிவாரத்தில் வீடு
பாதுகாப்பின்றி காணப்படுகிறது
பறவையின் கூடு
சுமி முருகன்
13. பசுமைப் பொழில்
பாதை. நீள்கிறது
பாங்கான வீடு
எஸ்.சந்திரிகாஷண்முகம்
14. வானுயர்ந்த மலை
அமைதியாக காட்சியளிக்கிறது
புல்வெளியில் வீடு
சு.கேசவன்
15. இயற்கை காட்சி
மனதை மிகவும் கவருகிறது
அழகிய வீடு
உமா பாலகிருஷ்ணன்
16. நீண்ட மலைத்தொடர்
அழகாய் இருக்கிறது
பசுமைப் புல்வெளி
அ. நாராயணசாமி
17. பிடிமானம் இல்லாத மலைச்சரிவு
பார்க்க அச்சத்தை ஏற்படுத்துகிறது
பள்ளத்தாக்கு
நாகை. ஹாஜா
18. ஒத்தையடிப் பாதை
மிகவும் நீளமாக இருக்கின்றது
மலைத் தொடர்
மணிகண்டன் அய்யப்பன்
19. மலைகிராம வீடுகள்
பாசம் பிடித்து காணப்படுகின்றன
மலையருவியின் பாதை
தாழை .கு. சக்திவேல்
20. பசுமைப் புல்வெளி
மிகவும் அழகாக இருக்கிறது
ஓட்டு வீடு
பா.இராமர் , தேனி
21. புல்வெளியைப் பாதை
இரண்டாகப் பிரிக்கிறது
மலையினை பள்ளத்தாக்கு
கோவை ஆறுமுகம்
22. மலையோரப் பாதை
இரண்டாகப் பிரிந்து செல்கிறது
ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பம்
பொன்னி துரையப்பன்
23. பசுமை எழில்
கொஞ்சி விளையாடுகிறது
சிட்டுக்குருவி
கடலரசி
24. ஒற்றை வீடு
அச்சத்தைத் தருகிறது
விலங்குகளின் நடமாட்டம்
ஏரூர் ஆஸாத் கமால்
25. ஒற்றை வீடு
ரம்மியமாக காட்சி தருகிறது
தூரத்து மலையருவி
கோ.கார்த்திகா கண்ணன்
26. பாரிய மலை
தூரத்தில் தெரியும்
அடர்வனம்
Dr ஜலீலா முஸம்மில்
27. மலையகம் அழகு
பசுமைச் சூழல் இனிமையே
முகப்புப் பூச்செடிகள்
பொ.முத்துராக்கு
28. மலையின் புரட்சி
புல்வெளியில் மகிழ்ச்சி
பாதுகாப்பற்ற வீடு
ஐ.எல்.எஸ். ஜாரியா
29. மலைக் கிராமம்
ஆரேக்கியமாக வாழ வைக்கிறது
தூய காற்று
ப.சொக்கலிங்கம்
30. மலைக்கிராம வீடுகள்
ஆங்காங்கே நெருக்கமின்றி காணப்படுகின்றன
ஓங்கிவளர்ந்த மரங்கள்
பிரேமா ரமணி
31. இயற்கை எழில் கொஞ்சும்
அமைதி செழிக்கும் இல்லம்
வாழ ரம்மியமான சூழல்
சி,தமிழ்மணி
32. மலைத்தொடர்
மேலே கடந்து போகும்
வானில் மேகங்கள்
க.குணசேகரன்
33. உயர்ந்த மலைகள்
உயர்வில்லை வாழ்க்கை
குடிசைவாசிகள்
சென்னிமலை அ.சீனிவாசன்
34. மரத்திலான வீடுகள்
மிகவும் அழகாக கட்டப்பட்டிருக்கின்றன
பசுமைப்புல்வெளிகள்
ச. துஸ்யன்
35. மலையடிவாரத்தில் வீடுகள்
ஆங்காங்கே தென்படுகின்றன
சூரிய மின்விளக்குகள்
மு.நாகராஜன்
36. பசுமையிள் பிள்ளையென
மலையின் காலடியில்
பூமியின் மேனியில் புதுவாழ்வு.
இளையவன் சிவா
37. மலையில் பாறை
உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது
திருவள்ளுவர் சிலை
அன்பு துரைசாமி
38. பசுமையான புல்வெளி
அழகாய் காட்சியளிக்கிறது
மலை முகடுகள்
அமுதா.ரா
39. பெரிய மலைகள்
சிறிதாய் ஆயின
மர வீடுகள்
இரமணி ராஜன்
40. இயற்கையான காற்று
தூய்மையாக இருக்கின்றது
பசுமை தாவரம்
மங்கையர்க்கரசி
41. ஒற்றையடிப் பாதை
தெளிவாகத் தெரிகிறது
உயர்ந்த மலை
ராதாமணி
42. மலையோர புல்வெளி
உள்ளத்தை கவர்கிறது
பண்ணைவீடு
ஜெய வெங்கட்
43. அழகிய பண்ணைவீடு
வந்து வந்து போகின்றன
வளர்ப்புத் தேனீக்கள்
வ பரிமளாதேவி
44. பசுமையான சூழல்
மனதுக்குள் இதமளிக்கிறது
இளமைக் காதல்
எஸ்.எம்.சலீம்
45. வீட்டினருகே மரங்கள்
உயரமாக தெரிகிறது
விண்ணைமுட்டும் மலைக்குன்று
கவிநிலவன்
46. இயற்கை அழகு
இதயம் மகிழ்கிறது
விலையில்லா வைத்தியம்
ஜெசிக்குமார்
47. நீலவானமும் மலையும்
இயற்கை அழகில் விரிகிறது
பச்சைப் புல்தரை
பஞ்சநாதன் சின்னா
48. மலைக் கிராமத்தின் செழுமை
மலைப்பாய் இருக்கிறது
வெளியூர் மக்களுக்கு
தென்கரை தாயுமானவன்
49. சுத்தமானப் பாதை
பயணத்திற்கு வசதியாக உள்ளது
அதிவேகத் தொடர்வண்டி
மகாராணி மண்டோதரி
50. உயர்ந்த மலை
சரிந்த நிலையில் காட்சியளிக்கிறது
பச்சை வயல்
எம் ஐ எம் அஷ்ரப்
51. ஒற்றையடிப் பாதை
மலையைச் சுற்றி வருகிறது
இரைதேடும் பறவை
ஆ.முருகேசுவரி
52. உயர்ந்த மலை
சரிந்த நிலையில் காட்சியளிக்கிறது
பச்சைப் புல்வெளி
எம் ஐ எம் அஷ்ரப்
53. பசுமையான புற்தரை
மனதைக் கவர்கிறது
மலைத் தொடர்
நழீம் ஹனீபா
54. அழகான பறை
ஆபத்தை அறியாத இல்லம்
கண்களுக்கு
குளிர்ச்சியான பசுமை
மறுமலர்ச்சி பாலகுருசாமி
55. புல்வெளி தரை
சரிந்து காணப்படுகிறது
வீட்டின் கூரை
கி.மணிவாசகன்
56. கூடாரத்தின் கூரை
சரிவாக உள்ளது
புல்வெளி
கு.கதிரேசன்
57. மலையடியோரம் மனையாளருகில் மகிழ்வானமனையிது காண்
அசோக்குமார் முத்து
58. மலையோர வீடு
இதமாய் இருக்கிறது
மயில் நடனம்
செல்லையா வாமதேவன்
59. மலையடி வீடு
அழகாக இருக்கின்றது
இயற்கைக் காட்சி
ம.ஞானசம்பந்தன்
60. மலையின் அழகு
மலைக்க வைக்கிறது
தொடு வானம்
கவியருவி ஜோதிபாரதி, தேனி.
61. மலையோர வீடு
தனியாக இருந்திடும்
தாயில்லா ஆட்டுக்குட்டி
பாண்டி செல்வி கருப்பசாமி
62. பண்ணை வீடு
ஏகாந்தமாய் இருக்கிறது
பசுமைப் பிரதேசம்
கலைத்தூறல்கள்
63. பண்ணை வீடு
ரசிக்கும்படி உள்ளது
தஞ்சை ஓவியம்
கவிதா அசோகன்
64. தடை செய்யப்பட்ட சுற்றுலாத்தளம்
ஊடுருவிச் செல்கிறது
ஒற்றையடிப் பாதை
இஸ்ஹாக் றிஸ்வான்
65. சரிவில் மரங்கள்
அடர்ந்து காணப்படுகின்றன
மலையடிவாரத்தில் குடில்கள்
அருண்மொழி
66. மலைகளின் உச்சி
எட்டாத உயரத்தில் உள்ளன
வானத்து மேகங்கள்
ம.பழனிச்சாமி
67. பசுமை புல்வெளி
படர்ந்த வண்ணம்
வெற்றிலை கொடி
சோ. ஸ்ரீதரன்
68. பசுமை புற்கள் கண்டும்
இரைமேய மனமில்லை
மலை இடுக்கில் வரையாடு
நெல்லை ரியாத்
69. மலையடி வாரம்
போகப் போக குறைகிறது
பசுமை காடுகள்
மகேஸ்வரி கண்ணன்
70. மலைவாழ் வீடு
அழகு சேர்த்து கொண்டிருக்கிறது
புல் வெளிகள்
மு.பபித்தா
71. மலையோரப் பாதை
மலையையும் தாண்டிச் செல்கிறது
மனிதனின் பேராசை
செண்பக ஜெகதீசன்
72. உயர்ந்த மலை
ஊர்ந்து செல்கிறது
ஒத்தையடி பாதை
முத்தூர் பாக்யதாசன்
73. மலையடிவார கிராமம்
இலவசமாக கிடைக்கின்றது
தூய்மையான காற்று
சாந்தகுமாரி
74. இயற்கை எழில்
மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது
குழந்தையின் மழலை
மகாராணி மண்டோதரி
75. மலை அடிவாரம்
பசுமைவெளியில் தேடல்
மூலிகைச் செடிகள்
இரா. வேணு கோபாலகிருஷ்ணன்
76. மலையோரம் முகில்கள்
அலைபாயும் உள்ளம்
பசுமை வீடு
கிரிஜா சண்முகரத்தினம்
77. வான் தொடும் மலைப்பாறை
பசுமை புல்வெளி
விழும் தற்கொலை பறவைகள்
பார்வதி சத்தியநாராயணன்
78. மலையக வீடுகள்
மண்சரிவினால் முற்றாக
அழிகின்றன
வளமான பணப்பயிர்கள்
கவிநிலா மோகன்
79. பசுமைச் சூழல்
அழகாய் இருக்கிறது
கட்டிய வீடு
கிருஷ்ணகுமார்
80. வானத்தில் மேகம்
மலையை உரசுகிறது
உயர்ந்த மரம்
ஓவியர்.பால. மணிகண்டன்
81. மலையடிவாரம்
சீராக இருக்கிறது
தட்பவெப்பம்
இதயம்
82. மலை பாறைகள்
உறுதியாக காணப்படுகின்றன
மர வீடுகள்
கி. புஷ்பராஜ்
83. மலைச் சாரல்கள்
மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறன
மலர்ந்திருக்கும் பூக்கள்
கீழ்கரவை குலசேகரன்
84. பாதையெங்கும் பசுமை
எளிமையான இல்லங்கள்
என்றுமிதனை காத்திடுவோம்
வி.ராணி
85. மலையில் பசுமை
விட்டுவிட்டு இருக்கின்றன
அடிவாரக் குடிசைகள்
ஜெயபால் வி.பி
86. வானுயர்ந்த மலை
வருத்தத்தை தருகிறது
சாலை விரிவாக்கம்
செம்போடை சோழன்
87. அழகிய சூழலில் வீடு
தனியான பாதை
மகிழ்ச்சியில் பறவைகள்
பெ.லோகேஸ்வரன்
88. மலை அடிவாரம்
மறைத்த படி இருக்கிறது
மரப்பலகை வீடு
ஐ.துஷ்யந்தன்
89. விழியோரக் காட்சி
தொலைதூரம் செல்கிறது
தூரதரிசனம்
பா.தர்மசீலன்
90. அழகான வீடு
பயமாக இருக்கிறது
பாதுகாப்பில்லாத பாறை
அ.பன்னீர்செல்வம்.
91. நீண்ட பாதை
அழகாய் இருக்கிறது
பச்சைப் புல்வெளி
கோபிநாதன் ஶ்ரீ
92. மலைமுகட்டில் பஞ்சு மேகம்
பார்க்க அழகாய் உள்ளது
பசுமைப் புல்வெளி
கே.கோவிந்தன் வாலாஜா
93. பசுமை நிறைந்து
காட்சி அளிக்கிறது
கல்லுக்குள் ஈரம்
மு.அசோக்குமார்

Post a Comment