ஹைக்கூபோட்டி_75ல் பாராட்டுச் சான்றிதழ் பெறும் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. மழைக்கால இரவு
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
தவளைகளின் சத்தம்
தனம் மீனாட்சிநாதன்
2. மழைக்கால இரவு
மிக இதமாக இருக்கிறது
அம்மாவின் அணைப்பு
Dr ஜலீலா முஸம்மில்
3. பசுவிடம் கன்றுக்குட்டி
பால் குடிக்கிறது
பச்சிளம் குழந்தை
அ. நாராயணசாமி
4. மழைகால இரவு
சேற்றில் சிக்காமல் கடக்கிறது
நிலவொளி
மதுரகவி
5. இரவெல்லாம் பெய்த மழை
பாரம் கூடுகிறது
குலைத் தள்ளிய வாழைமரம்
ச. இராஜ்குமார்
6. மழைக்கால இரவு
மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது
மனையாளின்அணைப்பு
கீழ்கரவை குலசேகரன்
7. தவளையின் பாடல்
வளைந்து வருகிறது
இரைதேடும் பாம்பு
சக்தி அருளானந்தம்
8. தாய்ப் பாசம்
நன்றியை காட்டுகிறது
நாய்
பாரதி மைந்தன்
9. பாலூட்டும் அன்னை
அளவுக்கு அதிகமாகச் சுறக்கின்றது
தாய்மை உணர்வு
மணிகண்டன் அய்யப்பன்
10. மழையழைக்கும் தவளை
தாமதமின்றி உடன் வந்திடும்
மகிழ்ச்சியுடன் பாம்பு
செண்பக ஜெகதீசன்
11. மழைக்கால மின்வெட்டு
இரவு முழுவதும் தொடர்கிறது
கொசுக்கடி
கோவை சரவணன்
12. கோலத்தில் பூசணிப்பூ
அழகாய்த் தெரிகிறது
முன்பனிக் காலம்
கலாராணி லோகநாதன்
13. காவலிருக்கும் நாய்
மெல்ல நடுங்குகிறது
மழைக்கால இரவு
ஐ.தர்மசிங்
14. திண்ணையில் படுத்திருந்த தாத்தாவை
வீட்டினுள் அழைத்துச் சென்றாள் பேத்தி
மழைக்கால இரவு
செந்தூர் குமார்
15. வயல் எலி
அடிமண்ணை மேல் தள்ளுகின்றது
மண்புழு
கு.கதிரேசன்
16. பனி படர் இரவு
பார்க்க முடியவில்லை
பால் நிலா
சிவகாமசுந்தரி நாகமணி
17. மழைத் தூறல்
பரவலாகக் காணப்படவில்லை
பொருளாதார வளர்ச்சி
கவிதா அசோகன்
18. எத்தனைக் கார்காலம்
இப்படியே கழியும்?
வருவாயோ பொன்வண்டே!
ஸ்ரீவி.முத்துவேல்
19. பிறந்த குழந்தைக்கு
பால் புகட்டமுடியவில்லை
வாடகைத் தாய்
இராஜா.ரமேஷ்
20. நாளை நெல் அறுவடை
இரவெல்லாம் விவசாயிக்கு வேதனை
தொடர்கிறது கனமழை
தஞ்சை விஜய்
21. தொப்புள்கொடி உறவுகள்
அன்பைத் தொலைத்து நிற்கின்றன
முதியோர் இல்லங்கள்
ம.பழனிச்சாமி

Post a Comment