ஹைக்கூ - Hykoo

 


ஹைக்கூ போட்டி 84ன் ஹைக்கூ கவிதைகள் 

1. மழை மேகங்கள்

ஒன்றுதிரண்டு வருகின்றன

காற்றில் குப்பைகள்

           மலர் மைந்தன்

2. மேகத்தின் நோக்கம்  

மழை வரும் 

ஆனால் வராது 

            சி,தமிழ்மணி

3. கருமேக கூட்டம் 

ஆங்காங்கு திரண்டிடும்

 மந்தை ஆடுகள் 

             பாண்டிச்செல்வி கருப்பசாமி 

4. வானில் மேகங்கள் 

நகர்ந்து செல்கின்றன 

ஆற்றில் நீர் 

           ச.லதாதேவி

5. கருமேகக் கூட்டம்  

தரை இறங்கத் தயாராக 

பறக்கும்  மயில்கள் 

            கவி நிலா மோகன்

6. மழைப்பொழிவு

அதிகமாக இருக்கின்றது

வானில் கருமேகம்

           சங்கர்குரு பழனிச்சாமி

7. பசுமையான மரங்கள்

துல்லியமாகத் தெரிகிறது

குளத்தில் நீர்

           சுமி முருகன்

8. பெய்யும் மழை

விடாது தொடர்கிறது

தூரத்தில் இடியோசை

           ஏரூர் ஆஸாத் கமால்

9. திரளும் மேகங்கள்

விரைந்து கூடுகின்றன

பட்டிதிரும்பும் ஆடுகள்

          ஜெய வெங்கட்

10. வான் மேகங்கள்

ஆற்றில் கிடக்கின்றன

எருமை மாடுகள்

            சாக்கை.பொன்னழகு

11. கருத்த மேகங்கள்  

வானத்தில் விஞ்ஞானத்தால் விதைக்கப் படுகிறது

மழை 

            அருணா ரகுராமன்

12. கார்மேகங்கள்

கடந்து செல்கின்றன

விவசாயின் சோகங்கள் 

              சுஜாதா அருணாச்சலம் 

13. தூரத்தில்  இடியோசை

விடாது பெய்யும்

மழை தொடர்கிறது

           உஷா வரதராஜன்

14. மழையின் தாக்கம்

தொடர்ந்து  அதிகரித்து வருகிறது

குளத்தில் நீர்

            ஜெயபால் வி.பி.

15. சோகத் தடங்கள்

நிலத்தில் பதிந்துள்ளன

வான்  வெடிப்பு

          வ.பரிமளாதேவி

16. வானமும் பூமியும்

தொடு வானத்தில் இணைகின்றன

நீர் மேகம்

          விஜயா குமரன்

17. நிலத்தில் நிழல்

படர்ந்த வண்ணம்

வானத்தில் கருமேகங்கள்

           சோ.ஸ்ரீதரன்

18. ஓடும் மேகங்கள்

ஒன்றோடொன்று இடித்துக் கொள்கின்றன

மேயும் மாடுகள்

            கவியருவி ஜோதிபாரதி

19. வானில் கருமேகங்கள்

குறைவாக இருக்கின்றன

நீர்நிலைகள்

            அ.நாராயணசாமி

20. கார் மேகங்கள்

ஒன்று கூடுகிறது

மக்களின் பலவீனம்

           எஸ்.எம்.சலீம்

21. கார்மேகத் திரட்சி

மெல்ல ஆயத்தமாகிறது

மயிலின் நடனம்

            விஜயசாரதி

22. வானில் மேகங்கள்

ஒன்று கூடுகின்றன

மந்தையில் ஆடுகள்

           மகேஸ்வரி கிருஷ்ணசாமி

23. நின்ற மழை

விடாமல் தொடர்ந்தபடி

தவளை ஒலி

          சிவகாமசுந்தரி நாகமணி

24. மழை மேகங்கள்

நாலா பக்கமும் கலைகின்றன

பறவைகளின் கூட்டம்

           சு.கேசவன்

25. தொலைதூரப் பதிவுகள் 

தெளிவற்று இருக்கின்றன

நிலப்பரப்பில் உருவங்கள்

           கோவை ஆறுமுகம்

26. கார்மேகக் கூட்டம்

மழை பொழியக் காத்திருக்கிறது 

வறண்ட நிலம்

           தனம் மீனாட்சிநாதன்

27. வானில் மேகங்கள்

கலைந்து செல்கிறது

மந்தையில் ஆடுகள்

                ஆ கணேசன்

28. மாசிலா பூமி 

மனித நடமாட்டமற்ற அமைதி

ஓவியம் 

            கந்தநாதன் மஸ்கட்

29. வான்மேகக் கூட்டம்

மிக நன்றாகத் தெரிகிறது

நீரில் நிழல்

           செண்பக ஜெகதீசன்

30. கார்மேகங்களின் மோதலில் மழை

இடை விடாச் சத்தம்

நீரில் தவளைகள

            பிரேமா ரமணி

31. வானம் பார்த்த பூமி

இன்னும் மாறவில்லை

வறண்ட நிலம்

             தட்சணா மூர்த்தி

32. கருமுகில் நீரில்

நிழலாகத் தெரிகிறது

நீரோடு நகர்கின்றது

             பஞ்சநாதன் சின்னா

33. கூடிய கார்மேகம்

தரையில் விழுந்து நொறுங்கியது

ஆலங்கட்டி மழை

              வளருங்கவி அமுதன்

34. கார்மேகம்

காற்றினால் இடம் பெயர்கின்றது

காட்டுத் தீ

              கவிதா அசோகன் 

35. வானில் கருமேகங்கள்

கூட்டங்கூட்டமாக அசைகின்றன

சிறகடிக்கும் பறவைகள்

              Dr ஜலீலா முஸம்மில் 

36. மேகக் கூட்டங்கள்

ஒன்றுடன் ஒன்று உரசுகின்றது

தோட்டத்தில் பூக்கள்

             கே.கல்பனா

37. கருமேக கூட்டங்கள் 

காத்துக்கிடக்கின்றன 

குட்டைகள் 

               எம்.எம்.நிஜாமுதீன்

38. மின்னல் ஒளி

மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது

நீல வானம்

             எம் ஐ எம் அஷ்ரப்

39. கார்மேகம் பூமியின் 

 தாகம் தீர்க்கிறது 

 வெயில் நேர இளநீர் 

            கி.புஷ்பராஜ் 

40. அடைமழையும் சிறு தூறலும்

பாரபட்சம் பார்க்கின்றன

வானத்து மேகங்கள்

             மதுரகவி

41. தாலாட்டும் வானம்

தள்ளாடும் மேகம்

கடல் அலை

           கிரிஜா சண்முகரத்தினம்

42. கருமேகக் கூட்டம்

வெடித்துச் சிதறிய மின்னல்

இருளில் வீடுகள்

            இரமணி ராஜன்

43. உழவனின் வியர்வை

மண்ணை ஆரத் தழுவுகிறது

கொட்டும் மழை

             ம.பழனிச்சாமி

44. தேங்கிய நீரில்

உருமாறிய வண்ணம்

வானில் மேகம்

             நாகலெட்சுமி இராஜகோபாலன்

45. கார் காலம்

கடும் மழையைப் பொழிகிறது

கரு மேகம்

             கீழ்கரவை குலசேகரன் 

46. நீல வானம்

நிலைமாறிக் கொண்டிர்க்கிறது

நீர் நிலைகள்

            செல்வராஜா கிருஷ்ணக்குமரன்

47. மேகங்கள் நகர்கின்றன

 நிலத்தில் இருள் படர்கின்றது இருப்பிடத்தை நோக்கி மிருகங்கள்

              பெ.லோகேஸ்வரன்

48. கரு'ணை மேகங்கள்

காடுகளைப் பராமரிக்கின்றன

பாதுகாப்பாய் உயிரினங்கள்

            அம்சத் இப்ராஹிம்

49. பருவ மழை

வருடம் தவறாமல் வருகிறது

கடலில் புயல் 

             அன்பு துரைசாமி

50. தூரத்தில் மழை

பார்த்து இரசிக்கும்படி உள்ளது

மறைந்த மலை

           செம்போடை சோழன்

51. மழைத்தூறல்

தரையில் வீழ்கிறது

பழுத்த இலை

          கு.கதிரேசன்

52. கரு மேகக் கூட்டம்

சூழ்ந்த படியே இருக்கிறது

மலைப் பிரதேசம்

           ஐ.துஷ்யந்தன்

53. ஒன்று கூடி நிற்கிறது

பூமியின் தாகம் தணிக்க

மேகக்கூட்டம்

           சூரியன்வேதா 

54. மழை பொழிவு

விவசாயி மகிழ்வு

சாலையோரவாசி அச்சம்

          படைப்பாளி பைரவி

55. கடல் வானைத் தொடுகிறது

வானம் தரையைத் தொடுகிறது

மனிதனால் இதயத்தை கூட தொடமுடியவில்லை

            யோ.கெனடி

56. மேகத்திலிருந்து மழை

பூமியை நோக்கி இறங்குகிறது

இரையை கண்ட பருந்து                 

              'கண்மணி'-கண்ணன்

57. சூழும் கருமேகங்கள்

நீரில் மிதக்கின்றன

எருமை மாடுகள்

             எஸ்.சந்திரிகா ஷண்முகம்

58. நீல வானம்

இரம்மியமாக காட்சி அளிக்கிறது

மலைத் தொடர்

             மு.நாகராஜன்

59. கருமுகில் கூடி

இருண்டு காட்சியளிக்கிறது

யுத்த பூமி

             செபா சவிரிமுத்து

60. சூல்கொண்ட மேகம்

கொட்டித் தீர்க்க தயாராக இருக்கிறது

கவலை கொண்ட மனசு

             புஷ்பா குமார்

61. மேகக் கூட்டங்கள்

ஒன்றோடு ஒன்று மோதியது

பொழியும் மழை

            மறுமலர்ச்சி பாலகுருசாமி

62. வறண்ட நிலம் குளிர

மிரண்டு வெடித்தூற்றுகிறது

திரண்ட மேகம் இருண்டு

            ராமசாமி நாதன்

63. வெண்பஞ்சு  திரள் 

ஓடியபடியே அழுகிறது

மழை

              சந்தனம் பத்மஸ்ரீ

64. தரையிறங்கிய மேகங்கள்

நதியாகி நகர்கிறது 

ஓடையில் மீன்கள்  

              ச.இராஜ்குமார்

65. மழைக்கான யாகத்தில்

மகிழ்ந்த வருண பகவான்

மழையாக மேகவெடிப்பு

             இரா.நாதன்

66. கருமை மேகங்கள்

முன்னோட்டம் பார்க்கிறது

மழை விடும் தூது

               எம்.சீனி இப்ராஹிம்ஷா(ஆந்திரா)

67. கார் மேகங்கள்

மெதுவாய் கலைந்துச் செல்கின்றன

கூட்டுப் பறவைகள்

            கோ.கார்த்திகா கண்ணன்

68. பலத்த காற்று 

திசை மாறிச் செல்கிறது 

மழை மேகம்

            நழீம் ஹனீபா

69. மழையின் 

முன்னறிவிப்பு

மேகக்கூட்டம்

             சூரியன்வேதா

70. இருளாய் மேகங்கள்

இரைந்து கலைந்து செல்கிறது

கூட்டமாய் பறவைகள்

              பொற்கேணி முளப்ஃபர்

71. மலைத் தொடர் 

சூழ்ந்து நிற்கிறது 

கார் மேகம் 

               நாகை. ஹாஜா

72. மலையை மூடிய மேகம்

தரையிறங்கியது 

வானத்து பறவைகள் 

              ச. இராஜ்குமார்

73. கார்மேகக் கூட்டம்

வேகமாய் இடம்பெயர்கிறது

பறவைக் கூட்டம்

             கலாராணி லோகநாதன்

74. இரவுநேர  வானிலே 

சூரிய ஒளிமறையவில்லை 

இந்த  அயல்நாட்டிலே

              செல்வி


0/Post a Comment/Comments