போட்டி எண் 76ன் வெற்றியாளர்கள் ஹைக்கூக்கள்
1. ஊசியிலை மரங்கள்
உயர்ந்து காணப்படுகின்றன
கட்டிடங்கள்
கி. புஷ்பராஜ் சேலம்
2. பெரிய வீடு
பாதுகாப்பாக இருக்கிறது
மதில் சுவர்
கி.மணிவாசகன்
3. அழகிய வீடு
ஆனந்தமாய் இருக்கிறது
உறவினர் வருகை
பா.இராமர்
4. ஒளிரும் விளக்குகள்
தெளிவாகத் தெரிகின்றன
வானில் மேகங்கள்
நழீம் ஹனீபா
5. ஆடம்பர வீடு
பார்க்க அழகாய் இருக்கிறது
பசுமைப் புல்வெளி
அ.நாராயணசாமி
6. அழகிய அரண்மனை
வியப்படைய செய்கின்றன
கூர்மையான மரங்கள்
கோவை சரவணன்
7. ஆடம்பரமான மாளிகை
அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறது
தேக்குமரக் கதவு
மு.நாகராஜன்
8. சொகுசு மாளிகை
பாதுகாப்புடன் இருக்கிறது
வெளிநாட்டு நாய்குட்டி
மலர் மைந்தன்
9. உயர்ந்த கட்டிடம்
நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது
இருசக்கர வாகனம்
ஓசூர் மணிமேகலை
10. ஆளில்லா வீடு
அச்சமூட்டுகிறது
வளர்ப்பு நாய்
'கண்மணி'-கண்ணன்
11. நீல வானின் மேகங்கள்
மலைக் கோவிலில் இறங்குகின்றன
அர்ச்சனைகள் பொருட்கள்
பொன்னி துரையப்பன்
12. ஒளிரும் விளக்குகள்
சூழலைப் பிரகாசமாக மாற்றுகின்றன
ஆதவனின் கதிர்கள்
கவிதா அசோகன்
13. அழகான கலைப்பொருட்கள்
வீட்டை அழகுபடுத்துகின்றன
வெட்டிய மரங்கள்
வ பரிமளாதேவி
14. பெரிய கட்டடம்
வெறுமையாக இருக்கிறது
பறவைகளற்ற வானம்
க.குணசேகரன்
15. அனைத்த விளக்கு
ஒளிரத் துவங்கியது
நகர்ந்தபடி மின்மினி
தட்சணா மூர்த்தி
16. அரண்மனை வீடு
ஆனந்தத்தைத் தருகிறது
மாசற்றக் காற்று
இஸ்ஹாக் றிஸ்வான்
17. அரண்மனை விளக்குகள்
ஒளிராமல் இருளிலே
ஓரமாய்க் காவலாளி குடிசை
சிவகாமசுந்தரி நாகமணி
18. சொகுசு வீடு
வரையறை வகுத்து நிற்கிறது
எல்லை கல்
ஆ.முருகேசுவரி
நடுவர் : ரேணுகா ஸ்டாலின்

Post a Comment