ஹைக்கூ - Hykoo


 ஹைக்கூ போட்டி எண் 78 ன் ஹைக்கூ கவிதைகள் 

1.      காதலின் சின்னம்

உயர்ந்து நிற்கிறது

வளர்ந்த மரங்கள்

ச.லதாதேவி

2. துடிக்கும் இருதயம்

அவளை(னை) ஞாபகப் படுத்துகிறது

காதலின் சின்னம்

ம.பழனிச்சாமி

3.காதல் சோதி

அணையாமல் உள்ளது

காதல் இருக்கும் வரையில்

சி,தமிழ்மணி

4. நினைவுச் சின்னம்

நிலைத்திருக்கிறது உறுதியாக

மாறாத காதல்

செண்பக ஜெகதீசன்

5. கட்டிடக்கலை

அதிசயமாக உயர்ந்து நிற்கிறது

காதல் மாளிகை

மகேஸ்வரி கண்ணன்

6. காதல் சின்னம்

தூய்மையாய் இருக்கிறது

அன்பினால் ‌உள்ளம்

பஞ்சநாதன் சின்னா

7. காதல் சின்னம்

பிரமிக்க வைக்கிறது

மாறாத அன்பு

பவானி செல்வராஜ்

8. அமரக் காதல்

நிலைத்து நிற்கிறது

தாஜ்மகால்

மலர் மைந்தன்

9. காதலின் சின்னம்

என்றும் அழியாது காக்கப்படுகிறது

சிற்பக் கலை

கீழ்கரவை குலசேகரன் 

10. சலவைக்கல் கட்டிடம்

காதலியின் மேல் வைத்த அன்புக்குச் சான்று

காண்போரை வியக்க வைக்கிறது

 வள்ளல் இராமமூர்த்தி

11. கவிஞனின் எண்ணம்

காதலின் சின்னம்

நிலைத்து நிற்கிறது இன்னும்

இர மணிகண்டன்

12. காதல் சின்னம்

அழகாய் காட்சி தருகிறது

நம்முடைய கட்டிடக்கலை

ச. கோட்டீஸ்வரன்

13. தாஜ் மஹால் நினைவில் நிற்கும்

நித்தம் அவள்தந்த நினைப்பு  

காதல் சின்னம்

வீரகனூர் ஆ இரவிச்சந்திரன்

14. அழியாத கோலங்கள்

நிசத்தில் நிற்கிறது

உண்மைக் காதல்

கடலரசி

15.காதல் சின்னம்

சாட்சியாகவே உள்ளது

மன்னர் ஆட்சி

பிரபு.ஐயாத்துரை

16, காதல் சின்னம்

கணக்கிலும் வருகிறது

ஏழில் ஒன்று

ஐ.துஷ்யந்தன்

17. காதல் காவியம்

அழியாமல் இருக்கிறது

தாஜ்மகால்

சு.கேசவன்

18. மதியம் மயங்கியது

தாஜ்மகால் அழகிலே

நிலவுக்கு தெரியாமல்

இரா.சி.மோகனதாஸ்

19. சலவைகல் மன்றத்தில்

இளைப்பாறும் காவியகாதல்

மும்தாஜ் ஷாஜகான்

செல்வம் இராமசாமி

20. தாஜ்மகால்

பார்த்து ரசித்து நிற்கிறேன்

சுற்றுலா விளம்பரம்

அன்பழகன் தேவமலர்

21. ஆக்ராவில் தாஜ்மஹால்

உலக அதிசயமாகும்

ஷாஜகான் மும்தாஜ் காதல்

Dr ஜலீலா முஸம்மில்

22. நிறம் மாறிக்கொண்டே வருகிறது

இன்றைய காதல்

அழியாத சின்னம் தாஜ்மகால்

Elango Kumar

23. யமுனை நதிக்கரையில் தாஜ்மகால்

ஏழு அதிசயங்களில் ஒன்றானது

எகிப்தின் பிரமிடு

பொன்னி துரையப்பன்

24. தாஜ்மகால்

பார்த்ததும் இரசிக்கச் செய்கிறது

சுற்றுலா விளம்பரம்

அன்பழகன் தேவமலர்

25. மாடங்களின் அழகு

ரசிக்க வைக்கிறது

புறாக் கூட்டம்

'கண்மணி'-கண்ணன்

26. காதலியின் நினைவு

நெஞ்சில் நிலைத்து நிற்கிறது

பழங்கால கட்டிடக்கலை

அ. நாராயணசாமி

27. சூரிய ஒளி

மாளிகையின் மேல் விழுகிறது

காதலர்களின் பார்வை

ஓவியர்.பால. மணிகண்டன்

28. கட்டிடக் கலையோ

காதல் சிற்பமோ

கொத்தனாருக்கே வெளிச்சம்

பா.குணசேகரன்

29. மும்தாஜ் கல்லறை

அடையாளமாகிறது

தாஜ்மஹால்

செந்தூர் குமார்

30. ஒருவனுக்கொருத்தி

பழந்தமிழ்ப் பண்பாடு

உலக அதிசயம்

செல்லையா வாமதேவன்

31. காதலரின் சின்னம்

காதலரின் மகத்துவத்தைச் சொல்கிறது

தாஜ்மகால்

ச.துஸ்யன்

32. அழகிய கல்லறை

உயிர்ப்புடன் இருக்கிறது

பிரியா காதல்

வடுவூர் கவிக்குயில்

33. அதிகாலைத் தாஜ்மகால்

அருமையாகக் காட்சியளிக்கிறது

நீருக்குள் படம்

                                    இரா. வேணு கோபாலகிருஷ்ணன்

34. காதலியின் நினைவு

மனதிலிருந்து அகல மறுக்கிறது

தாஜ்மகால் கட்டிடம்

மு.நாகராஜன்

35, காதலின் அடையாளம்

காலம் காலமாய் பேசப்படுகிறது

கட்டிடக்கலையின் நுட்பம்

அருண்மொழி

36. தவித்து போகிறது மனம்

தனித்து நிற்கும் தாஜ்மஹால்

தனிந்து போகிறது வெப்பம்

Boopathi

37. காதலின் சின்னம்

உலகுக்கே எடுத்துக் காட்டாக உள்ளது

இந்திய கட்டிடக் கலை

கவிதா அசோகன்

38. காதலின் சின்னம்

வியக்க வைக்கிறது

அரசின் வருமானம்

உடுமலை சே.ரா.முஹமது

39. அன்பின் எடுத்துக்காட்டாய

பளிங்கில் தாஜ்மஹால்

உள்ளிருக்குமோ!!சிவலிங்கம்

பார்வதி சத்தியநாராயணன்

40. பளிங்கு மாளிகை

சாட்சியாக நிற்கிறது

அழியாத காதலுக்கு

சென்னிமலை  அ.சீனிவாசன்

41. மும்தாஜ் மஹால்

தூசு தட்டப் படுகிறது

பழைய திரைக்கதை

க.குணசேகரன்

42. மும்தாஜ் மஹால்

வித்தியாசமாக காட்டப்படுகிறது

திரைப்படக் காட்சி

க.குணசேகரன்

43. தாஜ்மஹால்

கண்ணை கவர்கின்றது

கட்டிடக்கலை

டிவங்சோ மலாய்கவி 

44. தாஜ்மஹால் கட்டிடம்

பார்க்க வியப்பாக இருக்கிறது

எழிலான ஓவியம்

பா.இராமர் 

45. காதல் சின்னம்

தாஜ்மஹால் அந்தி வெயிலில்

புகையாய் மாசுவளி

பொ.முத்துராக்கு

46. தாஜ்மகால் கட்டிடம்

பார்க்க அழகாக இருக்கிறது

கலைஞனின் கைவண்ணம்

உமா பாலகிருஷ்ணன்

47. காதலின் நினைவுகள்

பளிங்குக் கற்களில் தெரிகின்றன

சமாதியில் புதைந்து

இரமணி ராஜன்

48. தாஜ்மஹால்

அம்சமாய் நிலைத்துள்ளது

காதல் கோட்டை

கே.கல்பனா

49. கல்லறை மாளிகை

காதலின் சின்னமாகிறது

ஷாஜகானின் பேரன்பு

கவியருவி ஜோதிபாரதி

50. காதல் அடையாளம்

அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது

பிரமாண்டமான தாஜ்மஹால்

நழீம் ஹனீபா

51. காதலனின் எண்ணம்

வானுயறச் செய்தது

காதலின் சின்னம்

மு.அசோக்குமார்

52. காதலியின் நினைவாகத் தாஜ்மஹால்

கட்டி ரசித்தான் ஷாஜஹான்

ஆக்ரா நதிக்கரையை அலங்கரிக்கிறது/

தென்கரை தாயுமானவன்

53. உயர்ந்த மாளிகை

நிலைத்து நிற்கிறது

காதல் தோல்வி

ஏரூர் ஆஸாத் கமால்

54. அந்திச் சூரியன்

ஒளிர்ந்து கொண்டிருக்கிறது

காதலின் சின்னம்

ரவிஜி

55. காதல் நினைவுகள்

ஒருபோதும் அழிவது இல்லை

நினைவுச் சின்னங்கள்

 அன்பு துரைசாமி

56. மும்தாஜ் கல்லறை

என்றும் நிலையாய்ச் சொல்கிறது

அழியாதக் காதல்

கு.கதிரேசன்

57. உண்மைக் காதல்

காலத்தால் என்றுமே அழியாது

தாஜ்மகால் கட்டிடம்

குறிஞ்சி நைனாமுகம்மது

58. நினைவுச் சின்னம்

உயிர்ப்புடன் நிற்கிறது

ஷாஜஹானின் காதல்

சரஸ்வதி ராசேந்திரன்

59. தாஜ்மகால்

காதலை நினைவுறுத்தி நிற்கிறது

பரிசுபொருள்

.முருகேசுவரி

60. உண்மைக் காதல்

உலக அதிசயமாவது ஆச்சரியம்

தாஜ்மகால்

சா.அம்சத் இப்ராகிம்

61. அடையாளச் சின்னம்

காதலர்கள் சாகலாம்

காதல் சாவதில்லை

கிரிஜா சண்முகரத்தினம்

62. காதலின் சின்னம்

அழியாமல் பராமரிக்கப்படுகிறது

சிற்பின் வேலைப்பாடு

கோவை சரவணன்

63. அழகை ரசிக்க

விடிந்தது பொழுது விரைவாக

தாஜ்மஹால்

தி.கிருஷ்ணமூர்த்தி

64. தாஜ்மஹால் கல்லறை

இன்னும் மரணிக்காமல் இருக்கிறது

உண்மைக் காதல்

மு.பபித்தா

65. அடையாள சின்னம்

அமைதியான சூழலில் இருக்கிறது/

மும்தாஜின் நினைவுகள்

பெ .லோகேஸ்வரன்

66. காதல் சின்னம் தாஜ்மஹால்

காலத்தால் அழியாது

உண்மைக் காதல்

செபா சவிரிமுத்து

67. காதல் சின்னம்

மிளிர்கிறது

காதலில்லை

யோ.கெனடி

68. காதலின் சின்னம்

கலை இழந்து கிடக்கின்றது

யமுனை நதி

பாண்டிச்செல்வி கருப்பசாமி

69.அழகிய கட்டிடும்

ஆழ்மனதில் காதல்

நினைவாக மாளிகை

மறுமலர்ச்சி பாலகுருசாமி

70. புதைந்த காதலி

எழுந்து நிற்கும் அதிசயம்

தாஜ்மகால்

ஓசூர் மணிமேகலை

71. பளிங்கு மஹால்

கண்ணைப் பறிக்கிறது

சூரிய ஒளி

கவித்தென்றல் சௌ.நாகநாதன்

72. காதல் சின்னம்

மிகுந்த கவலையைத் தருகிறது

ஷாஜகானின் மரணம்

செம்போடை சோழன்

73. மும்தாஜின் நினைவு

வாழ்ந்து கொண்டிருக்கின்றது

காதலர் தின வாழ்த்து அட்டை

டெலிகொம் அஜ்வத்

74. எழில்மிகு கற்கோட்டை

உலக அதிசயமாகத் திகழ்கிறது

காதற்கோட்டை தாஜ்மஹால்

தனம் மீனாட்சிநாதன்

75. காதலின் சின்னம்

கலையாமல் இருக்கிறது

நீலவான மேகம்

கோ.கார்த்திகா கண்ணன்

76. நிலவில்லா அந்திவானம்

பிறை சூடிக் கொள்கிறது

தாஜ்மஹால்

தங்கப்பாண்டி

77.முகலாய மன்னனின் காதல்

இன்றும் நிலைத்து நிற்கிறது

ஆக்ராவில் தாஜ்மகால்

சிந்தனை பாரதி

78. காதல் சின்னம்

கவனத்தை ஈர்க்கிறது

பரந்த வானம்

ராதாமணி

79. வெண்பளிங்குக் கட்டிடம்

ஒளிமங்கி வருகின்றது

மாசுபட்டக் காற்று

 பரிமளாதேவி

80. காதல் தோன்றிய நாள் முதல்

அழிக்க முடியா ஆன்மா

தாஜ்மஹால்

து.பா.பரமேஸ்வரி

81. தாஜ்மஹால் கட்டிடம்

கலை நயத்தோடு இருக்கிறது

மாமல்லபுரம் சிற்பம்

ஆ கணேசன்

82. அந்தி வெயிலை

அழகாக்கிக் கொண்டிருக்கிறது

இந்தக் கல்லறை

Seenivasavarathan

83. ஆணாதிக்கத்தின் அடையாளம்

பெண்ணொடுக்குமுறையின் மறைப்பு

புனையப்பட்ட புனிதம் தாச்மகால்

Karunanithi sutharam

84. தாஜ்மஹால்

அழகாக காட்சியளிக்கிறது

நதியோர நாணல்கள்

அமுதா.ரா

85. யமுனை ஆற்றங்கரை

காதற் பளிங்கு கரையில்

யௌவனயுவதி நித்திரை

 

Ramasamy Nathan

86. வாழும் காதலை எதிர்த்து

மான்றோரை போற்றுகிறது

மாய உலகின் அதிசயம்

சத்யா பாலகிருஷ்ணன்

87. தாஜ்மஹால் பராமரிப்பு

 பாராட்டும்படி இருக்கிறது

அழகிய கட்டமைப்பு

கோவை ஆறுமுகம்

88. விண்ணில் மறைந்தாலும்

இன்றும் மண்ணில் வாழும்

காதல் சின்னம் தாஜ்மஹால்

Selvi

89. யமுனை நதிக்கரை

உலக அதிசயம்

ஆக்ராவில் தாஜ்மஹால்

ஜெய்புநிஷா ரியாஸ்

90. அதிசயமாய் தோன்றுதே

சோகத்தைச் சுமந்து

காதல் மாளிகை

Lakshmi Kathirvel

91. உயர்ந்த தூண்கள்

உறுதியாக நிற்கின்றன

உண்மைக் காதலர்கள்

திருமகள் சிறிபத்மநாதன்

92. தாஜ் மஹால்

உலக அதிசயம்

ஷாஜகானின் காதல்

இதயம்

93. மாளிகையின் தோற்றம்

பார்த்ததும் நினைவுக்குவருகின்றது

காதலின் சின்னம்

ம.ஞானசம்பந்தன்

94. காதலின் சின்னம்

காண்போரைக் கவர்கிறது

பளிங்குக் கல்.

இராஜா. ரமேஷ்

95. சுற்றித் தூண்கள்

நிலைத்து நிற்கிறது

காதற் பரிசு

பிரியங்கா சிறிமோகன்

96. காதல் சின்னம்

அழிவில்லாமல் நிலைத்து நிற்கிறது

யமுனா நதி

சுமி முருகன்

97. தாஜ்மகாலைப் பார்த்ததும்

நினைவுக்கு வருகிறது

யமுனை நதிக்கரை

நாகை.ஹாஜா

98. காதல் அதிசயம்

பிரமிப்பூட்டுகிறது

கட்டிட நேர்த்தி

எம் ஷாஹுல் ஹமீது

98. காதல் சின்னம்

வந்து வந்து போகும்

தாஜ்மகால் பாடல்

Kavathaiur palaniyandi kanagaraja

99. பழங்கால காதலைப்

படிக்காமலேச் சொல்கிறது

அழகிய தாஜ்மகால்

புவனேஸ்வரி சண்

100. கல்லறையின் மேல்

பளிங்குக் கட்டிடம்

ஈர்க்கிறது உலகை

தென்னன்

101. மெல்ல மெல்ல மறையும்

அந்திச் சூரியன்

இறந்தவர் பற்றிய பேச்சு

நெல்லை ரியாத்

102. தாஜ்மகால்

இரசிக்க முடியவில்லை

கட்டிடக் கலைஞர் கொலை

சிவகாமசுந்தரி நாகமணி

103. கட்டிடத்தில் பளிங்குக் கற்கள்

அதிகமாக காணப்படுகின்றன

காற்றில் மாசுக்கள்

கி. புஷ்பராஜ்

104. தியாகத்தின் சின்னம்

உலகிற்கே அதிசயமாய் திகழ்கிறது

தாஜ்மஹால்

தங்க.ஜான்பீட்டர்

105. உலக அதிசயம்

மங்கலாகத் தெரிகிறது

பின்னனியில் வானம்

வே.சுகந்தி

106. மங்கிய காதல் சின்னம்

நினைவு படுத்துகிறது

கட்டிடப்பொறியாளர்களின் கைவண்ணம்

வெண்ணிலா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1/Post a Comment/Comments

  1. நள்ளிரவு. சாலை ஓரத்தில்
    எத்தனை மனிதர்கள் உறக்கத்தில்
    மானுடத்தின் காதல் சின்னம்

    ReplyDelete

Post a Comment