ஹைக்கூ_கவிதைகள்
1. ஊரடங்கு காலம்
முடிவடைவதாகத் தெரியவில்லை
நோய்த்தொற்றின் தீவிரம் . . !
2. பள்ளிச் சீருடை
ஆங்காங்கே கிழிந்துள்ளது
பாடப்புத்தகம்!
3. அஸ்தமிக்கும் சூரியன்/
அழகாக காட்சியளிக்கிறது/
நீரோடைக்குள் நிலா!
4. இருபத்திநான்கு மணிநேர மருத்துவசேவை
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
ஊரடங்கு அமல்!
5. புகைப் பழக்கம்
சற்றும் குறைவதாக இல்லை
காதலியின் நினைவு!
6. புகைப் பழக்கம்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது
ஆரோக்கிய சீர்கேடு!
7. சிட்டுக்குருவிகளின் மௌனமொழி
கலைத்து விட்டுக் கடக்கிறது
சட்டென வீசிய பெருங்காற்று!
துறவியின் கூடாரத்தை/
சுற்றிச் சுற்றி வருகிறது/
பூஞ்சோலையில் ஒரு வண்டு!
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment