தாய்மாமன் சீதனமே தயக்கமென்னடி
அந்திமாலை நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
ஒத்தையடிப் பாதையிலே
ஒய்யாரமா போறவளே . . !
உன் இடுப்பு கொசுவத்திலே
என இழுத்து சொருகிகிட்டு
சித்தாட கட்டின நீ
சிாிச்சுகிட்டே போறியேடி . . !
செவ்வரளி பூ எடுத்து
மாலை கட்டி தாரேன்டி
மாமன் இவன் தோள் சாய
மான் விழியே வாயேன்டி . . !
ஓடக்கரை ஒரம் வாடி
உட்காா்ந்து பேசலாம்டி
ஒரப்பாா்வை பாா்த்தே நீ
ஓதுங்கியும் தான் போகாதடி . . !
குலசாமி கோவிலில் போய்
குறி ஒன்னு கேட்டேன்டி
நெனச்ச குறி பலிச்சதடி
நித்திரையும் தொலைஞ்சதடி. . !
தைமாசம் பொறந்ததடி
தாலி செஞ்சி வாரேன்டி
தாய்மாமன் சீதனமே நீ
தள்ளி நிக்க தவிக்கிறேன்டி . . !
சீா் செனத்தி வேணான்டி
சிங்காாி நீ போதுமடி
மாிக்கொழுந்தே நீ
பக்கம் வந்தா மாமன்
நெஞ்சு மயங்குதடி . . !
தள்ளிப்போட தடை என்னடி
அள்ளி நீயும் அணைக்க வாடி
கூரப்பட்டு சேலை கட்டி
என் சோடியாக வாழ வாடி . . !
உசுருகுள்ள பொத்தி வச்சு
உத்தமி உன்ன சுமப்பேனடி
ஒத்தயடிப் பாதையிலே
ஒய்யாரமா போறவளே . . !
தாய்மாமன் சீதனமே உனை
தழுவ மனம் தவிக்குதடி
தாலி தந்து தாரமாக்கி
கிறங்கிடவே துடிக்குதடி . . !
தாலி தந்து தாரமாக்கி
கிறங்கிடவே மனம் துடிக்குதடி . . !
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment