புதுமைப்பெண்ணே



#புதுமைப்_பெண்_நீ

பூமித்தாயின் புதுமைப் 

புதல்வியே..!

ஆதிசக்தியானவளே

அகிலத்தின் முதல்வியே ..!

பொல்லாங்கு கண்டால்

பொங்கி எழும் பூகம்பமாய் ..!

புவி ஆள்பவளே 

இருள் போக்கி ஒளியேற்றும்

குடும்பத்தின் தலைவியே ..!

ஆணுக்கு பெண் நிகரென

விவசாயம் முதல் விஞ்ஞானம்

வரை வெற்றி கண்டவளே

தனக்கென வாழாது 

தன் குடும்பத்திற்காய் உருகும்

உன்னத அழகியே ..!

சாதனை புரிந்திட 

துடித்திடும்..!

உந்தன் கரந்தனை 

கட்டி  விளங்கிடும்..!

சாத்தான்களை சரித்து 

ஒழித்தே .!

சரித்திரம் படைத்திட நீயும் 

துணிந்து எழுந்திடுவாயே ..!

இச்சை கொண்டு 

ஈடு இணையில்லா நின் 

கற்பை சூறையாட வரும் 

காமுகனைக் கண்டு நடுங்கி 

கரம் கூப்பி கால்பிடித்து 

கெஞ்சிட வேண்டாமடி  

வளையோசை குலுங்கிட 

வாளெடுத்து போராடிட

துணிந்து வந்திடுவாயே ..!

ஆழிப் பேரலையையும் 

அடக்கி ஒடுக்கிடும் 

பேராண்மையாய்..! 

தரணி  போற்ற நீயும் 

தழைத்தோங்கிடுவாயே ..!

                ரேணுகா ஸ்டாலின் ✍🏻

0/Post a Comment/Comments