ஹைக்கூ - hykoo



போட்டி எண் : 72 ன் ஹைக்கூ கவிதைகள் 

சதுரங்க ஆட்டம்

புத்திக்கூர்மையை வளர்க்கிறது

ஆழ்ந்த படிப்பு

 

நகர்த்தும் குதிரை

வெற்றியைக் கணிக்கிறது

வீரரின் புத்திக்கூர்மை

கவித்தென்றல் சௌ.நாகநாதன்

 

சதுரங்க விளையாட்டில்

சாகசம் தெரிகிறது

மழலையின் முயற்சி

முனைவர் கவியருவி ஜோதிபாரதி

 

விளையாடியதும் சதுரங்க காய்கள்

பெட்டிக்குள் அடங்கின

உயிரைப் பிரிந்த உடல்கள்

 

மலர் மைந்தன்

 

சதுரங்க ஆட்டம்

திட்டம் தீட்டியே நடக்கிறது

எரிபொருள் கொள்ளை

நஸ்மின் நாசர்

 

கத்தியின்றி

வெட்டப்படுகின்றன

சதுரங்க காய்கள்

கி. புஷ்பராஜ்

 

சதுரங்க விளையாட்டு

மூலைக்கு வேலை தருகிறது

இளம்வயதில் வெற்றி

ச.கோட்டீஸ்வரன்

 

 

மூளைக்கு வேலை

எதிரிகளை கணிக்க முடியும்

யுத்திகளை வளர்க்கும்

சி தமிழ் மணி

 

சதுரங்கத்தில் ராணி

மிகவும் சக்தி வாய்ந்தது

சுதர்சன சக்கரம்

அன்பு துரைசாமி.

 

சதுரங்க வேட்டையாடி

நாட்டைப் பிடிக்க வருகிறார்

ராஜா

செந்தூர் குமார்

 

அறிவுக்கு சவால்

எதிரியின் சாதுர்யம் புரியாது

சதுரங்க விளையாட்டு

சுசிசுசேனு

 

சதுரங்கக் காய்கள்

தயாராய் இருக்கின்றன

ஆட்டக்காரர்களின் கண்கள்

ஜெயபால் வி.பி.

 

அவன் வீழ்ந்தாலும்

நிமிர்ந்து நிற்பான்

பெயரால் ராஜா

மு.அசோக்குமார்

 

துரங்க ஆட்டம்//

காட்சியாய் தெரிகிறது//

போர்க்களம்.

சோ.ஸ்ரீதரன் 

 

 

 

சதுரங்க ஆட்டம்

நகர்கிறது குதிரை

சர்வதேச அரங்கில்

சுஜாதா அருணாச்சலம்

 

கருப்பும் வெளுப்புமாய் கட்டங்கள்

கலைந்துச் செல்கின்றனர்

பார்வையாளர்கள்

அருணா ரகுராமன்

 

இராணியின் நகர்வு

சிந்திக்க வைக்கின்றது

சதுரங்க விளையாட்டு

ம.ஞானசம்பந்தன்

 

அறிவுக் கூர்மை

சிந்தனையைத் தூண்டுகிறது

சதுரங்க விளையாட்டு

அ. நாராயணசாமி

 

சதுரங்க விளையாட்டு

அதிகம் யோசிக்க வைக்கிறது

போட்டி முடிவு

கோவை ஆறுமுகம்

 

சக்கரவியூகம்

உடைபடவே இல்லை

சதுரங்கச் சுற்று

ஜெய வெங்கட்

 

சதுரங்க விளையாட்டு

கூர்மையாகக் கவனிக்கப்படுகிறது

மனிதனின் செயல்பாடு

தனம் மீனாட்சிநாதன்

 

சதுரங்க ஆட்டம்

முன்னேற்றம் கண்டது

பதக்கப் பட்டியல்

மூ.மணி திருமுருகன்

 

பிறரை வெட்டி முன்னேறென

கட்டியம் கூறும் கட்டங்களில்

சதுரங்கக் காய்கள்.

 

வெவ்வேறு உருவங்கள்

வெவ்வேறு சக்தியுடன்

விளையாட்டாய் சதுரங்கம்.

 

Ramasamy Nathan

 

சதுரங்க ஆட்டம்

மாணவரிடம் வளர்ந்து வருகிறது

கணித ஆற்றல்

Dr ஜலீலா முஸம்மில்

 

சதுரங்கக் காய்கள்

அங்கும் இங்கும் நகர்கின்றன

ஆடுபவர் கண்கள்

மணிகண்டன் அய்யப்பன் 

 

சதுரங்க விளையாட்டு

பதட்டத்தைத் தருகின்றது

கடைசி நிமிட ஆட்டம்

பாண்டிச்செல்வி கருப்பசாமி 

 

அன்று சகுனி ஆடிய

சதுரங்க ஆட்டம்

இன்றய சகுனிகளால்

காப்பாற்றப்படுகிறது

Kala puvanenthiraraja

 

சதுரங்க ஆட்டம்

நகராமல் இருக்கின்றன

போட்டியாளரின் கண்கள்

வட்டக்கச்சி வினோத்

 

சதுரங்கக் காய் நகர்த்தல்

வெற்றியைத் தீர்மானிக்கிறது

வீரரின் சாமர்த்தியம்

'கண்மணி'-கண்ணன்.

 

சதுரங்க விளையாட்டு

பக்குவமாக நகர்த்தப் படுகிறது

அரச பதவி

மு.பபித்தா

 

சதுரங்க ஆட்டம்

மகிழ்வைத் தருகிறது

போட்டியின் முடிவு

பா. இராமர் தேனி

 

சதுரங்க ஆட்டம்

வெற்றியை தீர்மானிக்கிறது

ராஜாவின் நகர்வு

ச. லதா தேவி

 

சதுரங்க ஆட்டம்

காய்கள் வெட்டி தீர்க்கின்றன

போராட்டம்

முத்தமிழ்ச்செல்வி

 

சதுரங்கப் போட்டி

மெதுவாக நடக்கின்றது

காய் நகர்த்துதல்

 சங்கர்குரு பழனிச்சாமி

 

 

சதுரங்க விளையாட்டு

மேலிருந்து நகர்த்தப்படும் காய்கள்

அரியாசனம்!

சு.கேசவன்

 

 

கண்சிமிட்டா காய்கள்

நகரும் மதிமூலம்

கருப்பு வெள்ளை காய்கள் பதறும் படைமூலம்

இர மணிகண்டன்

 

சதுரங்கக் கட்டங்கள்

கருப்பு வெள்ளையாய் இருக்கின்றது

பழைய திரைப்படங்கள்

கே. பி. துரைசாமி

 

சதுரங்கக் கட்டங்கள்

கருப்பு வெள்ளையாய் இருக்கின்றது

பழைய திரைப்படங்கள்

கே. பி. துரைசாமி

 

வெட்டிய காய்

ஆட்டத்தை வலுவிழக்கச் செய்கின்றது

சிதறும் கவனம்

அருண்மொழி

 

சதுரங்க வேட்டை

மகிழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது

குடும்பச்சூழல்

கடலரசி

 

கோடுகளுக்குள்ளே

ஆழமாக சுழல்கின்றது மூளை

சதுரங்க ஆட்டம்

 

Romesh  dharmaseelan

 

சதுரங்க ஆட்டம்

வெற்றியை நிர்ணயிக்கின்றன

எதிரியின் பலகீனம்

செம்போடை சோழன்-

 

 

சதுரங்கக் கட்டங்கள்

கருப்பு வெள்ளையில் உள்ளன

விளையாடுபவர் கண்திரைகள்

கு.கதிரேசன்

 

சதுரங்க ஆட்டம்

கருப்பு வெள்ளை கோடுகளுக்குள்

புத்தி சீவிகளுக்கானது

டிவங்சோ மலாய் கவி

 

சதுரங்க. ஆட்டம்

சமத்துவப். போராட்டம்

திகைப்பில் எதிராளி

சென்னிமலை அ.சீனிவாசன்

 

சதுரங்கக் காய்

அதிகமாக பயன்படுத்தப்படுகிறது

மூளை

சிவகாமசுந்தரி நாகமணி

 

ராணியில்லையேல்,

ராஜாவுக்குப் பலமில்லை

சதுரங்கத்தில்,வாழ்க்கையில்

 

Maruthamalai pulavar prabhakaran

 

வெட்டிய காய்கள்

வீழ்ந்த வண்ணம் இருக்கின்றன

உதிரும் இலைகள்

ம.பழனிச்சாமி

 

எனக்கான இடத்தை

நானே தேர்வு செய்கிறேன்

ராசா ராணி

கோபிநாதன் ஶ்ரீ

 

வெண்மையும் கருப்பும்

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன

காதலியின் கண்கள்

                                    திஶ்ரீராமன்

 

சதுரங்கப் போட்டி

முக்கியத்துவம் பெறுகிறது

மாமல்லபுரம்

க.குணசேகரன்

 

சதுரங்க ஆட்டம்

சிந்திக்க வைக்கும்

வெற்றியைச் சந்திக்க

இரா.மோகனதாஸ் சிவலிங்கம்

 

துரங்கப் போட்டி

வெற்றியை நோக்கி நடைபெறுகிறது

நாடுகளின் போர்கள்

ஓவியர்.பால. மணிகண்டன்

 

சதுரங்க. கட்டம்

கண்னை கவர்கிறது

வெட்டுப்பட்டகாய்

கவிநிலவன்

 

வெட்டுப் பட்டால்

ஒரே பெட்டிக்குள்

சதுரங்க ஆட்டம்

ரவிஜி

 

 

சதுரங்கக் காய்கள்

வேகமாய் அசைகின்றன

கன்னியின் கண்கள்

செல்லையா வாமதேவன்

 

சதுரங்கம்ஆடுகளம்

ஆட்டம்இழந்துநிற்கிறது

இலங்கை அரசியல்

கிரிஜா

 

கருப்பு வெள்ளைக் கட்டங்கள்

தொடர்ந்து வருகின்றன

இரவுபகல்

மா.பாலசுந்தரம்

 

சதுரங்க ஆட்டம்

விரைவான செயல்பாடு

அதிகரிக்கும் மதிப்பெண்

இதயம்

 

கருப்பு வெள்ளைப் போராட்டம்

தொடர்ந்து நடக்கிறது

ஊர்த்திருவிழா

.முருகேசுவரி

 

சதுரங்க விளையாட்டு

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்

காய்களின் நகர்வு

கலைவாணி சுரேஷ்பாபு

 

போர்க்கள யுக்தி

விளையாட்டை மேம்படுத்தும்

நிதானமான ஆட்டம்.

சேந்தன்குடிச் செந்தமிழாழன்

 

 

 

சதுரங்கப் போட்டி

ஒருமுறைகூட வெற்றி பெறமுடியவில்லை

எதிரில் ராணி

தமிழ் தம்பி 

 

சதுரங்க ஆட்டம்

வியப்பைத் தருகிறது

விளையாடுபவர்களின் திறமை

நழீம் ஹனீபா

 

சதுரங்கப் போட்டி

பரபரப்பு தொற்றியது

பார்ப்பவர் உள்ளம்

இரமணி ராஜன் 

 

சதுரங்க விளையாட்டு

மகிழ்ச்சியைத் தருகிறது

வெற்றியடைந்தத் தருணம்.

சிந்தனை பாரதி

 

சதுரங்க காய்கள்

அணிவகுத்து நிற்கின்றன

இருநாட்டு படைகள்

புஷ்பா குமார்

 

மூளைக்கு வேலை

முற்றிலும் மாறு படுகிறது

சதுரங்க ஆட்டம்

ஐ.துஷ்யந்தன்

 

போட்டியின் வெற்றி

புகழின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது

கடின உழைப்பு

கவிஞர் கவிதா அசோகன் 

 

 

வெட்டப்பட்ட வீரர்கள்

அரசன் தலைக்கு ஆபத்து

முடிவுக்கு வந்தது சதிராட்டம்

தங்க.ஜெயக்குமார்

 

துரங்க ஆட்டம்

விறுவிறுப்பாக நடக்கிறது

சூதாட்டம்

மு.நாகராஜன்

 

 

 

 

 

0/Post a Comment/Comments