சென்ற இடமெல்லாம் சிறப்பு (பக்தி)
சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்வி கற்றோர்க்கு மட்டுமா உண்டு
பக்தி கற்றோருக்கும் உண்டு
மனம் ஒன்றா பூஜைகளால்
வெற்று புகழ் பேசுவதா பக்தி
மனமுருகி பிரார்த்தனை செய்த
மனமது மழைபெய்து முடித்த
வானமென தெளிவுறுவதே பக்தி
எண்ணி லடங்கா செல்வங்களை
கோவில்களில் சென்று
கொட்டுவதா பக்தி
எண்ணங் களை சிறைப் படுத்தி
ஒரு முகப் படுத்துவதே பக்தி
கட்டுக் கட்டாய் காசு கொடுத்து
கடவுளைக் காண்பதா பக்தி
கால் கடுக்க காத்திருந்து
மனக் கண்ணில் உணர்தலே பக்தி
உளியால் செதுக்கிய சிலை தேடி
கைகூப்பி வணங்குவதா பக்தி
கவலை கொண்ட உள்ளத்தில்
கட்டுக் கடங்காமல் கிளர்ந்
தெழுவதே பக்தி
என்மதமா உன்மதமா என
போட்டி யிடுவதா பக்தி
எம் மதமும் சம்மதம் என
ஒருமுகப்படுத்தி தொழுதலே பக்தி
வழி பாட்டுத் தளங்களும்
வழிபடும் முறைகளும் மாறினாலும்
சற்றும் கலையாத கவனம் பக்தி
அது சற்றே கலைந்தாலும் அதற்கும்
குறைந்து விடும் சக்தி
எந்த ஒரு செயலையும் நூறுசதம்
முழு ஈடுபாட்டோடும் திறமையோடும்
மன நிறைவோடும் செயல்படுத்திட
இறைவனும் இயற்கையும் நம்மை
கவனிக்கும் அது தான் பக்தி
அதுவே உங்கள் சக்தி
அது தான் பக்தி
சென்ற இடமெல்லாம் சிறப்பெய்தி
உயர்ந்திட வழிவகுக்கும் நல்சக்தி
அது தான் பக்தி
ரேணுகா ஸ்டாலின் ✍🏻

Post a Comment