ஹைக்கூ - Hykoo



 ஹைக்கூ போட்டி எண் : 92ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்

1. கருவேல மரங்கள்

உணவாகிக் கொண்டிருக்கின்றன

வளர்ப்பு ஆடுகள்

               கவித்தென்றல் சௌ.நாகநாதன்

2. மேய்ப்பவன் கோல்

கூர்மையாகவே

ஆடுகள் பார்வை

              Dr.சிவகாமசுந்தரி நாகமணி

3. மந்தை மேய்ப்பாளனின் முயற்சி

ஆடுகளின் பசியைத் தீர்க்கின்றது

கிளைகளைக் கொண்ட மரம்

               சோ. ஸ்ரீதரன்

4. ஆடுகளின் பசி

தெளிவாகத் தெரிகிறது

மேய்ப்பவன் அக்கறை            

                'கண்மணி'-கண்ணன்    

5. தொரட்டிக் கம்பு

வலுவாக உள்ளது

கருவேல் மரக்கிளை

               கு.கதிரேசன்

6. கருவேலம் முட்கள் 

மிகக் கூர்மையாக இருக்கின்றன 

ஆட்டின் கொம்புகள் 

              நாகை. ஹாஜா

7. தொரட்டிக் கம்பு 

 பற்றி இழுத்திடும்

 மேய்ப்பனின்  கை 

               பாண்டிச்செல்வி கருப்பசாமி 

8. மரத்தின் கிளைகள் 

மேலும் கீழும் குதித்து ஆடுகின்றன 

இலைதின்னும்  ஆடுகள் 

              கவிநிலா மோகன்

9. ஆடுகளின் பசி

குறைந்து கொண்டே போகிறது 

முதியவர் கைவலிமை

              வ பரிமளாதேவி

10. மேய்ப்பனின் தொரட்டி

கிளையை ஒடிக்கின்றது

பற்றி இழுக்கும் ஆடு

               Dr ஜலீலா முஸம்மில் 

11. மரத்தின் இலைகள்

காணாமல் போகின்றன

ஆடுகளின் பசி

              ஏரூர் எம்.ரி.எம்.அன்ஸார்

12. ஆட்டின் குறிக்கோள்

மரத்தின் இலையை நோக்கியே

மேய்ப்பனின் தொரட்டி

               மு.நாகராஜன்

13. மேய்ப்பனின் தொரட்டி 

வளைந்து காணப்படுகிறது 

செம்மறியாட்டுக் கொம்பு

              லா.பெனிஸ் தமிழ் மருத்துவர்

14. கோடை வெயில்

குளிர்ச்சியைத் தருகிறது

மரத்தின் நிழல்

                ஐ.துஷ்யந்தன்

15. நிழல் தரும் மரம்

செழிப்பாக இருக்கிறது

ஆட்டின் வளர்ச்சி

              இஸ்ஹாக் றிஸ்வான்

16. இலையுண்ணும் ஆடு

பசியாறி மகிழ்கின்றது

பாலூட்டும் குட்டி

             சங்கர்குரு பழனிச்சாமி

17. மரத்தின் கிளை

வளைந்து காணப்படுகிறது

மேய்ச்சல்காரரின் முதுகு

                 ராதாமணி

18. கருவேல மரங்கள் 

 உறுதியாக இருக்கின்றன 

 ஏழையின் கைகள் 

                கி.புஷ்பராஜ் 

19. வெட்டப்படும் மரம்

விழுந்ததும் காணாமல் போகிறது

ஆட்டின் பசி

                 பொற்கேணி முளப்ஃபர்

20. கிளையோடு  இலைகள்

மொத்தமாய் கூடி வருகிறது

மேயும் ஆடுகள்

                    நாகலெட்சுமி இராஜகோபாலன்

21. தழையுண்ணும் ஆடு

தலைகீழாக தொங்குகிறது

முறிந்த மரக்கிளை

                    இராஜா. ரமேஷ்


நடுவர் : ரேணுகா ஸ்டாலின் 

0/Post a Comment/Comments