ஹைக்கூ - Hykoo



 ஹைக்கூ போட்டி எண் - 90 ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்

1. செடியில் மலர்கள்

பிரகாசமாகத் தெரிகின்றன

சூரியனின் கதிர்கள்

           கவித்தென்றல் சௌ.நாகநாதன்

2. செவ்வல்லி பூக்கள்  

குளத்தில் நிறைந்து காணப்படுகின்றன

கோரை புற்கள்

            மலர் மைந்தன்

3. அமைதியான நீர்நிலை

அசைந்து கொண்டே இருக்கின்றது

நீந்தும் மீன்

            சங்கர்குரு பழனிச்சாமி

4. சூரிய ஒளியை

 பிரதிபலித்துக் காட்டிடும்

 விரிந்த நீர்ப்பரப்பு

             பாண்டிச்செல்வி கருப்பசாமி 

5. மாலைக் கதிரவன்

நிறம் மாறிப் போனது

தடாகத்தின் நீர்

              கு.நந்தினி

6. அழகிய விடியல்

நதியில் மிதக்கிறது

பறவையின் நிழல்

             செல்லையா வாமதேவன்

7. சூரிய ஒளி

தெளிவாகத்  தெரிகிறது

ஏரியில்  செவ்வானம்

              சு.கேசவன்

8. மேலெழும்பும் சூரியன்

நீரில் நீண்டு தெரிகிறது

பூக்களுடன் கோரைப்புல்

              நாகலெட்சுமி இராஜகோபாலன்

9. கலங்கிய நீர்

மெல்ல நகர்ந்து செல்லும்

முகில் கூட்டம்

              நஸ்மின் நாசர்

10. சூரியனின் பிம்பம்

இரசிக்க முடியவில்லை

வெள்ள எச்சரிக்கை

            சிவகாமசுந்தரி நாகமணி

11. சூரிய ஒளி

பரவி இருக்கிறது

குளத்தில் தாமரை

             மகேஸ்வரி கிருஷ்ணசாமி

12. மலர்களின் மணம்

மெல்ல எழுகிறது

சூரிய உதயம்

           கலாராணி லோகநாதன்

13. கரையேறும் சூரியன்

இறங்க வரும் நிலா

அதே குளத்தில்

            சீனிவாச வரதன்

14. ஆற்றில் நீர்மட்டம்

உயர்ந்து காணப்படுகிறது

கரையோரப் புல்

              'கண்மணி'-கண்ணன்.               

15. காலை நேர சூரியன்

மெல்ல எட்டிப் பார்க்கும்

கூட்டில் பறவை

             இராஜா.ரமேஷ்

16. காலைப் பொழுது

மெல்ல விரிகிறது

தாமரை மொட்டு

              எம்.எம்.நிஜாமுதீன்


நடுவர் : பாவலர் கவிநிலா மோகன்

0/Post a Comment/Comments