ஹைக்கூ _Hykoo



 ஹைக்கூ போட்டி எண் : 89 ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள் :-

1. வானின் நிறம்

நதியில் தெளிவாகத் தெரிகிறது

மூழ்கியப் பாறைகள்

             கோவை ஆறுமுகம்


2. இயற்கைச் சூழலில்

விரைந்து செல்கின்றது

விசைப்படகு

             ஓசூர் மணிமேகலை


3. மேற்குத் தொடர்ச்சி மலை

நீண்டு கொண்டே செல்கிறது

காவிரியாறு

            மலர் மைந்தன்


4. மலை முகடுகள் 

திட்டுத்திட்டாய்த தெரிகின்றன 

வானில் மேகங்கள் 

            நாகை.ஹாஜா


5. மலையடிவார ஆறு 

கண்களுக்குக்  குளிர்ச்சியாக இருக்கிறது 

கரை ஓரப் புதர்கள் 

           பொன்னி துரையப்பன்


6. உயர்ந்த மலைகள் 

தொடர்ந்து கொண்டு இருக்கின்றது 

வானின் மேகம் 

            முத்தமிழ்ச்செல்வி 


7. ஆற்றில் நீர்

நீலநிறமாக தெரிகிறது

வானம்

              அ.நாராயணசாமி


8. மலைமுகட்டில் மேகம்

உரசிச் செல்கிறது

நீர்மட்டத்தில் காற்று

               ஜெய வெங்கட்


9. அகண்ட நீர்வெளி

அச்சமூட்டுகிறது

கரையோரப் புதர்

             'கண்மணி'-கண்ணன்

               

10. அழகிய நீரோடை

தெளிவாக இருக்கிறது

அந்தி வானம்

              பா.இராமர் 


11. பனியில் மலைச்சரிவுகள் 

பாசம் பிடித்து காணப்படுகின்றன 

கரையோர மரங்கள் 

            தாழை.கு.சக்திவேல் 


12. நதியில் நிறைந்த நீர்  

அசைந்து கொண்டு இருக்கிறது 

உயர்ந்த மலை 

               கவிநிலா மோகன்


13. நீலவண்ண மலையோ

நீண்டுகொண்டே செல்கிறது

நதியின் பாதை

               கவியருவி ஜோதிபாரதி


14. நதியில் பாறை

ஓடும் நீரை உடைக்கிறது

நீந்தும் வாத்து

               நாகலெட்சுமி இராஜகோபாலன்


15. மலையின் உச்சி

மறைத்த படி நிற்கிறது

முகில் கூட்டம்

             ஐ.துஷ்யந்தன்


16. ஆற்று நீர் 

மலையைத் தொட்டபடி இருக்கிறது

மேகக் கூட்டம்

               சௌ.நாகநாதன்


17. ஆற்றில் பரிசல் பயணம்

அச்சத்தைத் தருகிறது

நீர்ச்சுழல்

               இரா.வேணு கோபாலகிருஷ்ணன்


18. மலையிடை முகில்

மெதுவாய் அசைகின்றது

நீரோடையுள் மீன்

              ம.ஞானசம்பந்தன்


19. நதியின் நீரோட்டம்

சத்தம் எழுப்புகிறது 

காற்றிலசையும் மரங்கள்

              இராஜா.ரமேஷ்


நடுவர் : பாண்டிச்செல்வி கருப்பசாமி


0/Post a Comment/Comments