நவராத்திரி - Navrathri 7th day special

 


நவராத்திரியின் 7ம் நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

How to celebrate navrathri  Seventh  day


நவராத்திரி ஏழாம்நாளில், அம்பாளை வித்யா லட்சுமியாக அலங்கரித்து வழிப்பட வேண்டும். தாமரை மலர் ஆசனம்அமைத்து, அதன் இருபுறமும் யானை பொம்மைகள் வைக்க வேண்டும். அம்பாளின் கையில் ஜெபமாலை, கோடரி, கதாயுதம், அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுத கலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். வெள்ளைத் தாமரை மலர் மாலை சூட்ட வேண்டும்.

On the seventh day of Navratri, Ambala should be worshiped as Vidya Lakshmi. A lotus flower asana should be arranged and elephant toys should be placed on either side of it. In Ambal's hand should be rosary, axe, kadayutham, arrow, vajrayutham, lotus, bow, kamandalam, sulaam, knife, shield, conch, wheel, bell, amuda kasalam, pasam, sulaam. Garland with white lotus flowers.

மகிஷன் என்ற அசுரனுக்கு பெரிய ராஜ்யம் இருந்தது. ஆனாலும், அவன் தேவலோகத்தின் மீது ஆசை கொண்டு, அதைப் பறித்துக் கொண்டான். சூரியன், சந்திரன், வாயு உள்ளிட்ட தேவர்களுக்கு கூட அங்கு இடமில்லாமல் போனது. முனிவர்களையும் யாகம் செய்யும் இடத்தில் இருந்து விரட்டி விட்டான். இவர்களது வயிற்றெரிச்சல் இணைந்து அக்னியானது. அதிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளுக்கு எல்லா தெய்வங்களும் தங்களது ஆயுதங்களைக் கொடுத்தனர். அவள் மகிஷனை ஒழித்து மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தால், தீய சக்திகளிடம் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

The demon Mahishan had a large kingdom. Yet, he lusted after heaven and snatched it away. Even the gods including Sun, Moon and Vayu had no place there. He drove the sages away from the place of sacrifice. Their stomachs are burning together. A woman emerged from it. All the gods gave her their weapons. She got rid of Mahishan and became known as Mahishasuramarthini. If we visit Mahishasuramarthini Golam, we will get protection from evil forces.

நவராத்திரியின் ஏழாம் நாளில் வித்யா லட்சுமி உருவத்தில் அலங்கரித்தல் வேண்டும். 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும். நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்..

இறுதியாக பேரீச்சம் பழம் மற்றும் நைவேத்தியம் வைத்து தீபாராதனை செய்தல் நமக்கு செல்வ செழிப்பான வாழ்க்கை அளிக்கும்.

On the seventh day of Navratri, the image of Vidya Lakshmi should be decorated. An 8-year-old girl should be worshiped as Brahmi Maha Saraswati, Sumangali. Be decorated with fragrant flowers.. Finally performing Deeparathan with dates and Naivedi will give us a prosperous life.

  

மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

சௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

Mantra

Om Shrim Gleem Mahalakshmi

Mahalakshmi Ayehi

Ayyehi Sarva

Saubhagyam mein dehi swaha

தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.

மகாலட்சுமி தேவிக்கு நைவேத்தியம் படைக்க கற்கண்டு சாதம் செய்து பூஜித்து நம்மை நாடி வருபவர்களுக்கு பிரசாதமாக அளிப்பதால் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ முடியும்.

ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும். வறுமையில் வாடும் பக்தர்கள் சிறப்பான வாழ்வாதாரத்தை அன்னை மகாலட்சுமி அளிப்பார்.

thalhambu, Thumbai, Jasmine, Mullai.

By worshiping Goddess Mahalakshmi with stone rice and offering it as prasad to those who come to us, we can live a prosperous life.

Ragam : One should sing and worship in Bilhari ragam.

Benefit: You will get all the boons you want. Mother Mahalakshmi will give better livelihood to poor devotees.

0/Post a Comment/Comments