முத்தம்
இரு உதடுகளின்
ரகசிய உடன்படிக்கை
கட்டில் யுத்தத்தில்
இருவருக்கும்
தோல்வியைத் தந்திடாத
அற்புத ஆயுதம்
சுவைக்க சுவைக்க
திகட்டாத தேவாமிர்தம்
காதலின் முதல்வரி
காமத்தின் முகவரி
வாசிக்கும் தருணங்களில்
புதுப்புது அர்த்தங்களைக்
தந்திடும் இருவரிக் கவிதை
கொடுப்பவர்க்கும்
பெறுபவர்க்கும் மட்டுமே
புரிந்திடும் புதிர்க்கவிதை
முற்றுப் போட முடியாத
அழகிய நெடுந்தொடர்
இரு உதடுகள் பேசும்
உன்னத மொழி
மொழிபெயர்க்கவே
முடியாத தமிழகராதியில்
இல்லா தனிமொழி
செதுக்கும் சிற்பியையே
சிறை பிடிக்கும்
செவ்விதழ் உளி
ரேணுகா ஸ்டாலின்

Post a Comment