ஹைக்கூ போட்டி
எண்- 84 ன் வெற்றியாளர்கள்
ஹைக்கூ கவிதைகள்
1. மழை மேகங்கள்
ஒன்றுதிரண்டு வருகின்றன
காற்றில் குப்பைகள்
மலர் மைந்தன்
2. கருமேகக் கூட்டம்
ஆங்காங்கு திரண்டிடும்
மந்தை ஆடுகள்
பாண்டிச்செல்வி கருப்பசாமி
3. மழைப்பொழிவு
அதிகமாக இருக்கின்றது
வானில் கருமேகம்
சங்கர்குரு பழனிச்சாமி
4. பலத்த காற்று
திசை மாறிச் செல்கிறது
மழை மேகம்
நழீம் ஹனீபா
5. திரளும் மேகங்கள்
விரைந்து கூடுகின்றன
பட்டிதிரும்பும் ஆடுகள்
ஜெய வெங்கட்
6. கார்மேகத் திரட்சி
மெல்ல ஆயத்தமாகிறது
மயிலின் நடனம்
விஜயசாரதி
7. நின்ற மழை
விடாமல் தொடர்ந்தபடி
தவளை ஒலி
சிவகாமசுந்தரி நாகமணி
8. வான்மேகக் கூட்டம்
மிக நன்றாகத் தெரிகிறது
நீரில் நிழல்
செண்பக ஜெகதீசன்
9. வானம் பார்த்த பூமி
இன்னும் மாறவில்லை
வறண்ட நிலம்
தட்சணா மூர்த்தி
10. கூடிய கார்மேகம்
தரையில் விழுந்து நொறுங்கியது
ஆலங்கட்டி மழை
வளருங்கவி அமுதன்
11. கார்மேகம்
காற்றினால் இடம் பெயர்கின்றது
காட்டுத் தீ
கவிதா அசோகன்
12. வானில் கருமேகங்கள்
கூட்டங்கூட்டமாக அசைகின்றன
சிறகடிக்கும் பறவைகள்
Dr ஜலீலா முஸம்மில்
13. கார்மேகக் கூட்டம்
வேகமாய் இடம்பெயர்கிறது
பறவைக் கூட்டம்
கலாராணி லோகநாதன்
14. பருவ மழை
வருடம் தவறாமல் வருகிறது
கடலில் புயல்
அன்பு துரைசாமி
15. மேகத்திலிருந்து மழை
பூமியை நோக்கி இறங்குகிறது
இரையை கண்ட பருந்து
'கண்மணி'-கண்ணன்
16. தரையிறங்கிய மேகங்கள்
நதியாகி நகர்கிறது
ஓடையில் மீன்கள்
ச.இராஜ்குமார்
17. கார் மேகங்கள்
மெதுவாய் கலைந்துச் செல்கின்றன
கூட்டுப் பறவைகள்
கோ.கார்த்திகா கண்ணன்
நடுவர் : ரேணுகா ஸ்டாலின்

Post a Comment