நவராத்திரியின் 8ம் நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?
How to
celebrate navrathri Eighth day
தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே
நவராத்திரி.
Navratri is a festival that
celebrates all evils, increase in wealth and abundance of knowledge including
education.
கலைகளின் அதிபதியான கலைமகளையும், செல்வத்தின் அதிபதியான திருமகளையும், வீரத்தின் அடையாளமான மலைமகளையும் கொண்டாடும் விழாவே நவராத்திரி. அந்தவகையில்,
நவராத்திரி விழாவின் எட்டாவது நாளான இன்று,
நாம் வழிபடவேண்டிய தேவி நரசிம்ஹி. குமாரியின்
பெயர் துர்கா தேவி. இன்றைய தினம் ஒன்பது வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை
எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை
துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு
வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி மகிழ்விக்க வேண்டும்.
Navratri is a festival celebrating
Kalaima, the ruler of arts, Thiruma, the ruler of wealth, and Malaima, the
symbol of valor. Thus, today, the eighth day of Navratri festival, we have to
worship Goddess Narasimhi. Kumari's name is Goddess Durga. On this day, an odd
number of nine-year-old girls should be invited to the house, worshiped as
Durga and entertained by giving them clothes and other goodies.
மேலும் இன்று அம்பிகையை விபூதி பச்சை மலர்களை கொண்டு அர்ச்சனை
செய்தால் அவள் மனமகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை அருள்புரிவாள் என்பது
நம்பிக்கை!!!
இன்று அம்மாளுக்கு தாமரை கோலமிட்டு (காசு பத்மம்) சம்பங்கி மற்றும்
மருதாணிப்பூ கொண்டு அலங்கரித்து கொள்ள வேண்டும். வழிபாட்டின் போது புன்னக வராளி
ராகத்தில் வாசிக்க வேண்டும். நைவேத்தியத்துடன் திராட்சை வைத்து அஷ்டமி திதி
பூஜிப்பது நமக்கு சகல ஐஸ்வரியங்கள் அளிக்கும்.
And if we worship Ambigai with green
flowers today, it is hoped that she will be happy and bless us with the
blessings we want!!!
Today Ammal should be decorated with
lotus kolam (kasu padma), sambangi and henna flowers. Punnaka Varali raga
should be played during worship. Worshiping Ashtami Tithi with Grapes along
with Naivediya will give us all the riches.
மந்திரம்
ஓம் துர்காயை நம
ஓம் மஹா கௌர்யை நம
ஓம் மஹிஷாமர்த்தின்யை வித்ம்ஹே
துர்கா தேவ்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
Mantra
Om Durgai
Nama
Om Maha
Gauriya Nama
Om
Mahishamarthini vithmhe
Goddess
Durga Theemahi
Thanno
Devi Prasodayat
இன்றைய தினம் அம்பிக்கைக்கு நைவேத்தியமாக பால் பாயசம், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும் செய்து வீட்டுக்கு வரும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். எதிரிகளால் வரும் இன்னல்களில் இருந்து நரசிம்ஹி தேவி காப்பாள்.
On this day, Ambika should be given
as prasad to women and children who come to the house after making Sundalum
with some navadaniyam and milk payasam. Goddess Narasimhi protects from the
troubles of enemies.
Post a Comment