நவராத்திரியின் 3ம் நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?
How to
celebrate navratri Third day
நவராத்திரி மூன்றாம் நாள் : இசையோடு அவளைத் துதித்தால் இனிமையான
வாழ்வை அருளுவாள் என்று சொல்லப்படுகிறது.
Navratri Third Day : It is said that if you praise her
with music, she will bestow a pleasant life.
நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று அம்பாளை, இந்திராணியாக அலங்கரித்து வழிபாடு செய்தல் வேண்டும். அம்பாள்
இந்திராணி மாஹேந்திரி, சாம்ராஜ்யனி என்றும்
அழைக்கப்படுகிறாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம், சூலம், கதாயுதம் தாங்கி, யானை வாகனத்தில் அமரும் வகையில் அலங்கரிக்க வேண்டும்.
On the third day of Navratri, Ambal
should be worshiped as Indrani. Ambal Indrani Mahendri is also known as
Samrajyani. He should wear a crown and carry Vajrayuta, Chulam, Kata weapons
and be decorated in such a way as to sit on an elephant vehicle.
ஆயிரம் கண்ணுடையவள், விருத்திராசுரனை அழித்தவள் என்பதால், தைரியமிக்கவளாய் கருதப்படுகிறாள்.சிவபிரான் தன் ஆனந்த தாண்டவத்தின் போது, இடது காலின் பெரு விரலால் போட்ட கோலம் தான் இன்று போட வேண்டும். அது அஷ்டவஷ் கோலம் என சொல்லப்படுகிறது.
She has a thousand eyes and is
believed to be brave because she destroyed Vridhrasura. Shivabran during his
Ananda Thandavam should put the kolam on his left big toe today. It is called
Ashtavash kolam.
அரிசி மாவுடன் செம்மண் கலந்து கோலமிட்டால், அம்பாள் அகம் மகிழ்வாள். மூன்றாம் நாள் வழிபாடு முறை நைவேத்தியம்: நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாட்டில் எலுமிச்சை சாதம், வெண் பாயாசம் அளிக்கலாம்.
If you mix semman with rice flour and
make golam, Ambal Agam will be happy. Third Day Worship Method Naivetiyam: On
the third day worship of Navratri, lemon rice and ven payasam can be offered.
மலர்கள் : மல்லிகை, செவ்வந்தி
தாம்பூலங்கள் : 9 முதல் 11 வகை தரப்பட வேண்டும்
ராகம் : ஆனந்த பைரவி
சிறப்பு : ஸ்ரீ இந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள். இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை கொண்டவள், வீரத்தின் தெய்வம், சிவப்பிரியை,
இச்சா சக்தி.
பலன் : உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட, மூன்றாம் நாள் விரதம் இருத்தல் நலம். மாணவர்கள், இந்தக் கோலத்தை தரிசிப்பது, மிகவும் நல்லது.
Flowers : Jasmine, Amethyst
Tambulams : 9 to 11 type should be given
Ragam : Ananda Bhairavi
Specialties : Shakti of Sri Indra, Sustainer of Heaven. She is the
beauty of fire, fierce gaze, goddess of valor, love of Siva, Icha Shakti.
Benefit : Fasting on the third day is good for job, career
advancement. Students, visiting this golam is very good.
வராகி காயத்ரி மந்திரம் :
“ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல் ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராகி ப்ரசோதயாத்”
இதை பூஜையின் போது நெய் விளக்கேற்றி 108முறை தொடர்ந்து சொல்வது பூஜைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.
Varagi Gayatri Mantra :
“Om Chyamalayi Vikmahe
Hull Hastaiai Thiemahi
Tanno Varagai Prasodayat”
Reciting this 108 times continuously while lighting a ghee
lamp during the pooja will add more specialness to the pooja.
Post a Comment