How to
celebrate navratri first day.
இன்று நவராத்திரி பண்டிகையின் முதல் நாள் ஆகும். இந்த முதல் நாளில் நவசக்திகளில் ஒருவரான தாய் மகேஸ்வரி தேவியை பூஜித்து வணங்கி அவள் அருளைப் பெறக் கூடிய நாள். புரட்டாசி பிறந்தால் புது வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
Today is the first day of Navratri
festival. On this first day, one of the Navashaktis is worshiped and worshiped
by Mother Maheshwari Devi to seek her grace. It is believed that if Puratasi is
born, one will get a new life.
கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது
நம் இல்லத்தில் அன்னை அம்பிகை வழிபாட்டை நடத்தினால் இல்லத்தில் நல்லது
நடக்கும் என்பது மூதாதையர்களின் நம்பிக்கை ஆகும். அதன்படி நவராத்திரி
நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
இன்று தாய் மகேஸ்வரிக்கு உகந்த நாளாக கருதப்பட்டு நவராத்திரியின் முதல்
நாள் கொண்டாடப்படுகிறது.
It is the belief of the ancestors
that if we worship Mother Ambika in our house when the Sun transits in the sign
of Virgo, good things will happen in the house. Accordingly, every day of
Navratri is considered as an auspicious day for every ambition. Today is the
first day of Navratri which is considered as an auspicious day for Mother Maheshwari.
கொலு வைக்கப்படும் பூஜையறையில்
மாக்கோலம் போட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார்
பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைத்து வழிப்பட வேண்டும்.
Put makolam in the puja room where
the killing is to be done, sprinkle with sandalwood and hold the pilliyar with
turmeric. Then one should worship by placing the urn on the Kolu step.
அம்மன் வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர்
என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை செய்ய: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில்
வணங்க வேண்டும்.
திதி: பிரதமை கோலம் : அரிசி மாவால்
புள்ளி கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்யவது
நல்லது.
நெய்வேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாடுதல்
மிகச்சிறப்பு
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும் மகிழ்ச்சியுடன்
நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.
Goddess Form : Maheshwari (Destroyer of the demon Madhu Gadavaar)
To worship: A 2 year old girl should
be worshiped in Kumari avatar.
Tithi: Prathamai
Golam: Dot kolam should be made with
rice flour.
Flowers: It is good to perform archan
with jasmine, red arli and bow flowers.
Neivetiyam: White Pongal, Chundal,
Fruit, Lemon Rice, Curd Rice, Sugar Pongal, Mochai, Pumpkin, Dal Vada.
Raga : Singing in Thodi Raga is excellent
result : poverty will be removed,
life will increase and they will live a long life with happiness.
Post a Comment