தீபாவளி ஓர் அறிமுகம் (diwali a introduction)

 


தீபாவளி ஓர் அறிமுகம்

பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திராவிடர் கதை சொல்லி நிம்மதியை கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம்.

A diwali Introduction

What festivals are for is because people want to celebrate with joy. So let's not worry about the Narakarasuras who spoil the peace by telling Aryar Dravidian stories.

வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஏற்பட்டது.

The beauty of light can only be seen in the dark. When we stumble in the dark, we wonder if there is a light from somewhere. The mind is filled with worry and darkened with sadness. Then the good way of light will not appear! In the midst of it we wonder if we will not be joyful. A similar problem befell a sage named Dorsudamas.

அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.

He lived in the dark forest with his wife, the people. They suffered greatly not only from darkness but also from evil animals, poisonous animals and monsters. So he prayed to Lord Vishnu that the place should become bright. Once the sage Sanatana came there.

அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார். 

The Prophet asked him a question. Man observes fasts to get rid of the darkness of suffering. These fasts also consist of starvation, penance that grieves the body, and modesty. These further make man suffer. Is there no easy way to happiness? he asked.

இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.

To this Sanathanar replied, Our Vedas do not lay down any way that one can see the luminous essence only through intense fasting. He preached that we can easily get rid of the darkness of suffering by doing Tirthamati, wearing new clothes, eating sweets, giving to the poor, lighting lamps and celebrating with joy.

இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.

Sage Sanatana explained in great detail how to follow this vrata when Roshthamas asked. In the month of Tula (Aippasi) Mahapradosha Puja should be performed on Dayo Dashi and Yamadeepam should be lit. We should pray to Emdharma Raja from our heart and pray to protect us from untimely death.

மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.

On the next day, Naraka Chaturthasi, one should pray to God not to go to hell and to free those who are already suffering in hell. Pooja should be done for oil, Arapputhul, sandalwood, kumkum, flowers, water, puddhadi, sweetmeats, deepam, sweet medicine, firecracker.

எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள்.

Goddess Lakshmi in oil, Saraswati in Arappo powder, Bhumi Devi in ​​Sandalwood, Gauri in Saffron, Mohinis in Pushpa, Ganga in water, Maha Vishnu in flowers, Dhanvantri in Sweets, Amrit in Sweets, Paramatma in Deepam, Jeevatma in Fire Traps.

இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார். ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம் போன்ற இறக்குமதி விழாவை கொண்டாடும் போது நம் பாரம்பரிய பண்டிகையை மிகச்சிறப்புடன் கொண்டாடுவோம்.

He said that if we worship them with camphor aarti, everyone will cool down and give blessings and bring our family from darkness to light. We celebrate our traditional festivals with excellence when we celebrate import festivals like Anglaputthandu, Valentine's Day, Friends Day.

தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர் யவரும் இலர். தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது சமண சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தற்போது மாற்று சமயத்தினரும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை எடுக்கின்றனர் பட்டாசு வெடிக்கின்றனர். நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.

Everyone celebrates Diwali as much as Tamils. Diwali is celebrated not only by Hindus but also by Jain Sikhs for other reasons. At present people of other religions are also taking new vows and bursting firecrackers on the occasion of Diwali. We should also make them happy by giving Diwali Balakara first.

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்

கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

Reasons to celebrate Diwali

 Krishna kills and destroys the monster named Narakasura who cannot bear his cruelties. At that moment Narakasura asks for a boon. That boon is that the people should celebrate this day happily ever after, the day of my death, the evil one who committed many atrocities. Diwali is considered to be the celebration celebrated on that day by people rejoicing in the destruction of an evil person.


பெயர்க் காரணம்

‘தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு. ’ஆவளி‘ என்றால் வரிசை.

வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது . அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.

Name reason

 Deepam means light, lamp. 'Avali' means sequence. Diwali is a festival of lighting, dispelling darkness and giving light. It is believed that Paramatma resides in the lamp and Jivatma resides in the fire and gives grace. There is some darkness in everyone's mind. Something like ego, jealousy, headstrongness should be removed. An evil character should be burnt

புராணக் கதைகளின் படி நரகாசுரனின் நிஜப்பெயர்

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

Narakasura's real name according to mythology

 Narakasura's real name is Bauman. Thirumal was born to Bhumadevi when he incarnated as Varaha and pierced the earth to destroy the Asuras. As he was born during the Asura Vata, the Asura nature has become natural for him. Naran means man. He was called Narakasura as he was full of evil despite being human. The name is Narakasuran.

இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள்கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

Various stories are told about how this Diwali came about. There was a demon named Narakasura. He used to give various sufferings to gods and people.

இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

Knowing this Maha Vishnu wanted to kill him. But he was born to Mother Earth. He was blessed with the ability to be killed by none other than his mother. So Maha Vishnu did a trick. He fought with Narakasura.

அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

He shot an arrow at Lord Vishnu. This arrow struck him and he fell down as if fainting. Seeing this, Sathya Bhama got angry and challenged Narakasura to battle. He fought with Satya Bhama not realizing that he was an incarnation of the earth. He fell victim to mother's arrow.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

Only then did he know that Satyabama was his mother. Then he said to him, Mother, I should stand in people's minds on this day of my passing away. He prayed that the Gods and the people freed from my grip should celebrate this day by offering sweets and bursting firecrackers.

மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

Mahavishnu and Satyabama gave him a boon. Diwali is celebrated on the day Narakasura disappeared and the day of rejoicing, Rama's return to Ayodhya after defeating Ravana and retrieving Sitapirati is celebrated as Diwali. Diwali is mentioned for the first time in Valmiku Ramayana.

ஸ்கந்தபுராணத்தின் படி, சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.

According to the Skandapurana, Shakti, who was angry with Shiva on one occasion, felt the grace of Shiva and merged into Shiva by fasting for 21 days. At the end of such a fast, Lord Adhanareeswarar accepts that Shiva is half his power. Thus, it is said that Diwali commemorates the auspicious day when the man and the woman are united.

தீபாவளியின் பெருமை

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.

Pride of Diwali

 Although there are many festivals throughout the year, Diwali has a special feature. The special thing is that on that day it is necessary to take oil bath, wear new clothes and light the lamp to celebrate without discrimination of rich and poor.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர். தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.

way to celebrate

 Everyone wakes up early on Diwali. Every senior member of the household wears a nalangu (mixture of turmeric and lime) on his feet. Bathe in hot water on Diwali.

வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள். தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன் என்றால் நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.

Belief that Ganga is in hot water. Ganga will wash away our sins. On Diwali you should bathe with oil. It is the custom of some people to boil omam and pepper in ghee. People dress up in new clothes and enjoy bursting firecrackers. Because it is Naragasura's memorial day, so we are spending it in defilement.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Happy Diwali everyone

Post a Comment