ஹைக்கூ போட்டி எண் : 107ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ :-
1. மலைக் குடியிருப்பு
அழகாகக் காட்சியளிக்கிறது
தேயிலைத் தோட்டம்
இரா.வேணு கோபாலகிருஷ்ணன்
2. மலைகள்
ஆங்காங்கே தெரிகின்றன
ஓட்டு வீடுகள்
சுஜாதா அருணாச்சலம்
3. பலவண்ண வீடுகள்
மலையை அழகுபடுத்துகின்றன
நீண்ட வானவில்
வ பரிமளாதேவி
4. தேயிலை பறித்தல்
அடிக்கடி நிகழ்கின்றது
யானையின் அட்டகாசம்
சங்கர்குரு பழனிச்சாமி
5. அழகிய வீடுகள்
மலையை மறைத்திருக்கின்றன
காலைப் பனிமூட்டம்
கோவை ஆறுமுகம்
6. அடுக்குமாடி வீடுகள்
உயர்ந்து நிற்கின்றன
பசுமைப்படர்ந்த மலைகள்
இளந்தை சேது
7. ஏறுவரிசையில் வீடுகள்
சலிக்காமல் சுற்றுவரும்
மலைத் தேனீக்கள்
ஆ.முருகேசுவரி
8. மலைகளில் வீடுகள்
அதிகமாகிக்கொண்டு இருக்கிறது
காடுகள் அழிப்பு
பஞ்சநாதன் சின்னா
9. மலையின் அடிவாரம்
நிறைந்து விட்டது
குடியிருப்புப் பகுதி
ஓசூர் மணிமேகலை
10. மலைச்சரிவில் வீடுகள்
மெல்ல குறைந்து கொண்டே வருகின்றன
தேயிலைத் தோட்டங்கள்
சுமி முருகன்
11. படிமுறை விவசாயம்
தேயிலைத் தோட்டம் பலனளிக்கிறது
சூடுபறக்கும் ஏற்றுமதி
விஜயா குமரன்
13. மலையில் குடியிருப்பு
நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
சுற்றுச்சூழல் மாசுபாடு
ப.சொக்கலிங்கம்
14. மலையகத்தில் விவசாயம்
பழமையாக இருக்கிறது
வாசலில்லா குடியிருப்புகள்
செல்வராஜா கிருஸ்ணகுமாரன்
15. மலை வீடுகள்
ஆரோக்கிய வாழ்வை தருகின்றன
தூய்மையான காற்று
மங்கையர்க்கரசி
16. மலைமீது வீடுகள்
பார்த்து இரசிக்கும்படி உள்ளது
அடிவாரத்தில் விவசாயம்
செம்போடை சோழன்
17. சுற்றுலாத் தளம்
மனதை ஈர்க்கிறது
தேயிலைத் தோட்டம்
கலாராணி லோகநாதன்
18. மலைப் பிரதேசம்
பெருகிக் கொண்டே இருக்கின்றன
குடியிருப்புப் பகுதிகள்
கோவை.லிங்கா
நடுவர் : கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
Post a Comment