ஹைக்கூ - Hykoo

 


ஹைக்கூ போட்டி எண் : 106ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ :-


1. சீறிவரும் அலைகள்

மணல் தொட்டதும் அமைதியாகி விடுகின்றன

மீன்பிடிப் படகுகள்

          பிரேமா ரமணி


2. கரைதொடும் அலைகள்

கால்தடம் நிரப்ப முயலும்

வெள்ளை நுரைகள்

          நாகலெட்சுமி இராஜகோபாலன்.


3. கரை தொட்ட அலை

வேகமாகத் புரள்கிறது

வளை தப்பிய நண்டு

        முனைவர் கண்மணி கண்ணன்

                          

4. கடலுள் செல்லும் நண்டுகள்

மீண்டும் கரைக்குத் திரும்பும்

அலைகள்

          ரவிஜி


5. அலையில் நுரை

அதிகமாக இருக்கின்றது

கடலில் மாசு

         சங்கர்குரு பழனிச்சாமி


6. சீற்றத்துடன் கடலலை

கரையை நோக்கி வருகிறது

சூராவளிப் புயல்

               ப.சொக்கலிங்கம்


7. கடலின் அலை

வந்து வந்து செல்கிறது

கலங்கரை விளக்கு வெளிச்சம்

         கு.கதிரேசன்


8. பாறையில் மோதியஅலை

வேகமாய் மேலே எழும்புகிறது 

 மீனுடன் பறவை

           கோவை ஆறுமுகம்


9. அலையின் நுரை

மணலில் பதியும்

பாதச்சுவடுகள்

            சோ.ஸ்ரீதரன்


10. கடல் அலை

மேல் எழும்பி விழுகிறது

சுறா மீன்

           பா.இராமர் 


11. பாறையிடுக்கில் நண்டு

பதுங்கி இருக்கிறது

இரைதேடும் நாரை

        தாழை.கு.சக்திவேல்


12. அலைமேல் நுரை

கரைக்கு வந்து செல்கின்றது

முட்டையிடும் ஆமை

          ம.ஞானசம்பந்தன்


13. சுடுமணல்

அலையடித்து ஈரமாகிறது

உலர்ந்த மீன் வலை

           நிஸ்வா ஸலாம்


14. மணல் வீடு

கொஞ்சம் கொஞ்சமா கரையும்

அலைகள்

        சுதாகர் செந்தூரான்


15. கடல் அலை

காலினைச் சுரண்டிச் செல்கிறது

கடற்கரை நண்டு

          சாக்கை.பொன்னழகு


நடுவர் : கவிஞர் கவி நிலா மோகன் 

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 

0/Post a Comment/Comments