#புத்தாண்டே_வருக
எண்ணங்கள் யாவையும்
வண்ணங்களாய் மாற்றி
வசந்தம் தந்திட வா
இழந்த இன்பங்களை
மீட்டெடுத்துத் தந்து
இன்னிசை மீட்டிட வா
தோல்விகளால் துவண்டு
மனம் வருந்தி வாழ்ந்திடாமல்
நல்வழி காட்டிட வா
வலிகளைத் தந்தாலும்
வலிமையோடு எதிர் கொண்டு
வளமை கண்டிட வா
இன்ப துன்பம் இரண்டையும்
ஒன்றாகப் பாவிக்கும்
மனப்பக்குவம் பகர்ந்திட வா
தடைக் கற்களைப்
படிக்கற்களாக்கி வென்றிட
தன்னம்பிக்கை விதைத்திட வா
ஆண்டின் இறுதி நாளின்
நிறைவு மணித்துளிகளை
கணக்கிட்டுக் கொண்டுள்ளேன்
பிறக்கவிருக்கும் புத்தாண்டு
தரவிருக்கும் வசந்தங்களை
வரவேற்று வளமை காண
புத்தாண்டே வருக
புத்தெழில் தருக
அனைவருக்கும் இனிய
#புத்தாண்டு_நல்வாழ்த்துகள் #2023
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment