Kirukkalgal

 


#டைம்பாஸ்_கிறுக்கல் 


அகத்தில் இருப்பது தானே

முகத்தில் தெரியும் என்கிறாய்

அரிதாரம் பூசிய யென் முகத்தில் 

அப்படியென்ன தெரிகிறது உனக்கு

கொஞ்சம் சொல்லேன் . . .


அகம் முழுதும் நிறைந்துள்ள

வலிகள் தெரிகிறதா !!!

இடைவேளை ஏதுமின்றி வரும் இன்னல்களால் துவண்டிருப்பது

தெரிகிறதா !!!

துரோகங்கள் சூழ் இவ்வுலகில்

துடிப்புடன் போராடுவது 

தெரிகிறதா !!!

இல்லை

ஏகாந்தப் பெரு வெளியில்

ஏக்கங்களோடு காத்திருப்பதாவது

தெரிகிறதா !!!

அப்படியென்ன தான் தெரிகிறது . . .


கண்கள் காட்டிக் 

கொடுத்துவிடுமோ யென்று 

ஜ-லைனர் மஸ்காரா 

அது போதாதென்று 

அகம் மறைக்க முகம்முழுதும் 

ஏதேதோ பூசியதோடு 

இதழ் நிறை புன்னகையை 

இழையோடச் செய்தல்லவா

வலிகளை மறைத்து 

வலிமை யோடு போராடிக்  

கொண்டிருக் கின்றேன் . ‌. .


அத்தனையும் மீறி எவ்வழியில் 

என் வலியை நீயறிந்தாயென 

கொஞ்சம் சொல்லிச் செல்லடா

என் மாயக் கண்ணா . . .


         *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments