மார்கழியில் என்ன செய்யலாம் - என்ன செய்யக்கூடாது?
மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.
மார்கழி மாதமென்றாலே அது தெய்வீகமான மாதம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார். அப்படி சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் மார்கழி மாதம். அதனால்தான் மார்கழி மாதத்தை தனுர் மாதம் என அழைக்கிறோம். தனுசு ராசி என்பது காலபுருஷ தத்துவத்தின் அடிப்படையில் 9வதாக வரும் ராசி. ராசிகளில் 5ம் இடமும் 9ம் இடமும் தெய்வங்களையும் - புண்ணியங்களையும் குறிக்கும் இடமாகும். எனவே 9ம் ராசியான தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமான மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதம்.
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை:
1. மற்ற மாதங்களை காட்டிலும் மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். இதனால் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது நன்மை தரும்.
2. மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், நிச்சயம், வெற்றிலைப் பாக்கு கை மாறுதல், பூ முடித்தல், பத்திரிகை அடித்தல், குல தெய்வத்திற்கு பத்திரிகை சமர்ப்பித்தல், பட்டு வாங்குதல், பொன்னுருக்கி விடுதல் போன்றவைகள் செய்யலாம்.
3. மொட்டை அடித்தல் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் 11வது மாதமாக மார்கழி மாதம் வந்தால் தாராளமாக செய்யலாம்.
4. சீமந்தம் போன்ற விஷயங்கள் செய்யலாம். கர்ப்பம் தரித்து 5ம் மாதமாக மார்கழி வந்தால் வளையல் அடுக்கும் நிகழ்வு செய்யலாம்.
5. சொத்துக்கள் வாங்குவது - ரிஜிஷ்ட்ரேஷன் செய்தல் போன்றவை செய்யலாம். புதிய வாகனம் வாங்கலாம்.
6. குழந்தை பிறந்து பெயர் சூட்டுதல், தொட்டிலில் இடுதல் செய்யலாம். புதிய கல்வி கற்க வித்யாரம்பம் செய்யலாம். உபநயனம் செய்யக்கூடாது.
7. பயணங்கள் மேற்கொள்ளலாம்.
8. கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. எனினும் வாடகை வீடாக இருந்தால் செய்யலாம்.
9. புதிய ஆடைகள் வாங்கலாம்... அணியலாம்.
10. ஏதேனும் ஆப்ரேஷன் செய்யும் சூழல் வந்தால் செய்யலாம். தவிர்க்கக் கூடாது.
மார்கழியில் செய்யக்கூடாதவை:
1. மார்கழி மாதத்தில் விதை விதைத்தல் கூடாது. உழவு செய்யக்கூடாது. மார்கழியின் பின் பகுதியில் கதிர் அறுக்கலாம்.
2. திருமணம் செய்தலும் கூடாது.
3. பொதுவாக கோவில் விழாக்களுக்கு முகூர்த்தக்கால் பதிப்பதில்லை.
4. புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது. அதாவது கும்பாபிஷேகம் செய்ய அனுமதி இல்லை.
5. காது குத்தும் விழாவும் பொதுவாக செய்வதில்லை.
மிக சிறப்பு சகோ வாழ்த்துகள்
ReplyDeletePost a Comment