#ஹைக்கூ போட்டி எண் 109ன் வெற்றிகள் ஹைக்கூ கவிதைகள்
1. மாலை வானம்
சிவந்து காணப்படுகிறது
கையில் மருதாணி
இரா.வேணு கோபாலகிருஷ்ணன்
2. பட்ட மரம்
பின்னால் தெரிகிறது
சூரியன்
பாரதி மைந்தன்
3. விடியலில் சூரியக் கதிர்கள்
மெல்ல மேலெழும்புகின்றன
கூட்டுப் பறவைகள்
மலர் மைந்தன்
4. செடியின் கிளைகள்
எல்லாப்பக்கமும் விரிந்துள்ளன
கதிரவன் ஒளிக்கதிர்கள்
'கண்மணி'-கண்ணன்
5. காலைச் சூரியன்
சுடுவது இதமாக இருக்கு
சுக்குக் காப்பி
'கவிச்சிகரம்' சாக்கை. பொன்னழகு
6. இலையுதிர் காலம்
மிகத் தெளிவாய் தெரிகின்றன
பறவைகளின் கூடுகள்
ஜெய வெங்கட்
7. அந்தி சூரியன்
மெல்ல மேகத்திற்குள்
மறைகிறது
வானில் பறவை
கவிஞர் கவிநிலா மோகன்
8. அந்திநேர சூரியக்கதிர்கள்
குறைந்துகொண்டே வருகின்றன
பட்டமரத்தில் பறவைகள்
கோவை.லிங்கா
9. காலை உதயம்
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது
விரியும் சூரியகாந்திபூ
மு.நாகராஜன்
10. வானில் முழுமதி
மனதைக் கவர்கிறது
கடற்கரையின் அழகு
கலாராணி லோகநாதன்
11. இளம்பரிதியின் ஒளிக்கீற்று
கருப்பாகத் தெரிகிறது
காய்ந்த மரம்
சக்தி அருளானந்தம்
12. சூரிய உதயம்
அழகாய் தோன்றுகிறது
குளத்தில் பிம்பம்
-சு.கேசவன்
13. பாலையில் நிலவு
பரந்து விரிந்து தெரிகிறது
மணற்காடு
பிரேமா ரமணி
14. மலரிதழில் பனித்துளி
பிரகாசமாய்த் தெரிகிறது
உதிக்கும் சூரியன்
ஏரூர் கவிமாமணி எம்.ரி.எம். அன்ஸார்.
15. இலையுதிர்த்த மரம்
சூரிய ஒளியில் தெரிகிறது
துளிர்க்கும் நம்பிக்கை
செண்பக ஜெகதீசன்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
நடுவர் : பாண்டிச்செல்வி கருப்பசாமி

Post a Comment