Hykoo - ஹைக்கூ

 


ஹைக்கூ போட்டி எண் 110ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்

1. கையேந்தும் நிலை

தற்போது உருவாகியுள்ளது

உணவுற்பத்தி வீழ்ச்சி

       செபா சவிரிமுத்து

2. கையேந்தும் நிலை

கொஞ்சமும் மாறவில்லை

குடிசை வீடுகள்

        ஆ.முருகேசுவரி

3. பசி பட்டினி

தீராமல் இருக்கிறது

கையேந்தும் நிலை

        சுஜாதா அருணாச்சலம்

4. வெள்ள நிவாரணம் 

அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

ஏரிகள் ஆக்கிரமிப்பு

         கோவை.லிங்கா

5.  கையேந்தும் காட்சி

மனதினை நெருடுகின்றது

வாடிய முகம்

        ம.ஞானசம்பந்தன்

6. கையேந்தும்  மக்கள்

காலமெல்லாம் தொடரும்

வறுமையை ஒழிக்க வாக்குறுதிகள்

         சு.கேசவன்

7. ஏழைகள் கையேந்தல்

அதிகரித்துக்கொண்டே போகிறது

நிலம் அபகரிப்பு

        கடலரசி

8. ஏந்தும் கைகள்

எதிர் பார்த்த படியே 

ஏழைகளின் நிலை

        ஐ.துஷ்யந்தன்

9. கையேந்தும் நிலை

அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

நாட்டின் கடன்

           கு.கதிரேசன்

10. மக்களின் எதிர்பார்ப்பு

அதிகரித்துக் கொண்டே வருகிறது

மனைகளின் விற்பனை

             சுமி முருகன்

11. ஏந்திடும் கரங்கள்

அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன

வயக்காட்டில் கட்டிடங்கள்

         மங்கையர்க்கரசி

12. பற்றாக்குறைகள்

எப்போதும் அதிகரிக்கின்றன

தவிக்கும் கைகள்

       முனைவர்  'கண்மணி'-கண்ணன்

13. கையேந்துவோர் கைகள் 

தெளிவாகத் தெரிகின்றன 

அரசியல்  வாக்குறுதிகள் 

          வ பரிமளாதேவி

14. உணவுப் பொட்டலம்

தீர்ந்து விடுகிறது

வாங்குவதற்குள் சக்தி

           சங்கர்குரு பழனிச்சாமி

15. வெள்ளப் பெருக்கு

கூடிக் கொண்டே போகிறது

ஆதரவற்றோர் கூட்டம்

             ஓசூர் மணிமேகலை

16. பொங்கல் இலவசம்

நீட்டப் படும் விரல்களில்

தேர்தல் மை

            Dr.சிவகாமசுந்தரி நாகமணி

17. இலவசக் கூட்ட நெரிசல் 

மெல்லக் குறைகிறது 

தண்ணீர் பீய்ச்சுதலின் அழுத்தம் 

            பாண்டிச்செல்வி கருப்பசாமி 

18. இலவச அறிவிப்புகள்

தேர்தலுக்கு முன் தருகிறார்கள்

ஓட்டுக்குப் பொருட்கள்

           மு.நாகராஜன்

19. தான தர்மங்கள்

பிரசாதம் வாங்கக் கையேந்துகின்றனர்

கோவிலில் பிச்சைக்காரர்கள்

            ஆ கணேசன்


அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 

நடுவர் : கவிநிலா மோகன் அவர்கள்.


0/Post a Comment/Comments