ஹைக்கூ போட்டி எண் : 111 ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. கடற்கரையில் கூட்டம்
குறைவாகவே இருக்கிறது
சுண்டல் விற்பனை
இரா.வேணு கோபாலகிருஷ்ணன்
2. மணல் வெளி
பரந்து உள்ளது
வான் பரப்பு
கு.கதிரேசன்
3. கார்மேகக் கூட்டம்
கடந்து செல்கின்றன
நாடோடிகளின் வாழ்வு
சுஜாதா அருணாச்சலம்
4. கருமேகக் கூட்டங்கள்
தெளிவாகத் தெரிகின்றன
வண்ணக் கூடாரங்கள்
வ பரிமளாதேவி
5. மழை மேகங்கள்
இடம் பெயர்கின்றன
கூடாரங்கள்
எ.சீனிவாச வரதன்
6. கடற்கரையில் மனிதர்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஓடுகின்ற கடல் நண்டுகள்
பாண்டிச்செல்வி கருப்பசாமி
7. மக்கள் கூட்டம்
கலையத் தொடங்குகிறது
வானில் மேகத்திட்டு
முனைவர் 'கண்மணி'-கண்ணன்
8. விண்ணில் மேகக்கூட்டம்
மெதுவாக நகருகிறது
கடலில் படகு
பி.ஸ்.நாகராஜன்
9. மாலைக் கதிரொளி
சட்டெனக் குறைகிறது
கடற்கரையில் கூட்டம்
கலாராணி லோகநாதன்
10. கடற்கரையில் நண்டுகள்
அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றன
குழந்தைகள் கூட்டம்
குறிஞ்சி நைனாமுகம்மது
11. கார் மேகம்
திரண்டு நிற்கிறது
கடற்கரையில் கூட்டம்
Dr.சிவகாமசுந்தரி நாகமணி
12. வானில் மேகங்கள்
உற்றுப் பார்த்துச் செல்கின்றன
கூடுசெல்லும் பறவைகள்
செண்பக ஜெகதீசன்
13. அதிகாலைப் பொழுது
இருள் சூழ்ந்து இருக்கிறது
அகதியின் வாழ்வு
அ.நாராயணசாமி
14. ஏழைகளின் அவலம்/
அதிகரித்து கொண்டே இருக்கின்றது
இயற்கை சீற்றம்
கே.கல்பனா
15. நாடோடி வாழ்க்கை
பழக்கம் ஆகிவிட்டது
கடற்கரையில் உறக்கம்
மு.நாகராஜன்
16. மேக கூட்டங்கள்
நிலையாக இல்லை
நாடோடிகளின் வாழ்க்கை
கலைவாணி சுரேஷ்பாபு
17. மேகமும் கடற்பரப்பும்
அருகருகே தெரிகின்றன
நாடோடிகள் கூடாரங்கள்
இரமணி ராஜன்
18. வானில் மேகம்
ஓய்வு கொள்கிறது
நாடோடிக் கூட்டம்
நாஞ்சில் கவிவளன்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
நடுவர் : கரு.கிருஷ்ணமூர்த்தி
Post a Comment