ஹைக்கூ போட்டி எண் 116ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. கல்பொறுக்கிய அரிசி
முதியோரின் பசி தீர்க்கிறது
மேய்கின்ற கோழி
செ மூ வேடியப்பன்
2. சேவலின் கண்கள்
அங்கும் இங்கும் அசைகின்றன
பாட்டியின் கைகள்
பா.இராமர்
3. களிமண் வீடு
காற்றோட்டமாக இருக்கிறது
கட்டிய பருத்திச்சேலை
Dr ஜலீலா முஸம்மில்
4. சேவலின் பார்வை
நிலைத்து நிற்கின்றது
பாட்டியின் வறுமை
மகேஸ்வரி கிருஷ்ணசாமி
5. வாங்கிய ரேசன் அரிசி
வீடு வந்து சேர்கிறது
வளர்த்த சேவல்
அப்துல் ஹக்கீம்
6. புடைக்கும் அரிசி
பொறுக்கத் தயாராகிறது
கொண்டைச் சேவல்
ம.பழனிச்சாமி
7. புடைக்கும் அரிசி
விரைவில் சமைக்கப்படும்
நாட்டுச் சேவல்
முனைவர் 'கண்மணி'-கண்ணன்
8. வீட்டின் தூண்
இடது பக்கம் சாய்ந்துள்ளது
சேவலின் கொண்டை
ஜெ. தேவதாஸ்
9. கொண்டைச் சேவல்
மனதைக் கவர்கிறது
தரைமொழிகிய கூரைவீடு
ஜெய வெங்கட்
10. சிதறிய தானியம்
நிறைந்து விடுகிறது
கோழியின் வயிறு
Dr.சிவகாமசுந்தரி நாகமணி
11. அடுப்பில் உலை
முறத்தின் அரிசிக்குக் காத்திருக்கும்
பசியோடு சேவல்
நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்
12. கூரை வீடுகள்
அரிதாகிக் கொண்டே போகின்றது
கூவும் சேவல்கள்
மருதமுனை ஜாபிர்
13. புடைக்கும் முறம்
மேலும் கீழுமாக ஆடும்
சேவலின் பார்வை
கவிதா அசோகன்
14. வீட்டின் தூண்கள்
வளைந்து காணப்படுகின்றன முதியவர்களின் முதுகெலும்பு
கி.புஷ்பராஜ்
15. அரிசியில் கல்
புடைக்க புடைக்க வருகிறது
பசியோடு சேவல்
மு.நாகராஜன்
16. புடைத்த அரிசி
ஒன்றொன்றாய் சிதறுகிறது
சேவல் கொரிக்கையில்
கலைவாணி சுரேஷ்பாபு
17. அரிசியில் புழு
வேகமாக ஓடுகிறது
கொத்தும் சேவல்
தாழை கு சக்திவேல்
18. முறத்தில் அரிசி
புடைக்கையில் பறந்து விழுகின்றது
தரையில் நெல்
சங்கர்குரு பழனிச்சாமி
19. அரிசியில் கற்கள்
தெளிவாய்த் தெரிகின்றன
வறுமைக் கோடுகள்
செட்டிப்புலம் பி.எஸ்.மணி
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
நடுவர் : ரேணுகா ஸ்டாலின்
Post a Comment