ஹைக்கூ போட்டி எண் 114ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. கடவுள் பொம்மை
சிரித்தபடி இருக்கிறது
விற்பவரின் முகம்
சாண்டில்யன் விவேகானந்தன்
2. கைக் குழந்தை
இடுப்பில் பத்திரமாய் இருக்கிறது
விற்பனைப் பணம்
முனைவர் 'கண்மணி'-கண்ணன்
3. சாமி பொம்மைகளின் பாரம்
பெரிதாகத் தெரியவில்லை
குழந்தையின் சுமை
பாண்டிச்செல்வி கருப்பசாமி
4. விற்காத பொம்மை
அப்படியே இருக்கின்றது
வறுமை
மலர் மைந்தன்
5. தாயின் சுமை
தன்னம்பிக்கை ஊட்டுகிறது
பொம்மைகளின் விற்பனை
முனைவர் கவியருவி ஜோதிபாரதி
6. சிலையான கடவுள்
ஏழைப்பெண்ணிற்கு படியளக்கும்
பொம்மை விற்பனை
சங்கர்குரு பழனிச்சாமி
7. கூடையின் பாரம்
குறையவில்லை
குழந்தையின் பசி
சக்தி அருளானந்தம்
8. தலைச்சுமை
இறக்கி வைக்க முயவில்லை
இடுப்பிலழும் குழந்தை
ஜெய வெங்கட்
9. பொம்மைக் கூடை
விற்காமல் வீடு வரும்
குபேரனுடன் வறுமை
நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்
10. கூடை பாரம்
குறைய குறைய கூடுகிறது
விற்பனையாளர் மகிழ்ச்சி
வ பரிமளாதேவி
11. களிமண் பொம்மை
ஒப்பனையின்றி அழகாகக் காணப்படும்
தாயின் புன்னகை
கவிதா அசோகன்
12. கடவுள் சிலைகள்
பார்ப்பதற்கு அழகாய் இருக்கின்றன
தாய் சேய் முகங்கள்
சோ.ஸ்ரீதரன்
13. சிறுமியின் அழுகை
குறைவதாகத் தெரியவில்லை
தாயின் சுமை
முல்லை நிரோயன்
14. தலைமேல் கடவுளர்
மகிழ்வுடன் சுமக்கின்றாள்
குழந்தையினைத் தாய்
ம.ஞானசம்பந்தன்
15. கூடையில் சாமிசிலை
தனியாக பிரிந்து கிடக்கும்
சுமந்து வந்த சும்மாடு
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
16. பொம்மை வியாபாரம்
களை கட்டுகிறது
கோயில் திருவிழா
ப.சொக்கலிங்கம்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
நடுவர் : கவிஞர் கவி நிலா மோகன் அவர்கள்

நனி நன்றி
ReplyDeleteஉளமார்ந்த நன்றி
மனம் நிறைந்த நன்றி
நெஞ்சார்ந்த நன்றி
நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்
Post a Comment