#யாதுமாகிய_பெண்
பிரம்மனின் படைப்பில்
பேராற்றல் கொண்டவள்
உன்னையும் என்னையும்
உயிர்ப்பிக்க வந்தவள்
முடங்கிக் கிடக்கும்
முயற்சிக்கு வித்து அவள்
முன்னேற்றப் பாதையில்
ஆற்றல்மிகு சக்தியவள்
பூகம்பம் வந்தாலும்
பூப்போல மலர்பவள்
பொல்லாங்கு கண்டாலோ
புயலாகி எரிப்பவள்
அறியாமை இருளகற்றி
அகிலத்தைக் காப்பவள்
தடைகளைத் தகர்த்தெறிந்து
தலைநிமிர வைப்பவள்
ஊர்தூற்றி ஒதுக்கினாலும்
பார்போற்ற உயர்பவள்
சூதுவா தழித்திடும்
சூட்சுமம் அறிந்தவள்
பெண்மையின் உன்னதம்
ஆண்மைக்கு உரைப்பவள்
தன்னிகரில்லா அன்பை
தரணியில் விதைப்பவள்
சதா"ரணப்பட்ட மனதைத் தேற்றி
சாதாரணமாய் கடப்பவள்
வேதனை சோதனைகளைக்
கடந்து - சாதனைகள் புரிபவள்
துணிவைத் துணையாக்கி
துயரங்களைத் துரத்துபவள்
வலிகளைத் தாங்கி
வலிமையோடு போராடுபவள்
கருவறை தொடங்கி
கல்லரை வரையிலும்
கண்களில் கருணையும்
நெஞ்சத்தில் அன்பும்
தன்னலமில்லா உழைப்பும்
தந்து எதிலும் முதலானவள்
உலகில் யாதுமானவள் பெண் . . .
- 2முறை
ரேணுகா ஸ்டாலின்
Post a Comment