சரித்திரம் போற்றும் சட்டமேதை
அண்ணல் அம்பேத்கார் பிறந்ததினம் இன்று
பகுத்தறிவு தந்திரங்களை
மந்திரங்களாய் ஓதி
மக்கள் மனதில் ஒலிக்கச் செய்த
அகங்காரம் இல்லா ஓங்காரம் . . .
பட்டங்கள் பல பெற்று
சட்டங்களை கற்றுத் தெளிந்து
நல் திட்டங்களாய் உருவாக்கிய
உலகோர் போற்றிப் புகழும்
உயர் உன்னதம் . . .
அட்டையாய் உழைப்பை
உறிஞ்சும் முதலாளிகளிடம்
அடிமைப்பட்டு அறியாமையில்
மூழ்கியோரை மீட்டெடுக்க
சட்டப் புத்தகத்தில்
புது சாசனம் எழுதி -
சாமானிய மக்களைக் காக்க
வந்த சட்ட மேதை . . .
மனித பாகுபாடுகளைக்
களைந்து சமத்துவ சக்கரத்தை
சுழலச் செய்த சூத்திரம் . . .
பேதைகளாய் வாழ்ந்த மக்களை
மேதைகளாய் உருவாக்க
பாடுபட்ட மனிதம் போற்றும்
மங்கா புகழ்மிக்க மாமேதை . . .
பெண்ணடிமை ஒழித்து
பேரின்பம் கண்டவர் . . .
தீண்டாமைக்கு தீமூட்டி
திசை எங்கும் போற்றப்பட்டவர் . . .
பாரத தேசத்தின்
பட்டை தீட்டிய வைரம்
அகில மக்களை பண்படுத்திய
ஆற்றலின் அடையாளம் . . .
அண்ணல் அம்பேத்கர் புகழ்
என்றென்றும் வாழிய வாழியவே . . .
ரே.ஸ்.சபரிஸ்ரீ கௌசல்யா
VII - th Std
நா.சு.வி.வி.மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளி, பட்டிவீரன்பட்டி.

Post a Comment