ஹைக்கூ - Hykoo

 


ஹைக்கூ போட்டி எண்  120ன் ஹைக்கூ வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்

1. ஏர் முனை மிகவும் 

கூர்மையாக உள்ளது 

விவசாயியின் பார்வை 

            கி.புஷ்பராஜ் 

2. விவசாயியின் பெருமை

மங்கிக் கொண்டு வருகிறது

கலப்பை உழவு

            சிங்கை கார்முகிலன்

3. ஏர் சுமக்கும் உழவன்

தன்னந்தனியாக

வானில் அந்திச்சூரியன்

              Dr ஜலீலா முஸம்மில் 

4. உழுத கலப்பை

உடலோடு ஒட்டிய படியே

வியர்வைத் துளிகள்

            ஐ.துஷ்யந்தன்

5. காலைக் கதிரவன் 

பிரகாசமாக இருக்கும் 

உழைப்பாளியின் எதிர்காலம் 

             ஜெ.தேவதாஸ்

6. விடியலில் சூரியன் 

நிலத்தில் விழுகிறது 

உழைக்கும் விவசாயியின் வியர்வைத்துளி 

              ச.இராஜ்குமார்

7. ஏரில் பூட்டிய காளைகள்

பணி முடிந்து அவிழ்க்கப்படும்

உழவனின் முண்டாசு

               'கண்மணி'-கண்ணன்

8. ஏர்க் கலப்பை

எதற்கெனத் தெரியாமல் வளரும்

இளைய தலைமுறை

          செண்பக ஜெகதீசன்

9. உழவனின் ஏர்கலப்பை 

சிதைந்து காணப்படுகின்றன

நீரில்லா நிலம்

                    ச.லதாதேவி

10. உழவுத் தொழில்

முதல் இடம் பிடிக்கும்

அழிவுப் பட்டியல்

            தமிழ் தம்பி 

11. ஏர்கலைப்பை விவசாயம் 

மறைந்து வருகின்றன

விளை நிலங்கள்

              மலர் மைந்தன்

12. ஏருக்கு கலப்பையுடன் உழவன்

சட்டென நினைவில் நிழலாடும்

போருக்கு கதையுடன் வீரன்

               பொம்மிடி மோகன்தாஸ்

13. விவசாயியின் மனம்

கொஞ்சமும் தளரவில்லை

வண்டியிழுக்கும் மாடு

               பா. இராமர் 

14. வளைந்த ஏர்

தலை நிமிர வைக்கிறது

விவசாயியின் உழைப்பு

          கவித்தென்றல் சௌ.நாகநாதன்

15. கடன் சுமை

கவலை அளிக்கிறது

குறைவான விளைச்சல்

         வே‌.சுசீலா

16. ஏரில் பூட்டிய காளைகள் 

காலையில் வேகமாக வரும் 

வானிலே உதயசூரியன் 

                 கவிநிலா மோகன்

17  கதிரவன் வெளிச்சம்

மங்கலாகத் தெரிகிறது

முதியவர் பார்வை

            அ.நாராயணசாமி

18. ஏர் உழவன் 

தன் கடமையில் தவறுவதில்லை 

தினந்தோறும் சூரியன் 

           அன்பு துரைசாமி

19. உழாத நிலம்

வெடிப்புகளாய் உள்ளது

உழவனின் பாதம்

           ச.ரமேஷ் பாபு

20. ஏரோட்டும் விவசாயி

விடிந்ததும் வயலுக்குள்

சுற்றித்திரியும் பாம்பு

           ஆ.முருகேசுவரி


நடுவர் : ரேணுகா ஸ்டாலின்

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 

0/Post a Comment/Comments